• English
  • Login / Register

சன் ரூஃப் உடன் Hyundai Exter -ன் புதிய வேரியன்ட்கள் அறிமுகமாகியுள்ளன

published on செப் 06, 2024 05:02 pm by dipan for ஹூண்டாய் எக்ஸ்டர்

  • 81 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த புதிய வேரியன்ட்கள் மூலமாக எக்ஸ்டரில் சிங்கிள் பேன் சன்ரூஃப் ரூ.46,000 வரை குறைவான விலையில் கிடைக்கும்.

Hyundai Exter gets new S Plus and S(O) Plus Variants

  • இந்த புதிய வேரியன்ட்களில் சன்ரூஃப் உள்ளது ஆகவே இந்த வசதி எக்ஸ்டருக்கு குறைவான விலையில் இப்போது கிடைக்கிறது.

  • எக்ஸ்டெர் எஸ்(ஓ) பிளஸ் விலை ரூ.7.86 லட்சம் மற்றும் எஸ் பிளஸ் ரூ.8.44 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • இரண்டு புதிய வேரியன்ட்களும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வருகின்றன. S(O) பிளஸ் மேனுவல் மற்றும் S பிளாஸ் AMT உடன் வருகிறது.

  • மற்ற வசதிகளில் 8-இன்ச் தொடுதிரை, செமி-டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் பின்புற வென்ட்களுடன் கூடிய மேனுவல் ஏசி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

  • பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் மற்றும் TPMS ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

  • ஹூண்டாய் எக்ஸ்டெர் காரின் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.10.43 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) இருக்கும்.

ஹூண்டாய் எக்ஸ்டர் -ன் வரிசையில் இப்போது புதிதாக இரண்டு S பிளஸ் (AMT) மற்றும் S(O) பிளஸ் (MT) என்ற இரண்டு புதிய வேரியன்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வேரியன்ட்களின் விலை விவரங்கள் பின்வருமாறு:

வேரியன்ட்

விலை

ஹூண்டாய் எக்ஸ்டர் S(O) பிளஸ் (MT)

ரூ.7.86 லட்சம்

ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ் பிளஸ் (ஏஎம்டி)

ரூ.8.44 லட்சம்

புதிய வேரியன்ட்களில் சன்ரூஃப் வசதி உள்ளது. இது 1.2-லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்களுடன் கிடைக்கிறது மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு AMT (ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) உடன் வருகிறது. இப்போது இந்த புதிய வேரியன்ட்களால் சன்ரூஃப் ஆனது மேனுவல் -க்கு ரூ.37,000 குறைவாகவும் மற்றும் AMT -க்கு ரூ.46,000 குறைவாகவும் கிடைக்கும்.

இந்த இரண்டு புதிய வேரியன்ட்களின் விவரங்களை பார்ப்போம்:

புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் S(O) பிளஸ் மற்றும் எக்ஸ்டர் S பிளஸ் வேரியன்ட்கள்

Hyundai Exter new S Plus and S(O) Plus Variants do not get a CNG option

புதிய எக்ஸ்டர் S(O) பிளஸ் வேரியன்ட் ஸ்லாட்டுகள் மிட்-ஸ்பெக் S(O) மற்றும் SX வேரியன்ட்களுக்கு இடையே விற்பனைகு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.7.65 லட்சம் மற்றும் ரூ.8.23 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியன்ட் ஆனது 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் (83 PS மற்றும் 114 Nm) 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்டர் S(O) பிளஸ் உடன் CNG பவர்டிரெய்ன் எதுவும் இல்லை.

புதிய எக்ஸ்டர் S பிளஸ் வேரியன்ட் மறுபுறம் மிட்-ஸ்பெக் S மற்றும் SX வேரியன்ட்களுக்கு இடையே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.8.23 லட்சம் மற்றும் ரூ.8.90 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியன்ட் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் (83 PS மற்றும் 114 Nm) வருகிறது. ஆனால் 5-ஸ்பீடு AMT (ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வேரியன்ட்டுடன் CNG ஆப்ஷன் இல்லை.

மேலும் படிக்க: ஹூண்டாய் எக்ஸ்டர் நைட் மற்றும் கிரெட்டா நைட் பதிப்புகளுக்கு இடையிலான முக்கிய வடிவமைப்பு வேறுபாடுகள்

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

Hyundai Exter Cabin

இந்த புதிய வேரியன்ட்களில் சேர்க்கப்பட்டுள்ள ஒரே வசதி சிங்கிள்-பேன் சன்ரூஃப் மட்டுமே ஆகும். 8-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் செமி-டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே ஆகியவை அவற்றின் ஒரிஜினல் டிரிமில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. ரியர் வென்ட்களுடன் கூடிய மேனுவல் ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ORVM -கள் (வெளிப்புற ரியர்வியூ மிரர்ஸ்) மற்றும் ஆல் பவர் விண்டோஸ் ஆகிய வசதிகளும் உள்ளன. S (O) பிளஸ் வேரியன்ட்டில் வழங்கப்படும் வசதிகளில் S பிளஸ் வேரியன்ட் எலக்ட்ரிக்கலி ஃபோல்டபிள் ORVM -கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பைப் பொறுத்தவரை இரண்டு வேரியன்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), அனைத்து சீட்களுக்கும் 3-பாயின்ட் சீட்பெல்ட்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை உள்ளன.

விலை மற்றும் போட்டியாளர்கள்

Hyundai Exter gets LED tail lights

ஹூண்டாய் எக்ஸ்டரின் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.10.43 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாடா பன்ச், மாருதி இக்னிஸ், நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர், சிட்ரோன் சி3 ஆகிய கார்களோடு மட்டுமில்லாமல் டொயோட்டா டெய்சர் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் சப்-4மீ கிராஸ் ஓவர்கள் உடனும் இது போட்டியிடும்..

விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம், (டெல்லி)

கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: ஹூண்டாய் எக்ஸ்டர் AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Hyundai எக்ஸ்டர்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience