தீப்பிடித்த Volvo C40 Recharge எலக்ட்ரிக் கூபே எஸ்யூவி: பதிலளித்த வால்வோ நிறுவனம்
published on ஜனவரி 31, 2024 12:43 pm by shreyash for வோல்வோ c40 recharge
- 37 Views
- ஒரு கருத்தை எழுதுக
வெளியான தகவலின்படி, ஓட்டுநர் உட்பட அனைத்து பயணிகளும் எந்த காயமும் இன்றி வாகனத்தை விட்டு வெளியேறினர்.
ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசு உமிழ்வுகள் இப்போது பெரும் கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகின்றது. ஆகவே மின்சார வாகனங்கள் எதிர்காலத்தில் பரவலாகலாம் என கருதப்படுகின்றன. EV -களை ஏற்றுக் கொள்வதில் சில சிக்கல்கள் இருக்கும் போது, மின்சார கார்கள் தீப்பிடித்து எரிவதாக அவ்வப்போது வெளியாகும் செய்திகளால் பயணிகளின் பாதுகாப்பும் கவலைக்குரியதாக உள்ளதது. சமீபத்தில், வோல்வோ C40 ரீசார்ஜ் தீப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது, இது உலகளவில் பாதுகாப்பான கார்களை உருவாக்கும் நிறுவனம் என்று பெயரெடுத்த வால்வோவை இந்த விபத்து கேள்வி எழுப்பும் வகையில் அமைந்தது.
சத்தீஸ்கரில் ஒரு நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. தகவல்களின்படி, உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, மேலும் வாகனம் தீ பிடிப்பதற்கு முன்பாகவே பயணிகள் வெளியேறிவிட்டனர் .
பாதுகாப்புக்காக கார்தேக்கோ-வின் அறிவுரை:- மின்சார கார் தீ விபத்துகளை தொழில்முறை தீயணைப்பு வீரர்களால் மட்டுமே அதுவும் பொருத்தமான தீயணைக்கும் கருவிகளைக் கொண்டே கையாள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவத்தில் எதிர்கொண்டாலோ அல்லது அதற்கு அருகில் இருந்தாலோ, தண்ணீரைக் கொண்டு தீயை அணைக்க முயற்சிக்க வேண்டாம் மற்றும் வாகனத்திலிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். மேலும், எரியும் EV -யிலிருந்து நேரடியாக வரும் புகையை சுவாசிப்பதை தவிர்க்கவும், ஏனெனில் அவை புகை மற்றும் சாம்பல் தவிர மற்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களை கொண்டிருக்கலாம்.
வால்வோ இந்தியா -வின் அறிக்கை
இந்த சம்பவம் வோல்வோ நிறுவனத்தின் கவனத்துக்கு சென்றது, மேலும் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்பட்டது. “சனிக்கிழமையன்று C40 கார் ஓட்டிக்கொண்டிருந்தபோது தீப்பிடித்த சம்பவம் எங்களுக்கு தெரிய வந்தது. காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் டிரைவரை காரை ஓரமாக நிறுத்தி விட்டு காரை விட்டு இறங்கும்படி அறிவுறுத்தின. ஆகவே உயிசேதமோ, காயங்களோ இல்லாமல் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வாடிக்கையாளருக்கு வழிகாட்ட எங்கள் வாடிக்கையாளர் பராமரிப்பு அழைப்பு மையம் அவர்களோடு தொடர்பில் உள்ளது. வோல்வோ கார்களை பொறுத்தவரையில் நாங்கள் எங்கள் கார்களின் பாதுகாப்பைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம், மேலும் இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். விபத்துக்கான காரணத்தை அறிய, எங்கள் தொழில்நுட்ப வல்லுனர்களால் தீப்பிடித்த வாகனம் நுணுக்கமாக ஆய்வு செய்யப்படும். நாங்கள் வாடிக்கையாளருடன் தொடர்பில் இருக்கிறோம் மற்றும் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம். என வோல்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
வால்வோ C40 ரீசார்ஜ் பேட்டரி பேக் & ரேஞ்ச்
XC40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் எஸ்யூவியின் கூபே பாணி பதிப்பாக வோல்வோ சி40 ரீசார்ஜ் செப்டம்பர் 2023 ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. C40 ரீசார்ஜ் ஆனது 78 kWh பேட்டரி பேக்கை பயன்படுத்துகிறது, இது WLTP கிளைம்டு 530 கிமீ ரேஞ்ச் -ஐ வழங்குகிறது. இது XC40 ரீசார்ஜில் வழங்கப்படும் பேட்டரி -யில் வேறுபாட்டைக் கொண்டுள்ளது, எனவே கூடுதல் ரேஞ்ச் கிடைக்கின்றது. பேட்டரி பேக் ஆல்-வீல்-டிரைவ் (AWD) டூயல்-எலக்ட்ரிக் மோட்டார் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 408 PS மற்றும் 660 Nm அவுட்புட்டை கொடுக்கின்றது.
இதையும் பார்க்கவும்: டொயோட்டா டீசல் கார்களின் உரிமையாளர்களுக்கான முக்கிய அப்டேட்! Innova Crysta, Fortuner மற்றும் Hilux கார்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்
அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு
வால்வோ C40 ரீசார்ஜில் 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (வெர்டிகல்-ஓரியன்ட்டட்) மற்றும் 12-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, எலக்ட்ரிக்கல் அனுசரிப்பு முன் இருக்கைகள் (ஹீட்டட் மற்றும் கூல்டு ஃபங்ஷன்), டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஒரு பனோரமிக் சன்ரூஃப் ஆகிய வசதிகள் உள்ளன.
7 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்ட் மற்றும் டிசென்ட் கன்ட்ரோல் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன. C40 ரீசார்ஜ் ஆனது, அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஃபார்வர்டு கொலிஷன் அவாய்டன்ஸ், லேன் கீப் அசிஸ்ட், கிராஸ் ட்ராஃபிக் வார்னிங் முன் மற்றும் பின்புறம் ஆகிய இரண்டிற்கும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களை கொண்டுள்ளது.
விலை & போட்டியாளர்கள்
வோல்வோ சி40 ரீசார்ஜ் ரூ.62.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) விலையில் ஒரே ஒரு வேரியன்ட்டில் வருகிறது. இது கியா EV6 மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 5 ஆகிய கார்களுடன் போட்டியிடுகின்றது. மேலும் வால்வோ XC40 ரீசார்ஜ் -காருக்கு ஒரு ஸ்போர்ட்டியர் தோற்றம் மாற்றாகவும் இருக்கும்.
மேலும் படிக்க: C40 ரீசார்ஜ் ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful