Hyundai Creta N-Line காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது… ஆனால் ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய முடியாது
published on பிப்ரவரி 29, 2024 07:13 pm by ansh for ஹூண்டாய் கிரெட்டா என் லைன்
- 27 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹூண்டாய் கிரெட்டாவின் ஸ்போர்ட்டியர் வெர்ஷன் மார்ச் 11 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
-
இந்த காருக்கு அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. டோக்கன் தொகையாக ரூ.25000 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
-
வெளியீடு விரைவில் இருக்கும் என்பதால் என்பதால் எஸ்யூவி -க்கான அதிகாரப்பூர்வ முன்பதிவுகளும் விரைவில் திறக்கப்படலாம்.
-
கிரெட்டா N-லைன் காரில் வெளிப்புறத்தில் சில மாற்றங்கள் இருக்கலாம் மற்றும் வழக்கமான எஸ்யூவி -யில் இருந்து வேறுபட்ட கேபின் தீம் ஆகியவற்றுடன் வரும்.
-
இது அதே 160 PS 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பெறும். ஆனால் ஸ்போர்ட்டியர் டிரைவிற்காக சிறிய அப்டேட்களையும் எதிர்பார்க்கலாம்.
-
இதன் விலை ரூ.17.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் கிரெட்டா N-லைன் மார்ச் 11 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஆகவே ஹூண்டாய் அதற்கு முன்பாக முன்பதிவை தொடங்கலாம். இப்போது நாடு முழுவதும் உள்ள சில டீலர்ஷிப்கள் இந்த எஸ்யூவி -க்கான அதிகாரப்பூர்வமற்ற ஆர்டர்களை ரூ. 25000 க்கு எடுக்கத் தொடங்கியுள்ளன. நீங்கள் ஹூண்டாய் கிரெட்டா -வின் ஸ்போர்ட்டியர் வாங்க திட்டமிட்டால் ப்ரீ ஆர்டர் தொடர்பான விவரங்களை அருகிலுள்ள ஹூண்டாய் டீலர்ஷிப்பில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். முதலில் கிரெட்டா N-லைன் பற்றி இங்கே மேலும் தெரிந்துகொள்ளலாம்.
வடிவமைப்பில் உள்ள வேறுபாடுகள்
கிரெட்டா N-லைன் ஏற்கனவே சோதனையின் போது படம்பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ட்வீக் செய்யப்பட்ட முன் கிரில் கனெக்டட் LED DRLகள் மற்றும் ஒரு பெரிய முன்பக்க பம்பருடன் வரும் என்பதை நாம் அறிந்த விஷயம். முன்பக்கத்தில் உள்ள ஹூண்டாய் லோகோவும் வழக்கமான பதிப்பில் இருந்து வித்தியாசமாக இருக்கும். மீதமுள்ள வடிவமைப்பு வழக்கமான கிரெட்டாவைப் போலவே பெரிய மாற்றமில்லாமல் இருக்கும். இருப்பினும் N-லைன் சில ஸ்போர்ட்டி ரெட் ஆக்ஸன்ட்கள் மற்றும் அலாய் வீல்களுக்கு ஏற்ற வடிவமைப்பைப் கொண்டிருக்கும். இது டூயல்-டிப் எக்ஸாஸ்டுடன் கூடிய ஸ்போர்ட்டியரான பின்புற பம்பரும் இருக்கும்.
மேலும் படிக்க: மார்ச் 11 அன்று அறிமுகமாகவுள்ள Hyundai Creta N Line காரின் முதல் டீசர் வெளியாகியுள்ளது
கேபின் பற்றிய விவரங்கள் இன்னும் முழுமையாக தெரியவில்லை. ஆனால் இது ரெட் ஆக்ஸென்ட்களுடன் ஸ்டீயரிங் மற்றும் ஹெட்ரெஸ்ட்களில் "N-Line" பேட்ஜிங் கொண்ட ஆல்-பிளாக் கேபின் தீம் கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பவர்டிரெய்ன்
கிரெட்டா N-லைன் காரில் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்படவுள்ளது. இது இந்த பிரிவில் மிகவும் பவர்ஃபுல்லான டர்போ-பெட்ரோல் யூனிட் ஆகும். இந்த இன்ஜின் 160 PS மற்றும் 253 Nm அவுட்புட்டை கொடுக்கின்றது மேலும் இது பெரும்பாலும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் (வழக்கமான கிரெட்டாவுடன் வழங்கப்படவில்லை) அல்லது 7-ஸ்பீடு DCT (டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்) ஆகியவற்றுடன் கனெக்ட் செய்யப்பட்டு கிடைக்கும்.
அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு
டூயல் இன்டெகிரேட்டட் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள் (டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே) பெறும் கிரெட்டாவின் ஹையர் வேரியன்ட்களை போலவே இதிலுள்ள வசதிகள் இருக்கும். இது வயர்லெஸ் சார்ஜர், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 8-வே பவர் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
மேலும் படிக்க: ஐரோப்பாவிற்கான ஹூண்டாய் i20 N லைன் ஃபேஸ்லிஃப்ட் வெளியிடப்பட்டது இது இந்தியா-ஸ்பெக் மாடலில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது
பயணிகளின் பாதுகாப்பிற்காக ஹூண்டாய் 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS , எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள், ISOFIX-சைல்டு சீட் ஆங்கர்கள், 360 டிகிரி கேமரா மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன், மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற பல ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) -களுடன் வரலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
ஹூண்டாய் கிரெட்டா N-லைன் விலை ரூ 17.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் நெருங்கிய போட்டியாளர்களாக கியா செல்டோஸ் X-Line வேரியன்ட்கள், ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஜிடி லைன் வேரியன்ட்கள் உள்ளன.
மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful