தென்னாப்பிரிக்காவில் ஏற்றுமதியான மேட்-இன்-இந்தியா Hyundai Exter
published on செப் 23, 2024 06:48 pm by dipan for ஹூண்டாய் எக்ஸ்டர்
- 71 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஹூண்டாயின் 8 -வது மாடல் எக்ஸ்டர் ஆகும்.
-
2023 ஆண்டு இந்தியாவில் மைக்ரோ எஸ்யூவி பிரிவில் எக்ஸ்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
-
எக்ஸ்டரின் சுமார் 1 லட்சம் யூனிட்கள் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
-
புரொஜெக்டர் ஹெட்லைட்கள், எல்இடி டெயில் லைட்ஸ் மற்றும் 15-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் ஆகியவற்றைப் பெறுகிறது.
-
8-இன்ச் டச் ஸ்கிரீன், சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி ஆகியவை உள்ளன.
-
6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் வெஹிகிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் (VSM) ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் எக்ஸ்டர் தென்னாப்பிரிக்காவில் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. கிராண்ட் i10 நியோஸ், ஆரா, i20, i20 N லைன், வென்யூ, வென்யூ N லைன் மற்றும் பிரீ ஃபேஸ்லிப்டட் அல்கஸார் ஆகிய கார்களுக்கு பிறகு ஏற்றுமதி செய்யப்படும் 8 -வது ஹூண்டாய் மாடலாக இது இருக்கும். எக்ஸ்டெர் பிரத்தியேகமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டது மற்றும் கொரிய கார் தயாரிப்பு நிறுவனம் மைக்ரோ-எஸ்யூவியின் 996 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வாகன ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக ஹூண்டாய் நிறுவனம் உள்ளது. 2004 ஆம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்காவிற்கு கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. தென்னாப்பிரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் எக்ஸ்டர் காரில் என்ன இருக்கும் என்பதை பார்ப்போம்:
விலை
தென்னாப்பிரிக்கா-ஸ்பெக் ஹூண்டாய் எக்ஸ்டர் (தென் ஆப்பிரிக்க ராண்டில் இருந்து தோராயமாக கன்வெர்ட் செய்யப்பட்டது) |
இந்தியா-ஸ்பெக் ஹூண்டாய் எக்ஸ்டர் |
R2,69,900 முதல் R3,34,900 வரை (ரூ. 12.95 லட்சம் முதல் ரூ. 16.07 லட்சம்) |
ரூ.6 லட்சம் முதல் ரூ.10.43 லட்சம் |
விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம்-க்கானவை
தென்னாப்பிரிக்க எக்ஸ்டரின் அடிப்படை மாடல் இந்திய பதிப்பை விட கிட்டத்தட்ட ரூ.7 லட்சம் விலை அதிகம். இருப்பினும் ஃபுல்லி லோடட் வேரியன்ட்களின் விலை வித்தியாசம் ரூ.5.5 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
தென்னாப்பிரிக்காவில் ஹூண்டாய் எக்ஸ்டர்: ஒரு சிறிய பார்வை
வடிவமைப்பைப் பொறுத்தவரை, தென்னாப்பிரிக்க-ஸ்பெக் எக்ஸ்டர் புரொஜெக்டர் அடிப்படையிலான ஹாலோஜன் ஹெட்லைட்கள் மற்றும் H-வடிவ LED DRL -களுடன் வருகிறது. க்ரில் பகுதி இந்திய மாடல் போல இல்லாமல் பிளாக் கலர் க்ரோம் டிஸைன் கொடுக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க எக்ஸ்டர் 15-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் H-வடிவ எலமென்ட்கள் LED டெயில் லைட்களுடன் வருகிறது. இது சில்வர் முன் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்கள் உடன் வருகிறது.
உட்புற கலர் ஆப்ஷன்களும் இந்திய-ஸ்பெக் மாடலை போலவே இருக்கும். இது ஃபேப்ரிக் சீட்களுடன் வருகிறது.
இது 8-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒரு செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் பின்புறக் காட்சி கேமரா ஆகியவை உள்ளன.
தென்னாப்பிரிக்க-ஸ்பெக் ஹூண்டாய் எக்ஸ்டரில் 1.2-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (83 PS/114 Nm) மட்டுமே கிடைக்கும். 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு ஏஎம்டி (ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மூலம் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் ஆப்ஷன் உடன் வரலாம். மறுபுறம் இந்திய மாடல் மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே CNG ஆப்ஷன் உடன் வருகிறது.
மேலும் படிக்க: சன் ரூஃப் உடன் Hyundai Exter -ன் புதிய வேரியன்ட்கள் அறிமுகமாகியுள்ளன
ஹூண்டாய் எக்ஸ்டர் போட்டியாளர்கள்
இந்தியா-ஸ்பெக் ஹூண்டாய் எக்ஸ்டர் டாடா பன்ச், நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர், மற்றும் சிட்ரோன் சி3 உடன் போட்டியிடுகிறது, மேலும் சப்-4மீ கிராஸ்ஓவர் கார்களான டொயோட்டா டெய்சர், மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: எக்ஸ்டர் AMT
0 out of 0 found this helpful