2025, ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் கார்கள்
published on டிசம்பர் 31, 2024 08:22 pm by dipan for மாருதி இ vitara
- 75 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஏற்கனவே கான்செப்ட் வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட்ட சில கார்கள் உற்பத்திக்கு தயாராக உள்ள வெர்ஷன்களில் அறிமுகமாகும். மேலும் சில புதிய கான்செப்ட்கள் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
2025 -ஆம் ஆண்டு வாகன ஆர்வலர்களுக்கு ஒரு அற்புதமான ஆண்டாக இருக்கும் என்று தெரிகிறது. ஆண்டு முழுவதும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் கார்களின் விவரங்களை நாங்கள் ஏற்கனவே வழங்கியுள்ளோம். இங்கே எதிர்வரும் ஆண்டின் ஜனவரி மாதத்தில் அறிமுகமாகும் கார்களின் விவரங்கள் இங்கே. அவற்றின் முழுமையான பட்டியல் இங்கே:
மாருதி சுஸூகி இ விட்டாரா
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: ஜனவரி 17, 2025
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 22 லட்சம்
மாருதி அதன் முதல் எலக்ட்ரிக் காரான இ விட்டாரா -வின் டீஸரை ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. மேலும் இது வரவிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 ஆண்டில் காட்சிப்படுத்தப்படும் என்பதையும் ஏற்கெனவே உறுதிப்படுத்தியிருந்தது. உலகளவில் சுஸூகி இ விட்டாரா 49 kWh பேக் மற்றும் 61 kWh பேக் என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் வருகிறது. தோராயமாக 550 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது. இந்த செட்டப் இந்திய சந்தையிலும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே ஆகியவற்றை ஒன்று சேர்த்து இ விட்டாரா ஒரு இன்டெகிரேட்டட் டூயல் ஸ்கிரீன் செட்டப்பை கொண்டிருக்கும். இது ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகளுடன் வரும்.
ஹூண்டாய் கிரெட்டா EV
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: ஜனவரி 17, 2025
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.20 லட்சம்
கோனா EV நிறுத்தப்பட்டதை தொடர்ந்து ஹூண்டாய் கிரெட்டா இவி -யை அறிமுகப்படுத்த உள்ளது. பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் அதன் புதிய எலக்ட்ரிக் காராக கிரெட்டா EV -யை அதன் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) வடிவமைப்பை அப்படியே தக்க வைத்துக்கொள்ளும். ஆனால் EV என்பதை காட்டும் அப்டேட்களான குளோஸ்டு-ஆஃப் கிரில் மற்றும் ஏரோடைனமிக்ஸ் ரீதியாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் ஆகியவை கொடுக்கப்படலாம். பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் கிரெட்டா EV ஆனது சுமார் 400 கி.மீ தூரம் வரை கிளைம்டு ரேஞ்ச் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா சியரா (ICE மற்றும் EV)
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: ஜனவரி 17, 2025
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.11 லட்சம் (ICE) மற்றும் ரூ.20 லட்சம் (EV) வரை
2020 ஆண்டில் ஒரு கான்செப்ட் ஆகவும் பின்னர் 2023 ஆண்டில் மிகவும் தயாரிப்புக்கு முந்தைய பதிப்பாகவும் டாடா சியரா இருந்தது. இப்போது பிறகு பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் மற்றொரு தோற்றத்தை உருவாக்கத் தயாராக உள்ளது. சியரா EV ஆனது 60-80 kWh பேட்டரி பேக்கை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 500 கி.மீக்கு மேல் கிளைம்டு ரேஞ்சை வழங்குகிறது. இதற்கிடையில் ICE பவர்டு சியரா ஆனது புதிய 1.5-லிட்டர் 4-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் மற்றும் ஹாரியர் மற்றும் சஃபாரியில் இருந்து பெறப்பட்ட 2-லிட்டர் டீசல் இன்ஜின் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வர வாய்ப்புள்ளது.
டாடா ஹாரியர் EV
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: ஜனவரி 17, 2024
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.25 லட்சம்
2024 ஆண்டில் அடிக்கடி சோதனை செய்யப்படும் போது டாடா ஹாரியர் EV படம் பிடிக்கப்பட்டது. வரவிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் ICE-பவர்டு ஹாரியர் ஆனது சியரா EV உடன் அறிமுகமாகும். ஹாரியர் EV ஆனது டாடாவின் புதிய Acti.EV பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்படும் மற்றும் 500 கி.மீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்சை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்திக்கு தயாரான மாடலில் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) ஆகியவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எம்ஜி சைபர்ஸ்டர்
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: ஜனவரி 17, 2025
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.80 லட்சம்
எம்ஜி சைபர்ஸ்டர் இவி கார் எம்ஜியின் பிரீமியம் MG செலக்ட் அவுட்லெட்கள் மூலம் விற்கப்படும் முதல் மாடலாக இருக்கும். 2025 ஜனவரி -யில் நடைபெறவுள்ள பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்படும். இந்தியா-ஸ்பெக் மாடல் 77 kWh பேட்டரி பேக்கை கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. WLTP-கிளைம்டு 444 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது. இது 510 PS மற்றும் 725 Nm இன்டெகிரேட்டட் அவுட்புட்டை கொடுக்கும் டூயல்-மோட்டார் செட்டப் கொடுக்கப்படும். ட்ரை-ஸ்கிரீன் டேஷ்போர்டு செட்டப், 6-வே எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மெமரி ஃபங்ஷன் உடன் கூடிய ஹீட்டட் சீட்கள் மற்றும் 8-ஸ்பீக்கர் போஸ் ஆடியோ சிஸ்டம் ஆகியவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: 2024 ஆம் ஆண்டில் கார்தேக்கோ யூடியூப் சேனலில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்கள்
எம்ஜி குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: ஜனவரி 17, 2025
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.40 லட்சம்
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எம்ஜி குளோஸ்டர் கார்கள் சமீப காலமாக சோதனை செய்யப்படும் போது படம்பிடிக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த எஸ்யூவி ஜனவரி 2025 ஆண்டில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 குளோஸ்டர் ஆனது ஒரு புதிய ஸ்பிளிட்-ஹெட்லைட் செட்டப் மற்றும் கனெக்டட் LED டெயில் லைட்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2-லிட்டர் டீசல் (161 PS/374 Nm) மற்றும் 2-லிட்டர் ட்வின்-டர்போ டீசல் இன்ஜின் (216 PS/479 Nm) உள்ளிட்ட அதன் தற்போதைய இன்ஜின் ஆப்ஷன்களை ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட குளோஸ்டர் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
எம்ஜி மிஃபா 9
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: ஆகஸ்ட் 2025
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.1 கோடி
முதன் முதலில் ஆட்டோ எக்ஸ்போ 2023 ஆண்டில் காட்சிப்படுத்தப்பட்டது. இப்போது MG மிஃபா 9 எலக்ட்ரிக் MPV ஆனது பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச-ஸ்பெக் மாடல் 90 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. 595. கி.மீ WLTP- கிளைம்டு ரேஞ்சை வழங்குகிறது. லெவல்-2 ADAS, இயங்கும் முன் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகள், ஆட்டோ ஏசி மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகிய வசதிகளுடன் வரலாம்.
பிஒய்டி 2 அட்டோ
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: ஆகஸ்ட் 2025
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.1 கோடி
பிஒய்டி அட்டோ 2 இவி 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருக்கும் அதன் உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அட்டோ 3 -க்கு கீழே அமைந்துள்ள அட்டோ 2 ஆனது 42.4 kWh பேட்டரி பேக் உடன் வரலாம். WLTP கிளைம்டு 312 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது. 12.8-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8.8-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், ஹீட் மற்றும் பவர்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகள் மற்றும் பிரீமியம் லெதர் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை கொடுக்கப்படலாம்.
புதிய தலைமுறை ஸ்கோடா சூப்பர்ப்
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: ஆகஸ்ட் 2025
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.50 லட்சம்
இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு ஸ்கோடா நிறுவனம் அடுத்த தலைமுறை சூப்பர் காரை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ன் போது சாத்தியமாகும். 2024 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட மாடல் லெவல் 2 ADAS உட்பட சில புதிய மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. இந்தியா-ஸ்பெக் சூப்பர்ப் ஆனது கோடியாக்கிலிருந்து 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பெறும். இது 190 PS மற்றும் 320 Nm ஐ அவுட்புட்டை கொடுக்கும்.
புதிய தலைமுறை ஸ்கோடா கோடியாக்
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: அறிவிக்கப்பட வேண்டும்
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.35 லட்சம்
இந்தியாவில் அடுத்த மாதம் ஸ்கோடா கோடியாக் காரின் இரண்டாம் தலைமுறை மாடல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச மாடல் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை வழங்குகிறது. இந்தியா-ஸ்பெக் கோடியாக் 2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. இது 190 PS மற்றும் 320 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. 13-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வென்டிலேஷன் மற்றும் ஹீட்டட் ஃபங்ஷன்களுடன் பவர்டு சீட்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை கொடுக்கப்படலாம்.
புதிய ஸ்கோடா ஆக்டேவியா RS
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: ஜனவரி 17, 2025
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.45 லட்சம்
ஸ்கோடா நிறுவனம் 2025 ஆக்டேவியா ஆர்எஸ் காரை வரவிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தவுள்ளது. ஏற்கனவே சர்வதேச அளவில் கிடைக்கும் இந்த மேம்படுத்தப்பட்ட மாடல், பவர்டிரெய்ன் புதுப்பிப்புகளுடன் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் உட்புறத்தைக் கொண்டுள்ளது. சர்வதேச-ஸ்பெக் ஆக்டேவியா ஆர்எஸ் முந்தைய 1.4-லிட்டர் பிளக்-இன் ஹைப்ரிட்டை 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மாற்றுகிறது. இருப்பினும், இந்தியா-ஸ்பெக் ஆக்டேவியா ஆர்எஸ்க்கான பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. வரவிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் ஸ்கோடா 2025 ஆக்டேவியா ஆர்எஸ் காரை இந்தியாவில் காட்சிப்படுத்தவுள்ளது. இந்த மாடல் சர்வதேச அளவிலும் கிடைக்கிறது மற்றும் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் உட்புறத்தை இது கொண்டுள்ளது. ஆக்டேவியா RS ஆனது முந்தைய சர்வதேச-ஸ்பெக் மாடலில் வழங்கப்பட்ட 1.4-லிட்டர் பிளக்-இன் ஹைப்ரிட்டை 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மாற்றுகிறது. இருப்பினும் இந்தியா-ஸ்பெக் ஆக்டேவியா ஆர்எஸ் -க்கான பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும் படிக்க: 2024 ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சொகுசு கார்கள்
மெர்சிடிஸ்-பென்ஸ் EQG
வெளியீட்டு தேதி: ஜனவரி 9, 2024
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.1.25 கோடி
பிரபலமான G-Wagen எஸ்யூவி -யின் எலக்ட்ரிக் பதிப்பான மெர்சிடிஸ்-பென்ஸ் EQG வரும் ஜனவரி 9, 2025 அன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. குளோபல்-ஸ்பெக் EQG ஆனது 116 kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. 4 எலக்ட்ரிக் மோட்டார்கள் (ஒவ்வொரு வீல் ஹப்பிலும் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது ). 587 PS மற்றும் 1,164 Nm என்ற இன்டெகிரேட்டட் அவுட்புட்டை வழங்குகிறது. இது 650 கி.மீ -க்கு மேல் WLTP-கிளைம்டு ரேஞ்சை வழங்குகிறது. மேலும் அதே பவர்டிரெய்ன் இந்திய-ஸ்பெக் மாடலிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறது EQG ஆனது டூயல் 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன்), வாய்ஸ் அசிஸ்டென்ட் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி அடிப்படையிலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD) உள்ளிட்ட வசதிகளுடன் இது வரலாம்.
மெர்சிடிஸ்-மேபெக் EQS எஸ்யூவி நைட் சீரிஸ்
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: அறிவிக்கப்பட வேண்டும்
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.1.5 கோடி
மேபேக் EQS 680 நைட் சீரிஸ் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் வெளியிடப்படும் என்று மெர்சிடிஸ்-பென்ஸ் அறிவித்துள்ளது. இந்த சொகுசு எலக்ட்ரிக் எஸ்யூவி ஆனது டார்க்கர் வெளிப்புற எலமென்ட்கள் மற்றும் பிரீமியம் ஃபினிஷ் உடன் கூடிய பிரத்யேக வடிவமைப்பு தொகுப்பைக் கொண்டுள்ளது. ஒரு எலக்ட்ரிக் மோட்டார் 690 PS அவுட்புட்டை கொடுக்கும். இது ஒரு முழுமையான சார்ஜில் சுமார் 560 கி.மீ தூரம் செல்லலாம். சுமார் ரூ.1.5 கோடி விலையில் எதிர்பார்க்கப்படும் இந்த நைட் சீரிஸ் டிசைன் பேக்கேஜ் கூடுதலாக ரூ.20 லட்சம் விலை கொண்டதாக இருக்கும் .
மெர்சிடிஸ் கான்செப்ட் CLA
மெர்சிடிஸ் - பென்ஸ் அடுத்த தலைமுறை CLA காரை வரவிருக்கும் ஆட்டோ ஷோவில் இந்தியாவில் காட்சிக்கு வைக்கவுள்ளது. பெரிய 21 இன்ச் சக்கரங்கள் மற்றும் எதிர்கால வடிவமைப்புடன் இந்த கருத்து தனித்து நிற்கிறது. இது ஒரே ஒரு மற்றும் டூயல்-மோட்டார் செட்டப்களுடன் வருகிறது, மேம்பட்ட செயல்திறனுக்கான 800-வோல்ட் அமைப்பைப் பயன்படுத்துகிறது. உள்ளே இந்த கான்செப்ட் MBUX சூப்பர் ஸ்கிரீன் உடன் வரலாம். அதன் அதிநவீன தொழில்நுட்பத்தை சிறப்பித்துக் காட்டும் வகையில் ஒரு பெரிய டிஸ்பிளே முழு டாஷ்போர்டிலும் உள்ளது.
வாய்வே இவா
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: ஜனவரி 17, 2024
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.7 லட்சம்
இந்தியாவின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் EV வாய்வே இவா, 2025 இல் தொடங்கப்பட உள்ளது மற்றும் வரவிருக்கும் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும். முன்பதிவு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இவா என்பது 2 இருக்கைகள் கொண்ட குவாட்ரிசைக்கிள் ஆகும். இது 8.15 PS மற்றும் 40 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் 14 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இது 250 கி.மீ தூரம் மற்றும் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கி.மீ செல்லும்.
2025 ஜனவரி -யில் நீங்கள் எந்த காரை பார்க்க மிகவும் உற்சாகமாக இருக்கிறீர்கள்? கீழே உள்ள கமென்ட் பகுதியில் எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.