EV கார் திட்டங்களை நிறுத்தியது ஆப்பிள் நிறுவனம்: ஜெனரேட்டிவ் AI -மீது முழு கவனத்தையும் செலுத்தப் போவதாக அறிவிப்பு
modified on பிப்ரவரி 29, 2024 05:14 pm by ansh
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
இதன் மூலமாக ஆப்பிளின் பத்தாண்டு கால முயற்சி முடிவுக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் எலக்ட்ரிக் கார் விற்பனை வீழ்ச்சியை சந்தித்து வருவதும் இந்த முடிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
-
2014 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் டிரைவர் இல்லாத கார்கள் எனப்படும் செஃல்ப் டிரைவிங் கார்களை உருவாக்கும் புராஜெக்ட் டைட்டன் என்ற திட்டத்தை தொடங்கியது.
-
ஆரம்பத்தில் ஆப்பிள் நிறுவனம் லெவல் 4 அட்டானமஸ் எலக்ட்ரிக் கார்களை உருவாக்க திட்டமிட்டது. பின்னர் அது லெவல் 2+ EV ஆக மாற்றம் செய்யப்பட்டது.
-
EV திட்டத்தை நிறுத்திய பிறகு ஆப்பிள் முழு கவனத்தையும் ஜெனரேட்டிவ் AI -மீது செலுத்தவுள்ளது.
-
கூகுள், சோனி மற்றும் ஷியோமி போன்ற பிற தொழில்நுட்ப நிறுவனங்கள் செஃல்ப்-டிரைவிங் அல்லது எலக்ட்ரிக் கார்களை உருவாக்குவதில் முன்னேற்றம் அடைந்துள்ளன.
ஆப்பிளின் எலக்ட்ரிக் கார் திட்டமான புராஜெக்ட் டைட்டன் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் ஆப்பிள் இதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்த திட்டம் கைவிடப்படுவதற்கு முன்பு சுமார் பத்தாண்டு காலமாக ஆராய்ச்சியில் இருந்தது. திட்டத்தில் பணிபுரியும் சுமார் 2000 ஊழியர்களில் பலர் ஆப்பிளின் ஜெனரேட்டிவ் AI திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. இதுவரை ஆப்பிள் EV திட்டத்தைப் பற்றி எங்களுக்குத் தெரிந்த விஷயங்கள் இங்கே.
புராஜெக்ட் டைட்டன்
2014 ஆம் ஆண்டில் ஆப்பிள் அட்டானமஸ் எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் திட்டத்தை தொடங்கியது. இது நிறுவனம் வாகனத் துறையில் நுழைவதற்கு வழியாக கருதப்பட்டது. ஆரம்பத்தில் ஆப்பிளின் திட்டம் ஸ்டீயரிங் மற்றும் பெடல்கள் இல்லாத வாகனத்தை உருவாக்குவதாக இருந்தது. இது லெவல் 4 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களை பயன்படுத்தும் வாய்ஸ் கமாண்ட் மூலம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.
ஆப்பிள் கார்களுக்கான பல்வேறு வடிவமைப்புகளை உருவாக்கியது. அதன் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டத்தையும் உருவாக்கி அதை சோதனை செய்யத் தொடங்கியது. ஆனால் சமீபத்திய அறிக்கைகள் ஆப்பிள் கார்களை மேனுவல் கன்ட்ரோல்களுடன் வழக்கமான கார்களை போலவே உருவாக்க முடிவு செய்ததாகவும் டிரைவர் அசிஸ்ட் சிஸ்டமை லெவல் 4 -லிருந்து லெவல் 2+ ஆக குறைக்க முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கின்றன. ஆப்பிள் EV -க்காக 2028 -ல் வெளியாகும் என முடிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிய வருகின்றது.
