இந்தியாவில் கால்பதிக்கும் VinFast நிறுவனம், தமிழ்நாட்டில் EV உற்பத்தி ஆலையின் கட்டுமானத்தை தொடங்கியது
vinfast vf6 க்காக பிப்ரவரி 26, 2024 08:15 pm அன்று shreyash ஆல் திருத்தம் செய்யப்பட்டது
- 23 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த EV உற்பத்தி ஆலை 400 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாக இருக்கும். ஆண்டுக்கு 1.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
வியட்நாமிய கார் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் ஐந்து ஆண்டுகளில் ரூ.4,100 கோடி அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
-
வின்ஃபாஸ்ட் EV உற்பத்தி ஆலை ஆண்டுக்கு 1.5 லட்சம் யூனிட் உற்பத்தி திறனை இலக்காகக் கொண்டுள்ளது.
-
வின்ஃபாஸ்ட் VF7, வின்ஃபாஸ்ட் VF8, வின்ஃபாஸ்ட் VFe34 மற்றும் வின்ஃபாஸ்ட் VF6 ஆகிய கார்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் முதல் சில மாடல்களாக இருக்கலாம்.
-
2025 -ம் ஆண்டில் வின்ஃபாஸ்ட் இந்திய சந்தையில் கார்களை அறிமுகப்படுத்தும் என என எதிர்பார்க்கப்படுகிறது.
வியட்நாமிய கார் தயாரிப்பாளர் வின்ஃபாஸ்ட் சில காலமாக இந்திய சந்தையில் நுழைய முயற்சிகளை எடுத்து வந்தது, மேலும் உலகளாவிய போட்டியாளரான டெஸ்லா -வை விட முன்னணியில் உள்ளது. அந்த வகையில் தமிழகத்தின் தூத்துக்குடியில் 400 ஏக்கர் பரப்பளவிலான உற்பத்தி ஆலை அமைக்கும் பணிகளை தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் முன்னிலையில் துவக்கி வைத்ததன் மூலம் இலக்கை நோக்கி ஒரு படி மேலே சென்றுள்ளது. வின்ஃபாஸ்ட் நாடு முழுவதும் டீலர்ஷிப் நெட்வொர்க்கை நிறுவவும் திட்டமிட்டுள்ளது, ஆனால் இந்த முயற்சிக்கான சரியான திட்டங்களை இன்னும் அந்நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. அவர்களின் நோக்கங்கள் மற்றும் சாத்தியமான எதிர்கால தயாரிப்புகளை பற்றி இங்கே எடுப்போம்.
இந்தியாவில் வின்ஃபாஸ்ட்
வின்ஃபாஸ்ட் இந்தியாவில் அதன் EV உற்பத்தி ஆலையில் ஐந்து ஆண்டுகளில் தோராயமாக ரூ. 4,144 கோடி அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது, இது ஆண்டுக்கு 1.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த வசதி மூலம் மாநிலத்தில் 3,000 முதல் 3,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
தொடக்க விழா குறித்து கருத்து தெரிவித்திருக்கும் வின்ஃபாஸ்ட் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு.பாம் சன் சாவ்,“ தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் உற்பத்தி ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா, இந்தியாவில் நிலையான மற்றும் பசுமையான இயக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். ஒரு ஒருங்கிணைந்த எலட்ரிக் வாகன வசதியை நிறுவுவதன் மூலம், வேலை உருவாக்கம், பசுமை போக்குவரத்து மற்றும் பார்ட்னர்ஷிப் ஆகியவற்றுக்கு உதவியாக இருக்கும். மின்சார வாகனத் துறையில் ஒரு முக்கிய நிறுவனமாக வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் நிலையை இது உறுதிப்படுத்துகிறது. இந்த மைல்கல் வியட்நாம் மற்றும் இந்தியாவின் வலுவான பொருளாதாரங்களுக்கு இடையிலான பிணைப்பையும் வலுப்படுத்துகிறது, மேலும் வின்ஃபாஸ்டின் ஜீரோ எமிஷன் போக்குவரத்து எதிர்காலத்திற்கான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி, புதுமை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு களம் அமைக்கிறது”.
மேலும் பார்க்க: இந்தியாவில் மீண்டும் வரும் மிட்சுபிஷி நிறுவனம்… ஆனால் நீங்கள் நினைக்கும் விதத்தில் அல்ல
வின் ஃபாஸ்ட் பற்றிய கூடுதல் விவரங்கள்
வாகனத் துறையில் புதிய நிறுவனமான வின்ஃபாஸ்ட், வியட்நாமில் 2017 ஆண்டில் அதிகாரப்பூர்வமாகச் செயல்படத் தொடங்கியது. ஆரம்பத்தில், EV தயாரிப்பாளர் BMW கார்களை அடிப்படையாகக் கொண்ட ஸ்கூட்டர்கள் மற்றும் மாடல்களை அறிமுகப்படுத்தியது. 2021 ஆம் ஆண்டில், வின்ஃபாஸ்ட் அதன் கார்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தியது, வியட்நாமில் மூன்று மின்சார கார்கள், இரண்டு புதிய மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் ஒரு மின்சார பஸ் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது.
அடுத்த ஆண்டு, வின்ஃபாஸ்ட் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடாவில் ஷோரூம்களை நிறுவியதன் மூலம் அதன் உலகளாவிய இருப்பை விரிவுபடுத்தத் தொடங்கியது. வின்ஃபாஸ்ட் தற்போது அமெரிக்காவில் VF8 மற்றும் VF9 SUVகள் மற்றும் கனடாவில் VF6 மற்றும் VF7 SUVகள் போன்ற மாடல்களை விற்பனை செய்கிறது.
மேலும் பார்க்க: இந்தியாவில் குரூஸ் கன்ட்ரோலுடன் கிடைக்கும் விலை குறைவான 10 கார்கள் இவை
எதிர்பார்க்கப்படும் மாடல்கள் & அறிமுகம்
வின்ஃபாஸ்ட் அதன் சொந்த உற்பத்தி ஆலையை அமைப்பதன் மூலம் இந்திய சந்தையில் உள்ள அதன் ஆர்வத்தை காட்டியுள்ளது. அதே சமயம் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மாடல்களை நாம் எதிர்பார்க்க இன்னும் சிறிது காலம் ஆகும். இது 2025 ஆம் ஆண்டு முதல் முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட இறக்குமதி கார்களுடன் செயல்பாடுகளைத் தொடங்கும், பின்னர் 2026 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் CKD -களை (முழுமையாக நாக் டவுன் யூனிட்கள்) வழங்கும், பின்னர் உள்ளூர் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும். முதல் சில மாடல்களாக வின்ஃபாஸ்ட் VF7 மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப்6 எஸ்யூவி -கள் மற்றும் கிராஸ்ஓவர்களாக இருக்கலாம் இந்த மாடல்களை பற்றி விரிவாக அறிய இந்த மேலே உள்ள லிங்க் -களை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
வின்ஃபாஸ்ட் மற்றும் அதன் தயாரிப்புகள் பற்றிய உங்கள் எண்ணங்கள் என்ன? இந்தியாவில் அதிகமான வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ? கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.