• English
  • Login / Register

ஜனவரி 2024 மாத மஹிந்திரா எஸ்யூவி விற்பனையில் அதிகமானோர் விரும்பிய Mahindra XUV300 பெட்ரோல் வேரியன்ட்

published on பிப்ரவரி 16, 2024 05:52 pm by rohit for மஹிந்திரா எக்ஸ்யூவி300

  • 19 Views
  • ஒரு கருத்தை எழுதுக

XUV300 பெட்ரோல் வேரியன்ட் விற்பனையானது ஜனவரி 2024 -ல் எஸ்யூ -வியின் மொத்த விற்பனையில் கிட்டத்தட்ட 44.5 சதவீதத்திற்கு பங்களித்ததுள்ளது.

Mahindra XUV300

இன்று புதிய வாடிக்கையாளர்கள் தார் மற்றும் XUV700 போன்ற மஹிந்திரா எஸ்யூவியை வாங்கும் போது டீசல் இன்ஜின் ஆப்ஷனுக்கு அதிக தேவை இருப்பதை பார்க்க முடிகின்றது. ஆனால் மஹிந்திரா XUV300 என்று வரும்போது அதில் மாற்றம் இருப்பதை பார்க்க முடிகின்றது. இந்த சப்-4m எஸ்யூவி காரானது அறிமுகமாகி நீண்ட காலம் ஆகிவிட்டது ஆகவே மிக விரைவில் புதுப்பிக்கப்பட உள்ளது. அதன் ஜனவரி 2024 விற்பனை புள்ளிவிவரங்கள் விற்பனையில் உள்ள மாற்றத்தை காட்டுகின்றன.

XUV300 பெட்ரோல் வேரியன்ட்டுக்கு உள்ள கூடுதல் தேவை

பவர்டிரெய்ன்

ஜனவரி 2023

ஜனவரி 2024

ஜனவரி 2024 விற்பனையின் %

பெட்ரோல்

2,533

2,453

44.49 %

டீசல் மற்றும் மின்சாரம்*

2,732

3,061

55.51 %

*இந்த எண்கள் மின்சார XUV400 -யும் உள்ளடக்கியவையாகும்.

XUV300 பெட்ரோல் ஆண்டுக்கு ஆண்டு (YoY) எண்ணிக்கையில் சிறிது சரிவைக் கண்டாலும், ஜனவரி 2024 -ல் மொத்த விற்பனை 2,000-யூனிட்டை தாண்டியது. XUV300 பெட்ரோல் மற்றும் டீசலின் மொத்த விற்பனைக்கு இடையேயான இடைவெளி ஜனவரி 2024 -ல் அதிகரித்தது. ஏனெனில் அது XUV400 EV உள்ளடக்கியது, 3,000 யூனிட்டுகளுக்கு மேல் உள்ள எண்ணிக்கையில் சுமார் 20 சதவீதமாக இருந்தது.

XUV300 பெட்ரோலுக்கு தேவை அதிகமாக இருப்பதற்கான காரணம் என்ன ?

மற்ற மஹிந்திரா எஸ்யூவி -களுக்கான பல்வேறு வேரியன்ட்களுடன் ஒப்பிடுகையில், XUV300 -யின்ன் பெட்ரோல் வேரியன்ட்களுக்கு அதிக தேவை இருப்பதாக நாங்கள் நம்புவதற்கான காரணங்களில் ஒன்று, விலையில் உள்ள வித்தியாசம்.

XUV 300 பெட்ரோல் விலை

XUV300 டீசல் விலை

ரூ.7.99 லட்சம் முதல் ரூ.13.46 லட்சம்

ரூ.10.21 லட்சம் முதல் ரூ.14.76 லட்சம்

XUV300 -ன் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டுமே மேனுவல் மற்றும் AMT (ஆட்டோமெட்டிக்) டிரான்ஸ்மிஷன்களின் ஆப்ஷனை பெறுகின்றன. ஆனால் ஒப்பிடக்கூடிய ஒவ்வொரு வகையிலும், டர்போ-பெட்ரோல் ஆப்ஷன் சுமார் ரூ. 1.5 லட்சம் வரை விலை குறைவாக உள்ளது. XUV300 -க்கு என்று தனியாக இல்லாவிட்டாலும், ஸ்கார்பியோ N மற்றும் XUV700 போன்ற பெரிய மஹிந்திரா மாடல்களை விட சிறிய எஸ்யூவி -ஐ வாங்க முடிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் முக்கியமானது.

Mahindra XUV300 TGDI badge

இரண்டு டர்போ-பெட்ரோல் பவர் ட்ரெயின்கன் ஆப்ஷனை பெறும் ஒரே சப்-4m எஸ்யூவி இதுவாகும். இரண்டும் 1.2-லிட்டர் டர்போ யூனிட்களாக இருக்கும்போது, ​​ஒன்று 110 PS/200 Nm அவுட்புட்டை கொடுக்கின்றது, மற்றொன்று 130 PS மற்றும் 250 Nm வரை அவுட்புட்டை கொடுக்கும்.

மேலும் படிக்க: ஜனவரி 2024 மாதத்தில் Mahindra Scorpio வாடிக்கையாளர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் டீசல் பவர்டிரெய்னை தேர்ந்தெடுத்துள்ளனர்

போட்டியாளர்கள் மற்றும் ஃபேஸ்லிஃப்ட்

2024 Mahindra XUV300

மஹிந்திரா XUV300 கார் ஹூண்டாய் வென்யூ, மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட், டாடா நெக்ஸான், ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் சப்-4m கிராஸ்ஓவர் ஆகிய கார்களுக்கு போட்டியாக உள்ளது. விரைவில் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் வெளியிடப்பட உள்ளது. இதுபெரிய டச் ஸ்கிரீன் மற்றும் சில புதிய வசதிகளுடன் உள்ளேயும் வெளியேயும் புதிய தோற்றத்துடன் வரும்.

மேலும் படிக்க: மஹிந்திரா XUV300 AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Mahindra எக்ஸ்யூவி300

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience