• English
  • Login / Register

ஹூண்டாய் எக்ஸ்டரில் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டு பாதுகாப்பு அம்சமாக கிடைக்கலாம்

published on மே 17, 2023 07:20 pm by tarun for ஹூண்டாய் எக்ஸ்டர்

  • 60 Views
  • ஒரு கருத்தை எழுதுக

வரவிருக்கும் மைக்ரோ எஸ்யூவி ஜூன் மாத இறுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Hyundai Exter

  ESC, VSM, ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் பர்க்லர் அலாரம் ஆகிய விருப்பங்களாக எக்ஸ்டர் அறிமுகப்படுத்தவுள்ளது.

  ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ISOFIX, ரியர் கேமரா, TPMS மற்றும் ஒரு டேஷ்கேம் ஆகியவை ஹையர் வேரியன்ட்களில் கிடைக்கும்.

  எலக்ட்ரிக் சன்ரூஃப், பெரிய டச்ஸ்கிரீன் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோ ஏசி ஆகியவை இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன்களுடன் இந்த கார் வருகிறது, இதில் சிஎன்ஜியும் வழங்கப்பட உள்ளது.

  எக்ஸ்ட்டரின் விலை ரூ.6 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் அதன் வரவிருக்கும் மைக்ரோ எஸ்யூவியான எக்ஸ்டர், ஆறு ஏர்பேக்குகளை கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் மைக்ரோ எஸ்யூவியின் மற்ற பாதுகாப்பு அம்சங்களையும் கார் நிறுவனம் விவரித்துள்ளது.

Hyundai Exter

ஆறு ஏர்பேக்குகளை கொண்ட முதல் சப்காம்பாக்ட் எஸ்யூவி எக்ஸ்டர் ஆகும். மீதமுள்ள அடிப்படை பாதுகாப்பு கருவிகளில் ESC (எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல்), VSM (வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல்), ஹில் அசிஸ்ட், 3-பாயிண்ட் சீட் பெல்ட்கள் மற்றும் ஐந்து சீட்டுகளுக்கான ரீமைண்டர்கள், EBD உடன் ABS மற்றும் பர்க்லர் அலாரம் ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க: ஹூண்டாய் எக்ஸ்டரின் வேரியன்ட் வாரியான இன்ஜின் கியர்பாக்ஸ் விருப்பங்களைப் பாருங்கள்

எஸ்யூவியின் ஹையர் வேரியன்ட்கள் ஹெட்லேம்ப் எஸ்கார்ட் ஃபங்க்ஷன், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், ISOFIX சைல்ட் சீட் மௌன்ட்ஸ், பின்புற டிஃபோகர், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் மொனிட்டரிங் அமைப்பு (TPMS) ஆகியவற்றைப் பெறும். டாஷ் கேமராக்கள் ஒரு பிரபலமான பொருளாக இருந்தாலும், ஹூண்டாய் அதை அதன் சிறப்பம்சங்களின் பட்டியலின் ஒரு பகுதியாக எக்ஸ்டர் உடன் வழங்கும், இது இந்த வேரியன்ட்டுக்கு முதன்மையானது. கம்ப்ர்ட் அம்சங்களைப் பொறுத்தவரை, ஹூண்டாய் எக்ஸ்டர் எலக்ட்ரிக் சன்ரூஃப், பெரிய டச்ஸ்கிரீன் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் ஆட்டோமேட்டிக் ஏசி ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hyundai Exter

ஹூண்டாய், எக்ஸ்டர் -ஐ 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன், மேனுவல் மற்றும் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் ஆகிய இரண்டு ஆப்ஷன்களுடன் களமிறக்க போகிறது. இது CNG கிட் ஆப்ஷனுடனும் கிடைக்கும். இது EX, S, SX, SX (O), மற்றும் SX (O) Connect என்ற ஐந்து டிரிம்களில் வழங்கப்படும்.

மேலும் படிக்க: சார்ஜ் செய்யும் போது தென்பட்ட ஹூண்டாய் கிரெட்டா EV

ஹூண்டாய் எக்ஸ்டர்-இன் விலை ரூ.6 லட்சமாக இருக்கும் (எக்ஸ்-ஷோரூம்) என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடா பன்ச், சிட்ரோன் C3 மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ், ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் போன்றவற்றுடன் போட்டியிடும்.

was this article helpful ?

Write your Comment on Hyundai எக்ஸ்டர்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience