ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனைக் கொண்ட 10 விலை குறைவான கார்கள்
published on மார்ச் 15, 2023 07:46 pm by rohit for மாருதி ஆல்டோ கே10
- 50 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தப் பட்டியலில் உள்ள கார்கள் அனைத்தும் குறைவான விலையில் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் (AMT) , ஆப்ஷனைக் கொண்டிருக்கின்றன. இது உங்கள் தினசரி நகரப் பயன்பாட்டை எளிதாக்குகின்றன.
இன்றைய காலகட்டத்தில், கார் என்பது உங்களை ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் வெறும் வாகனம் மட்டும் இருப்பதில்லை, அது உங்கள் இரண்டாவது வீடாகவும் உள்ளது. மக்கள் தங்கள் வாகனங்கள் பயணத்துக்கானவை என்பதைத் தவிர்த்து மேலும் சில தொழில்நுட்பங்களையும் மற்றும் வசதிகளையும் வழங்குவதாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். இன்றைய கார் வாங்குபவர்களின் விருப்பங்களில் ஒன்றாக ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்- பொருத்தப்பட்ட மாடல் உள்ளது. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் பல்வேறு வகைகளாக இருந்தாலும், பட்ஜெட்டுக்கு ஏற்ற கார்களில் நீங்கள் அதிகம் காணக்கூடியது AMT அல்லது ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆகும்.
நீங்கள் புதிய கார் வாங்க திட்டமிட்டால், ரூ.10 இலட்சத்திற்கும் குறைந்த விலையுள்ள, மிகவும் மலிவான ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்-பொருத்தப்பட்ட மாடல்களை இங்கே நீங்கள் காணலாம்:
மாருதி ஆல்டோ K10
-
எங்கள் சந்தையில் நீங்கள் வாங்கக்கூடிய மிகவும் மலிவான காரான அல்டோ K10 இல் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ்-பொருத்தப்பட்டுள்ளது.
-
என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக்குகளின் உயர்-ஸ்பெக் VXi மற்றும் VXi+ க்கு இரண்டு-பெடல் ஆப்ஷன்களை மாருதி (ஐந்து-வேக AMT) வழங்குகிறது.
-
இவற்றுக்கு ரூ.5.59 இலட்சம் முதல் ரூ.5.88 இலட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாருதி எஸ்-பிரெஸ்ஸோ
-
மாருதி குழுவில் மற்றொரு என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக்கான S-பிரெஸ்ஸோ , ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் பல அம்சங்களை பெறுகிறது.
-
ஹேட்ச்பேக்கின் முதன்மையான VXi (O) மற்றும் VXi+ (O) விற்கு ஐந்து-வேக AMT கியர்பாக்சை கார் உற்பத்தியாளர் வழங்கியுள்ளார்.
-
மாருதி ரூ 5.75 இலட்சம் முதல் ரூ 6.04 இலட்சம் விலையில் அவற்றை விற்கிறது.
ரெனால்ட் க்விட்
-
இந்தியாவில் ரெனால்டின் ஒரே ஹேட்ச்பேக்கான க்விட், இரண்டு பெடல் வெர்ஷனையும் பெறுகிறது.
-
உயர் டிரிம்களில் ஐந்து-வேக AMT ஆப்சனுடன் கூட அது வருகிறது: RXT மற்றும் கிளைம்பர்.
-
க்விட்-இன் ஆட்டோமெட்டிக் கார்கள் விலை ரூ.6.12 இலட்சம் முதல் ரூ.6.33 இலட்சம் வரை விற்கப்படுகின்றன .
மாருதி செலெரியோ
-
காம்பாக்ட் ஹேட்ச்பேக் ஸ்பேசில் மாருதியிடம் இரு மாடல்கள் உள்ளன, இரண்டுமே AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் வருகின்றன.
-
ஐந்து வேக AMT கியர்பாக்ஸ் உடன் செலெரியோ அதன் மிட்-ஸ்பெக் VXi மற்றும் ZXi கார் வகைளுடன், மேலும் அதன் முதன்மையான ZXi+ டிரிம் உடனும் வருகிறது.
-
செலெரியோ AMT யின் விலை வரம்பு ரூ.6.37 இலட்சம் முதல் ரூ 7.13 இலட்சம் வரை இருக்கும்.
மாருதி வேகன் R
-
67PS 1-லிட்டர் பெட்ரோல் மற்றும் 90PS 1.2-லிட்டர் பெட்ரோல் ஆகிய இரு இன்ஜின் ஆப்ஷன்களை வேகன் R பெறுகிறது – இரண்டிலும் ஐந்து-வேக AMT கியர்பாக்ஸ் தேர்வும் கிடைக்கிறது.
-
1 லிட்டர் வேகன் R-இன் மிட்-ஸ்பெக் VXi கார் மட்டும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் கிடைக்கிறது, பெரிய இன்ஜின் ஆப்ஷனை மூன்று உயர்-ஸ்பெக் கார்களில் (ZXi, ZXi+ மற்றும் ZXi+ DT) நீங்கள் பெறலாம்.
-
மாருதி, வேகன் R AMTயின் விலையை ரூ.6.53 இலட்சத்தில் இருந்து ரூ.7.41 இலட்சமாக நிர்ணயித்துள்ளது.
மேலும் படிக்க: 10 இலட்சத்திற்கும் குறைவான விலையுள்ள இந்த 10 கார்கள் தரநிலையாக ESCஐப் பெறுகின்றன
டாடா டியாகோ
-
ஐந்து-வேக AMT கியர்பாக்ஸ் ஆப்சனைப் பெறும் மற்றொரு காம்பாக்ட் ஹேட்ச்பேக் டாடா டியாகோ.
-
ஹேட்ச்பேக்கின் உயர்-ஸ்பெக்டு XTA, XZA+, மற்றும் XZA+ DT கார்களுக்கு டாடா இரண்டு பெடல் தேர்வை வழங்குகிறது.
-
டியாகோவின் கிராஸ் ஓவர் பதிப்பான டியாகோ NRG – அதே மாற்று கியர்பாக்ஸ் உடன் சிங்கிள் ஃபுல்லி லோடட் XZA காரில் உள்ளது
-
டியாகோ AMTக்கு டாடா ரூ. 6.87 இலட்சம் முதல் ரூ. 7.70 இலட்சம் வரை விலை நிர்ணயித்துள்ளது, டியாகோ NRG AMT -இன் விலை ரூ. 7.60 இலட்சம் ஆக இருக்கும்
மாருதி இக்னிஸ்
-
மாருதி இக்னிஸ்க்கு ஐந்து-வேக AMT கியர்பாக்சை வழங்குகிறது.
-
மிட்-ஸ்பெக் டெல்டா மற்றும் ஜீட்டா கார்களிலும் டாப்-ஸ்பெக் ஆல்ஃபா டிரிம்களிலும் அது இருக்கலாம்.
-
இக்னிஸ் AMT வேரியண்ட் விலை ரூ. 6.91 இலட்சம் முதல் ரூ. 8.14 இலட்சம் வரை கிடைக்கிறது.
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்
-
ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் கூடிய கிரான்ட்i10 நியோஸ் ஹீண்டாயின் மிக விலை குறைவான கார்.
-
மிட்-ஸ்பெக் மேக்னா, ஸ்போர்ட்ஸ் எக்சிகியூட்டிவ் மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரிம்ஸ் மற்றும் டாப்-ஸ்பெக் ஆஸ்டா கார்களிலும் ஐந்து-வேக AMT கியர்பாக்சுடன் மிட்சைஸ் ஹேட்ச்பேக்கை ஹீண்டாய் பொருத்தியுள்ளது.
-
இவை ரூ. 7.23 இலட்சம் முதல் ரூ. 8.46 இலட்சம் வரை விலையில் கிடைக்கின்றன.
தொடர்புடையவை: ஹூண்டாய் இந்தியா, GM இன் தலேகான் ஆலையை வாங்குவதற்கான டெர்ம் ஷீட்டில் கையெழுத்திட்டது
மாருதி ஸ்விஃப்ட்
-
மாருதி ஸ்விஃப்ட் க்கு அதன் மிட்-ஸ்பெக்VXi மற்றும் ZXi டிரிம்களுடன் டாப் -ஸ்பெக் ZXi+ மற்றும் ZXi+ DT கார்களுக்கும் ஐந்து வேக AMT கியர்பாக்சை வழங்குகிறது.
-
Prices for the Swift AMT range between Rs 7.45 lakh and Rs 8.98 lakh.
ஸ்விஃப்ட் AMT காரின் விலை வரம்பு 7.45 இலட்சம் முதல் ரூ 8.98 இலட்சம் வரை இருக்கிறது.
டாடா பன்ச்
-
டாடாவின் பன்ச் இந்தப் பட்டியலில் உள்ள ஒரே SUV யாகும், டியாகோவில் பார்த்த அதே ஐந்து வேக AMT கியர்பாக்சைப் பெற்றுள்ளது.
-
பேஸ்-ஸ்பெக் ப்யூருக்கான மைக்ரோ SUV ன் அனைத்து டிரிம்களிலும் (அட்வென்சர், அக்கம்பிளிஷ்டு மற்றும் கிரியேட்டிவ்) அது இருக்கலாம். பன்ச்-இன் கேமோ பதிப்பிலும் அது வழங்கப்படலாம்.
-
பன்ச்-இன் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் கார்களுக்கு ரூ.7.45 இலட்சம் முதல் ரூ.9.47 இலட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி
மேலும் படிக்கவும்: ஆல்ட்டோ K10 ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful