• English
    • Login / Register

    2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வரவிருக்கும் 10 கார்கள்

    க்யா Seltos க்காக ஜூன் 27, 2023 06:09 pm அன்று tarun ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 134 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    அடுத்த ஆறு மாதங்களில், ஆறு புத்தம் புதிய கார்களின் அறிமுகத்தை காண உள்ளோம்.

    These Are The 10 Upcoming Car Launches In The Second Half Of 2023

    2023 -ன் முதல் ஆறு மாதங்கள் பல முக்கியமான வெளியீடுகளுடன் பரபரப்பாக இருந்தன. இப்போது, ​​ஆண்டின் பிற்பகுதியை எதிர்நோக்குகிறோம், வரவிருக்கும் பல புதிய கார்களுடன் சமமான முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. ஒரு புதிய EV, ஒரு ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஐந்து புத்தம் புதிய மாடல்களைப் பார்க்க உள்ளோம். வரவிருக்கும் இந்த மாடல்களின் சிறந்த 10 தேர்வுகள் மற்றும் அவற்றைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இதோ உங்களுக்காக:

    கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்

    எதிர்பார்க்கப்படும் விலை - 10 லட்சம் ரூபாய் முதல்

    Facelifted Kia Seltos Front

    கியா செல்டோஸ் காம்பாக்ட் SUV  நான்கு ஆண்டுகளுக்கு விற்பனைக்கு வந்த பிறகு அதன் முதல் பெரிய அப்டேட்டைப் பெறும். இது இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டருக்கான டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்ஸ், அகலமான சன்ரூஃப் மற்றும் ரேடார் அடிப்படையிலான ADAS தொழில்நுட்பம் போன்ற பல புதிய அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்ட வெளிப்புறம் மற்றும் உட்புற வடிவமைப்பைப் பெறும். அதே 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் இது தொடரும் அதே வேளையில், புதிய 160PS 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட்டும் அறிமுகப்படுத்தப்படும்.

    மாருதி இன்விக்டோ

    எதிர்பார்க்கப்படும் விலை - 19 லட்சம் ரூபாய் முதல்

    Maruti Invicto spied

    மாருதி இன்விக்டோ பிராண்டின் தயாரிப்புகளில் விலையுயர்ந்த மாடலாக ஜூலை 6 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். இன்விக்டோ  MPV ஆனது டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனாகும், ஆனால் அதைத் தனித்துவமாக காட்ட சிறிய ஸ்டைலிங் மாற்றங்களைப் பெறும். இது அகலமான சன்ரூஃப், 10-இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், பவர்டு இரண்டாம் வரிசை ஒட்டோமான் இருக்கைகள், டூயல் ஜோன் AC மற்றும் ADAS ஆகியவற்றுடன் கூடிய பிரீமியம்  காராக இருக்கும். இன்விக்டோவை இயக்குவது ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் 2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினாக இருக்கும், இது ஹைக்ராஸில், 23.24kmpl சிக்கனத்தைக் கொடுக்கும் என்று தெரிகிறது.  

    ஹூண்டாய் எக்ஸ்டர்

    எதிர்பார்க்கப்படும் விலை - 6 லட்சம் ரூபாய் முதல்

    Hyundai Exter sunroof

    ஹூண்டாய் எக்ஸ்டர்  கார் தயாரிப்பாளரின் என்ட்ரி லெவல் எஸ்யூவி ஆகும் மேலும் டாடா பன்ச்-க்கு போட்டியாக இருக்கும், இது ஜூலை 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அந்த  மைக்ரோ SUV 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வழங்குகிறது. இதன் CNG வெர்ஷனும் விற்பனைக்கு வரும். அம்சங்களைப் பொறுத்தவரை, இது மின்சார சன்ரூஃப், 8 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது.

    ஹோண்டா எலிவேட்

    Honda Elevate

    எதிர்பார்க்கப்படும் விலை - 12 லட்சம் ரூபாய் முதல்

    காம்பாக்ட் எஸ்யூவி  தளத்தில் நுழையும் ஒன்பதாவது மாடல் ஹோண்டா எலிவேட் ஆகும். இது சிட்டியின் 121PS 1.5-லிட்டர் i-VTEC இன்ஜினைப் பயன்படுத்தி, பெட்ரோல் மட்டும் உள்ள காராக வழங்கப்படும். எந்த ஸ்ட்ராங்-ஹைப்ரிட் இன்ஜினும் காரில் இருக்காது, ஆனால் அதன் EV பதிப்பு 2026 ஆம் ஆண்டில் அறிமுகமாகும். மின்சார சன்ரூஃப், 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் அமைப்பு, 7-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, ஆறு ஏர்பேக்குகள் மற்றும் ADAS ஆகியவை வழங்கப்படும்.

    சிட்ரோன் C3 ஏர்கிராஸ்

    எதிர்பார்க்கப்படும் விலை - 9 லட்சம் ரூபாய் முதல்

    Citroen C3 Aircross

    ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஹோண்டா எலிவேட் போன்றவற்றுக்கு மற்றொரு போட்டியாக இருப்பது. சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆகும். இந்தியாவை மையமாகக் கொண்ட C3 ஏர்கிராஸ் மூன்று வரிசை எஸ்யூவி ஆக இருக்கும், இது இந்த காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கு எதிராக அதிரடியாக விலை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 110PS 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினைப் பயன்படுத்தும், மேலும் ஒரு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். 10-இன்ச் டச் ஸ்கிரீன் அமைப்பு, டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, டூயல் ஏர்பேக்குகள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் TPMS ஆகியவற்றால் சொகுசு மற்றும் வசதி ஆகியவை கிடைக்கும்.

    ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட்

    எதிர்பார்க்கப்படும் விலை - 7.60 லட்சம் ரூபாய் முதல்

    2023 Hyundai i20 Facelift front

    பிரீமியம் ஹேட்ச்பேக் இந்தியாவில் ஏற்கனவே சாலையில் சோதனை செய்யப்பட்டதால், வரும் மாதங்களில் ஒரு ஃபேஸ்லிப்ட்டை பெறும் .  ஃபேஸ்லிப்டட் ஹூண்டாய் i20 உட்புறம் சில மாற்றங்களுடன் புதுப்பிக்கப்பட்ட வெளிப்புற வடிவமைப்பைக் கொண்டிருக்கும். டூயல் கேமரா டேஷ்-கேமைத் தவிர, அம்சங்கள் பட்டியலில் பல சேர்த்தல்களைக் காண வாய்ப்பில்லை. 1.2-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்கள் உட்பட பவர் டிரெய்ன்களும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் இரண்டும் கிடைக்கிறது.

    ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர்

    எதிர்பார்க்கப்படும் விலை - ரூ 16 லட்சம்

    Five-door Force Gurkha Export

    ஃபோர்ஸ் கூர்காவின் ஐந்து கதவுகள் கொண்ட பதிப்பு அடுத்த ஆறு மாதங்களில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இது மூன்று-டோர் பதிப்பைப் போலவே இருக்கும், ஆனால் நீட்டிக்கப்பட்ட பின்புற தோற்றத்துடன் இருக்கும். இது பல இருக்கை அமைப்புகளில் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் அதே 90PS 2.6-லிட்டர் டீசல் இன்ஜின் கூர்க்காவை இயக்கும்.

    பிஒய்டி சீல்

    எதிர்பார்க்கப்படும் விலை - ரூ 60 லட்சம்

    BYD Seal

    இந்தியாவிற்கான பிஒய்டி -யின் மூன்றாவது மின்சார கார், சீல், 2023 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில்  எப்போது வேண்டுமானாலும் அறிமுகமாகலாம். ப்ரீமியம் செடான்  ஆனது பெரிய 82.5kWh  பேட்டரி பேக்கைப் பெறுகிறது, 700 கிலோமீட்டர் பயணதூர வரம்பைக் கொண்டுள்ளது. உட்புறம் எதிர்பார்க்கப்படும் அம்சங்களில் சுழலும் 15.6-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, அகலமான சன்ரூஃப் மற்றும் ரேடார் அடிப்படையிலான ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) ஆகியவை அடங்கும்.

    டாடா பன்ச் EV

    எதிர்பார்க்கப்படும் விலை - 12 லட்சம் ரூபாய் முதல்

    Tata Punch EV

    பன்ச் CNG வெர்ஷனை மட்டும் பெறவில்லை ஆனால் ஒரு EV கூட உள்ளது , ஒருவேளை இந்த ஆண்டு வெளிவரக்கூடும். டியாகோ மற்றும் நெக்ஸான் EV போலவே, இது பல பேட்டரி பேக்குகளுடன் வழங்கப்படலாம், 350 கிலோமீட்டர்கள் வரை பயணதூர வரம்பு  உரிமை கோரப்படும். மைக்ரோ எஸ்யூவி -யின் எலெக்ட்ரிக் பதிப்பு ஏற்கனவே சில முறை மறைவாக படம் பிடிக்கப்பட்டது, இதன் ஸ்டைலிங் மாற்றங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்காது என்பதைக் காட்டுகிறது. அம்சங்களின் பட்டியல் ICE வெர்ஷனை போலவே இருக்கும். இது டாடா EV வரிசையில் டியாகோ EV மற்றும் டிகோர் EV -க்கு மேலே நிலை நிறுத்தப்படும்.

    நிஸான் X-டிரெயில்

    எதிர்பார்க்கப்படும் விலை - ரூ 40 லட்சம்

    2022 Nissan X-Trail

    நிஸான் X-டிரெயில் அறிமுகத்தை இந்த ஆண்டின் இறுதியில் காண முடியும், கார் தயாரிப்பு நிறுவனம் தற்போது முழு அளவிலான எஸ்யூவி -யை சோதனை செய்து வருகிறது. இது டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் MG குளோஸ்டர் போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும். X-டிரெயிலை இயக்குவது 1.5-லிட்டர் மைல்ட்-ஹைப்ரிட் டர்போ-பெட்ரோல் இன்ஜினாக இருக்கலாம் அல்லது AWD தேர்வு கொண்ட ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பவர்டிரெய்னாக இருக்கலாம். இது பிரீமியம் மற்றும் அம்சம் நிறைந்த காராக இருக்கும், இது இறக்குமதி மூலம் விற்கப்படும்.

    (அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோருமுக்கானவை)

    was this article helpful ?

    Write your Comment on Kia Seltos

    2 கருத்துகள்
    1
    M
    muthusundari
    Jun 26, 2023, 11:23:56 AM

    The Maruti Invicto looks impressive! Consider getting a paint protection film in Chennai, Porur to safeguard its stunning exterior

    Read More...
      பதில்
      Write a Reply
      1
      M
      muthusundari
      Jun 26, 2023, 11:22:26 AM

      Thank you to know this

      Read More...
        பதில்
        Write a Reply

        explore similar கார்கள்

        ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

        புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

        கார் செய்திகள்

        • டிரெண்டிங்கில் செய்திகள்
        • சமீபத்தில் செய்திகள்

        டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

        • லேட்டஸ்ட்
        • உபகமிங்
        • பிரபலமானவை
        ×
        We need your சிட்டி to customize your experience