மேலும் படிக்க: எக்ஸ்க்ளூசிவ்: BYD சீல் வேரியன்ட் வாரியான வசதிகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்
இருப்பினும் பத்தாண்டுகளுக்கு பிறகு ஆப்பிள் இந்த திட்டத்தை நிறுத்த முடிவு செய்துள்ளது. ஆகவே ஆப்பிளில் எலக்ட்ரிக் காரை இனிமேல் பார்க்க வாய்ப்பில்லை. ஆப்பிள் எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லையென்றாலும் கூட உலகளாவிய சந்தையில் EV விற்பனை சரிவு ஒரு காரணமாக இருக்கலாம் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
EV -களை ஆப்பிள் தவிர்ப்பதற்கு வேறு சில காரணங்கள் கூட இருக்கலாம். இதில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை விட EV -களுக்கான விலை அதிகமாக இருப்பது, ஹைபிரிட் கார்களுக்கு அதிகரித்து வரும் தேவை மற்றும் லாபகரமான தயாரிப்பாக இருக்க பரந்த அளவிலான பயன்பாடுகளைக் கொண்ட அட்டானமஸ் ஓட்டுநர் தொழில்நுட்பத்தை கொண்ட காரை வடிவமைப்பதில் உள்ள சவால்கள் ஆகியவையும் அவற்றில் அடங்கும்.
ஜெனரேட்டிவ் AI
ஆப்பிள் பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களைப் போலவே ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு பிரிவில் வேலை செய்கிறது. அதைபற்றிய அறிமுகம் இல்லாதவர்களுக்கு, ஜெனரேட்டிவ் AI என்பது ஒரு வகையான செயற்கை நுண்ணறிவு கருவியாகும். இது ஒரு பயனாளரிடமிருந்து குறைந்தபட்ச இன்புட்டை கொண்டு கட்டுரை, படங்கள், ஆடியோக்கள் அல்லது வீடியோக்களை உருவாக்கும். இந்த தொழில்நுட்பத்தின் முக்கியமான ஒரு உதாரணம் ChatGPT ஆகும். இது அதன் திறன்களால் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மேலும் படிக்க: இந்தியாவில் கால்பதிக்கும் VinFast நிறுவனம், தமிழ்நாட்டில் EV உற்பத்தி ஆலையின் கட்டுமானத்தை தொடங்கியது
ஆப்பிள் EV திட்டத்தை நிறுத்தி விட்டதால் அதில் பணியாற்றியவர்களை AI -க்கு மாற்றவுள்ளது. இது சமீபத்தில் நிறைய வளர்ச்சியடைந்துள்ளது. ஆப்பிள் தனது எதிர்கால தயாரிப்புகளுக்காக இந்த தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்தும். மேலும் அதன் சமீபத்திய தயாரிப்பான ஆப்பிள் விஷன் புரோவில் இதனை கொடுக்க முயலும். இது டிஜிட்டல் பொருட்களை நிஜ உலகில் காண்பிக்க ஆக்மென்ட் ரியாலிட்டியை பயன்படுத்துகிறது.
Apple EV -யின் எதிர்காலம்
தற்போதைக்கு எலக்ட்ரிக் காரை உருவாக்கும் முயற்சியை ஆப்பிள் கைவிட்டாலும் கூட, அது டைட்டன் திட்டத்தின் முடிவாக இருக்காது. ஆப்பிளை போலவே பிற எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களும் சமீபத்திய ஆண்டுகளில் EV - வாகனத் துறையில் நுழைய முயற்சிக்கின்றன. ஆனால் ஃபுல்லி-அட்டானமஸ் திறன்களில் கவனம் செலுத்தவில்லை. ஷயோமி மற்றும் சோனி போன்ற நிறுவனங்கள் தங்கள் சொந்த எலக்ட்ரிக் கார்களை உருவாக்கியுள்ளன. சோனி, ஹோண்டா -வுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதற்கிடையில் கூகிள் தனது செஃல்ப்-டிரைவிங் வாகனத் திட்டமான வேமோ (Waymo) -வை மேம்படுத்த நன்கொடையாளர் வாகனங்களை, எடுத்துக்காட்டாக ஜாகுவார் ஐ-பேஸ் போன்ற கார்களை பயன்படுத்துகிறது.
ஒருவேளை 2030 க்கு அருகில் ஆப்பிள் நிறுத்திய இடத்தைப் பார்ப்போம் அதன் எலக்ட்ரிக் கார் கனவு நனவாகும். ஆப்பிள் தயாரிக்கும் எலக்ட்ரிக் காரை பார்க்க விரும்புகிறீர்களா? கீழே உள்ள கருத்துகளில் உங்கள் கருத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
0 out of 0 found this helpful