2 லட்சத்திற்கும் அதிகமான ஆர்டர்களை நிலுவையில் வைத்திருக்கும் மஹிந்திரா … Scorpio Classic, Scorpio N மற்றும் Thar ஆகியற்றுக்கான தேவை அதிகம் உள்ளது
published on பிப்ரவரி 16, 2024 06:37 pm by rohit for மஹிந்திரா ஸ்கார்பியோ
- 28 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஸ்கார்பியோ N மற்றும் XUV700 ஆகிய கார்களுக்கு அதிகபட்ச சராசரி காத்திருப்பு காலம் அதாவது 6.5 மாதங்கள் வரை உள்ளது.
மஹிந்திரா -வின் சமீபத்திய நிதிநிலை அறிக்கை மாநாட்டின் போது ஒவ்வொரு மாடல்கள் தொடர்பான விவரங்கள் உட்பட, அதன் பல்வேறு மாடல்களுக்கான ஒட்டுமொத்த நிலுவையில் உள்ள ஆர்டர்கள் விவரங்களை வெளியிட்டது. பிப்ரவரி 2024 தொடக்கத்தில் ஆர்டர்களுக்கான நிலுவை என்பது 2.26 லட்சமாக உள்ளது. ஆர்டர்கள் பட்டியலில் மஹிந்திரா XUV700, மஹிந்திரா ஸ்கார்பியோ N, மற்றும் மஹிந்திரா தார் ஆகியவை முன்னணியில் உள்ளன.
மாடல் வாரியாக நிலுவையில் உள்ள ஆர்டர்கள்
மாடல் |
நிலுவையில் உள்ள ஆர்டர்கள் |
ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ N |
1,01,000 |
புதியது |
71,000 |
XUV700 |
35,000 |
பொலேரோ மற்றும் பொலேரோ நியோ |
10,000 |
XUV300 மற்றும் XUV400 |
8,800 |
மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ N ஆகிய கார்களுக்கு ஒட்டுமொத்தமாக 1.01 லட்சம் முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்கார்பியோ தொடர்பான வேரியன்ட்கள் ஒரு மாதத்திற்கு சராசரியாக 16,000 முன்பதிவுகளைப் பெறுகின்றன என்பதன் மூலமாக அதற்கான தேவையை பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. இதற்கிடையில், மஹிந்திரா தார் (ரியர்-வீல்-டிரைவ் பதிப்பு உட்பட), 71,000 ஆர்டர்கள் நிலுவையில் உள்ளன. கார் தயாரிப்பாளர் XUV700 -ன் 35,000 யூனிட்களை இன்னும் டெலிவரி செய்யவில்லை. பொலேரோ மற்றும் பொலேரோ நியோ -வுக்கு 10,000 யூனிட்கள் மற்றும் XUV300 மற்றும் XUV400 EV -க்கு சுமார் 9,000 யூனிட்கள் நிலுவையில் இருக்கின்றன.
மேலும் பார்க்க: ஜனவரி 2024 மாத மஹிந்திரா எஸ்யூவி விற்பனையில் அதிகமானோர் விரும்பிய Mahindra XUV300 பெட்ரோல் வேரியன்ட்
எஸ்யூவி -களின் சராசரி காத்திருப்பு காலம்
மாடல் |
சராசரி காத்திருப்பு காலம்* |
ஸ்கார்பியோ கிளாசிக் |
2.5-3 மாதங்கள் |
ஸ்கார்பியோ N |
6 மாதங்கள் |
தார் |
3.5 மாதங்கள் |
XUV700 |
6.5 மாதங்கள் |
பொலேரோ |
3 மாதங்கள் |
பொலேரோ நியோ |
3 மாதங்கள் |
XUV300 |
4 மாதங்கள் |
XUV400 |
3 மாதங்கள் |
* முதல் 20 நகரங்களில்
மேலே பார்த்தபடி, ஸ்கார்பியோ N மற்றும் XUV700 ஆகியவை இந்தியாவின் முதல் 20 நகரங்களில் அதிகபட்சமாக 6.5 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். ஸ்கார்பியோ கிளாசிக் காத்திருப்பு காலம் இங்கு குறைந்தது 2.5 மாதங்களாக உள்ளது.
எதற்காக இவ்வளவு ஆர்டர்கள் நிலுவையில் உள்ளன என்பதற்கான காரணத்தை மஹிந்திரா அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஆனால் முந்தைய நிலுவை ஆர்டர் எண்ணிக்கையான 3 லட்சம் யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது இது முன்னேற்றம் என்றாலும், உற்பத்தி மற்றும் விநியோகத்தில் உள்ள சில கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் டெலிவரியில் தாமதம் ஏற்பட்டுள்ளதை போல தெரிகின்றது. நீங்கள் மேலே உள்ள மஹிந்திரா மாடல்களை ஏதேனும் ஆர்டர் செய்திருந்தால், கமெண்ட் பிரிவில் நீங்கள் எவ்வளவு காலம் காத்திருக்கிறீர்கள் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
மேலும் படிக்க: மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் டீசல்