2024 மார்ச் மாதத்தில் வரவிருக்கும் கார்கள்: Hyundai Creta N Line Mahindra XUV300 Facelift மற்றும் BYD Seal

published on மார்ச் 01, 2024 04:38 pm by ansh for ஹூண்டாய் கிரெட்டா என் லைன்

  • 53 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த மாதம் ஹூண்டாய் மற்றும் மஹிந்திராவிலிருந்து எஸ்யூவி -கள் வெளியாகவுள்ளன. மேலும் BYD இந்தியாவில் அதன் பிரீமியம் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தும்.

Upcoming Cars In March 2024: Hyundai Creta N-Line, Mahindra XUV300 Facelift, And BYD Seal

இந்திய ஆட்டோமொபைல் துறையில் பிப்ரவரி 2024 மாதம் பெரிதாக கார் அறிமுகங்கள் இல்லையென்றாலும் மார்ச் மாதம் சில புத்தம் புதிய மாடல்களை நாம் பார்க்கலாம். மார்ச் மாதத்தில் இறுதியாக N லைன் எடிஷனை வெளியாகும். ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி ஆனால் அதற்கு முன் BYD சீல் எலக்ட்ரிக் செடான் சந்தையில் நுழையும். மேலும் மஹிந்திரா  XUV300 ஃபேஸ்லிஃப்ட் பதிப்பை வெளியிடக்கூடும். இந்த புதிய மாடல்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களும் இங்கே.

ஹூண்டாய் கிரெட்டா N லைன்

Hyundai Creta N-Line

ஸ்போர்ட்டியர் பதிப்பு ஹூண்டாய் கிரெட்டா மார்ச் 11 அன்று வெளியிடப்படும். மேலும் இது வழக்கமான காம்பாக்ட் எஸ்யூவி -யை விட வடிவமைப்பில் சில மாற்றங்களுடன் வரும். கிரெட்டா N-லைன் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (160 PS/253 Nm) மூலம் இயக்கப்படும். பெரும்பாலும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் (வழக்கமான கிரெட்டாவுடன் வழங்கப்படவில்லை) மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை பெறும். உட்புறத்தில் வெளிப்புற வடிவமைப்பின் ஸ்போர்ட்டியர் தன்மைக்கு பொருந்தக்கூடிய வித்தியாசமான கேபின் தீம் கிடைக்கும். இது ஹூண்டாய் கிரெட்டாவின் டாப் வேரியன்ட்டை  அடிப்படையாகக் கொண்டது. விலை ரூ. 17.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: Hyundai Creta N-Line காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது… ஆனால் ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய முடியாது

BYD சீல்

BYD Seal

BYD நிறுவனம் இந்தியாவில் BYD சீல் காரை மார்ச் 5 ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தியாவில் இந்த எலக்ட்ரிக் செடான் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வரும்: 61.4 kWh மற்றும் 82.5 kWh மற்றும் ரியர் வீல் டிரைவ் மற்றும் இரண்டிலும் வழங்கப்படும். ஆல்-வீல்-டிரைவ் பவர்டிரெய்ன்கள் WLTP கிளைம்டு ரேஞ்ச்  570 கிமீ வரை இருக்கும். உள்ளே இது 15-இன்ச் டச் ஸ்கிரீன், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்(ரொட்டேட்டிங்), இரண்டு வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்கள் ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகியவற்றுடன் ஒரு மினிமலிஸ்டிக் கேபினை கொண்டுள்ளது. மேலும் இது ADAS வசதிகளின் முழுமையான தொகுப்புடன் வரும். BYD சீலின் விலை ரூ. 55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: எக்ஸ்க்ளூசிவ்: BYD சீல் வேரியன்ட் வாரியான வசதிகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்

மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட்

2024 Mahindra XUV300

ஃபேஸ்லிஃப்ட் மஹிந்திரா XUV300 காரின் விலை மார்ச் மாதத்தில் வெளியிடப்படாமல் இருக்கலாம். ஆனால் மஹிந்திரா இந்த மாதத்தில் அப்டேட்டட் சப் காம்பாக்ட் எஸ்யூவி -யை வெளியிட வாய்ப்புள்ளது. சப்காம்பாக்ட் எஸ்யூவி -யின் வடிவமைப்பில் சில மாற்றங்கள் கொடுக்கப்படவுள்ளன. புதிய வடிவ கிரில் ,புதிய பம்பர்கள் மற்றும் புதிய லைட்டிங் செட்டப் ஆகியவை இருக்கும். உட்புறத்தில் இது பெரிய ஸ்கிரீன்களுடன் புத்தம் புதிய கேபினை பெறலாம் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற புதிய அம்சங்களுடன் வரலாம். ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மஹிந்திரா XUV300 விலை ரூ.9 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: Mahindra XUV300 Facelift: காரில் என்ன எதிர்பார்க்கலாம் ?

மார்ச் 2024 -ல் சந்தைக்கு வரவுள்ள கார்கள் இவைதான். இவற்றில் எந்த மாடலை பார்க்க நீங்கள் ஆர்வமாக உள்ளீர்கள்? கீழே உள்ள கமெண்ட் பகுதியில்  எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

மேலும் படிக்க: XUV300 AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஹூண்டாய் கிரெட்டா n Line

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
×
We need your சிட்டி to customize your experience