மார்ச் 11 அன்று அறிமுகமாகவுள்ள Hyundai Creta N Line காரின் முதல் டீசர் வெளியாகியுள்ளது

published on பிப்ரவரி 27, 2024 08:01 pm by shreyash for ஹூண்டாய் கிரெட்டா என் லைன்

  • 22 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஹூண்டாய் கிரெட்டா N லைன் ஸ்டாண்டர்டு கிரெட்டாவை விட உள்ளேயும் வெளியேயும் ரெட் கலர் ஹைலைட்களுடன் புதுப்பிக்கப்பட்ட முன்பக்கத்தையும் கொண்டிருக்கும்.

Hyundai Creta N Line Patent Image

  • ஹூண்டாய் கிரெட்டா N லைன் உள்ளேயும் வெளியேயும் N லைன் சார்ந்த ஹைலைட்களை கொண்டிருக்கும்.

  • இது டூயல் 10.25-இன்ச் கனெக்டட் ஸ்கிரீன்ஸ், டூயல் ஜோன் ஏசி மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்களுடன் வரும்.

  • கிரெட்டா N லைன் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (160 PS / 253 Nm) மூலம் இயங்கும்.

  • ஹூண்டாய் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் (DCT) 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனின் ஆப்ஷனையும் வழங்கும்.

இந்தியாவில் கொரிய வாகன உற்பத்தியாளரான ஹூண்டாயின் ஹூண்டாய் i20 N லைன் மற்றும் ஹூண்டாய் வென்யூ N லைன் ஆகிய கார்களை தொடர்ந்து மூன்றாவது N லைன் காராக ஹூண்டாய் கிரெட்டா N லைன் இருக்கும். மார்ச் 11 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள நிலையில், ஹூண்டாய் எஸ்யூவி -யின் முதல் டீசரை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக காரின் முன்பக்க வடிவமைப்பின் ஒரு பார்வை நமக்கு தெரிய வருகின்றது.

டீசரில் என்ன பார்த்தோம்?

இந்த குறுகிய டீசர் வீடியோ எஸ்யூவி -யின் முன் வடிவமைப்பில் ஒரு பக்க தோற்றத்தை மட்டுமே வழங்குகிறது. கனெக்டட் LED DRL -கள் மற்றும் கிரெட்டா N லைனின் புதிய வடிவிலான முன்பக்க கிரில் ஆகியவற்றை பற்றிய ஒரு கண்ணோட்டத்தைப் பார்க்க முடிந்தது.

கிரெட்டா N லைனின் முந்தைய மறைக்கப்படாத ஸ்பை படங்கள் ஏற்கனவே ஸ்பிளிட்-LED ஹெட்லைட் அமைப்பு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன (LED DRL ஸ்டிரிப் மேல் கொடுக்கப்பட்டுள்ளது). புதிய வடிவிலான சிறிய கிரில் மற்றும் ஒரு பெரிய பம்பர் ஆகியவற்றை பார்க்க முடிகின்றது. ரெட் பிரேக் காலிப்பர்களுடன் கூடிய பெரிய 18-இன்ச் N லைன்-ஸ்பெசிபைடு அலாய் வீல்கள், இருபுறமும் ரெட் கார்னர்ஸ் மற்றும் புதிய வடிவிலான பின்புற பம்பர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க: ஐரோப்பாவிற்கான ஹூண்டாய் i20 N லைன் ஃபேஸ்லிஃப்ட் வெளியிடப்பட்டது, இது இந்தியா-ஸ்பெக் மாடலில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பது இங்கே

எதிர்பார்க்கப்படும் இன்ட்டீரியர் அப்டேட்கள்

2024 Hyundai Creta cabin

ஹூண்டாய் இன்னும் ஹூண்டாய் கிரெட்டா N லைனின் உட்புறத்தைக் காட்டவில்லை என்றாலும், ஸ்பை ஷாட்களின் அடிப்படையில், ரெட் கலர் இன்செர்ட்களுடன் கூடிய பிளாக் டேஷ்போர்டையும், N லைன் சார்ந்த ஸ்டீயரிங் வீலையும் பெறும்.

வசதிகளைப் பொறுத்தவரை கிரெட்டா N லைன் அதன் வழக்கமான போட்டியாளரை போன்ற வசதிகளை கொண்டிருக்கும். இதில் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட்க்காக மற்றும் இன்ஃபோடெயின்மென்ட்டுக்கு), டூயல்-ஜோன் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், 8 வே பவர்டு டிரைவர் சீட், மற்றும் வென்டிலேட்டட் முன் சீட்கள் ஆகியவை உள்ளன. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை உள்ளன.

பவர்டிரெய்ன் விவரங்கள்

2024 Hyundai Creta turbo-petrol engine

ஹூண்டாய் கிரெட்டா N லைன் அதே 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வரும், இது வழக்கமான மாடலில் 160 PS மற்றும் 253 Nm அவுட்புட்டை கொடுக்கின்றது. இருப்பினும், இது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுக்கு (DCT) கூடுதலாக 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனின் ஆப்ஷனையும் பெறலாம்.

ஹூண்டாய் ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ் மற்றும் சஸ்பென்ஷன் சிஸ்டத்தை ஸ்போர்டியர்-சவுண்டிங் எக்ஸாஸ்ட் சிஸ்டத்துடன் ஸ்போர்டியர் டிரைவிங் அனுபவத்திற்காக மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

ஹூண்டாய் கிரெட்டா N லைன் விலை ரூ. 17.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம். கியா செல்டோஸ் GTX+ மற்றும் எக்ஸ்-லைன் ஆகியவற்றுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். அதே சமயம் ஸ்போர்ட்டியர் தோற்றம் கொண்ட ஸ்கோடா குஷாக் மற்றும்ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஜிடி லைன் ஆகியவற்றுக்கு மாற்றாக இருக்கும் 

மேலும் படிக்க: கிரெட்டா ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஹூண்டாய் கிரெட்டா n Line

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience