Volvo XC40 Recharge இந்தியாவில் உள்ள வோல்வோ தொழிற்சாலையில் இருந்து 10,000 -வது காராக வெளிவந்தது
published on ஜனவரி 22, 2024 06:24 pm by rohit for வோல்வோ ex40
- 53 Views
- ஒரு கருத்தை எழுதுக
சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான வோல்வோ 2017 ஆம் ஆண்டு முதல் XC90 -ல் தொடங்கி அதன் பெங்களூரு தொழிற்சாலையில் கார்களை உள்நாட்டில் அசெம்பிள் செய்யத் தொடங்கியது.
வோல்வோ இந்தியா அதன் உள்ளூர் தொழிற்சாலையிலிருந்து 10,000 யூனிட்களை வெளியிட்டதன் மூலமாக, ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. அந்த மைல்கல்லை எட்டிய கார் வால்வோ XC40 ரீசார்ஜ் மின்சார எஸ்யூவி மாடலாககும்.
இந்தியாவில் வோல்வோ -வின் வரலாறு
ஸ்வீடிஷ் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் அதன் மாடல்களை 2017 ஆண்டில் அதன் பெங்களூரு தொழிற்சாலையில் வோல்வோ XC90 -ல் தொடங்கி அசெம்பிள் செய்யத் தொடங்கியது. வோல்வோ XC60 அதன் இந்திய உற்பத்தி நிலையத்தில் இன்றுவரை 4,000 யூனிட்டுகளுக்கு மேல் வெளியான மாடலாக உள்ளது. இந்த மாடல்கள் முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை, ஆனால் இங்கு மட்டுமே அசெம்பிள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வோல்வோ தற்போது இங்கு என்னென்ன கார்களை உற்பத்தி செய்கிறது?
வோல்வோ தற்போது அதன் முழு இந்திய கார் வரிசையையும் ஹோஸ்கோட் -டை இருப்பிடமாக கொண்ட தொழிற்சாலையில் இணைக்கிறது. இதில் வோல்வோவின் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) கார்களும் அடங்கும். மேலும் XC60 மற்றும் XC90 எஸ்யூவி -கள், S90 செடான், XC40 ரீசார்ஜ் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட C40 ரீசார்ஜ் ஆகிய இவி கார்களையும் உள்ளடக்கியது.
வோல்வோவின் எதிர்கால திட்டம்
2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அதன் EV போர்ட்ஃபோலியோவில் இருந்து அதன் விற்பனையில் பாதியை அடைய வேண்டுமென வோல்வோ தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தது. அதன் தற்போதைய இந்திய வரிசையானது XC40 ரீசார்ஜ் மற்றும் C40 ரீசார்ஜ் ஆகிய இரண்டு EV -களை மட்டுமே கொண்டுள்ளது. ஃபிளாக்ஷிப் EX90 மற்றும் புதிய என்ட்ரி லெவல் EX30 மின்சார எஸ்யூவி -களுடன் கார்களின் வரிசை விரைவில் விரிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.
இப்போதைக்கு, வோல்வோ இந்தியாவில் விற்பனை செய்து வரும் கார்களின் விலை ரூ. 57.90 லட்சம் முதல் ரூ. 1.01 கோடி வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) உள்ளது.
மேலும் படிக்க: வோல்வோ XC40 ரீசார்ஜ் ஆட்டோமெட்டிக்