Mahindra XUV300 மற்றும் Mahindra XUV3OO: இரண்டுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள் என்னவென்று தெரியுமா ?
published on ஏப்ரல் 30, 2024 06:10 pm by rohit for மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO
- 44 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதுப்பிக்கப்பட்ட XUV300 ஆனது ஒரு புதிய பெயரை மட்டுமின்றி முன்பை விட அளவில் மிகவும் பெரிய அளவில் வருகிறது; இது முழுவதும் புதுப்பிக்கப்பட்ட ஸ்டைலிங்குடன் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது அதன் செக்மென்ட்டில் மிகவும் வசதிகள் நிறைந்த ஆப்ஷன்களில் ஒன்றாகும்
மஹிந்திரா XUV 3XO -ன் அப்டேட்டட் வெர்ஷனாக மஹிந்திரா XUV 3XO காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட சப்காம்பாக்ட் எஸ்யூவி ஆனது குறிப்பிடத்தக்க வெளிப்புற வடிவமைப்பு மாற்றங்கள், XUV400 EV-யால் ஈர்க்கப்பட்ட முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட உட்புறம் மற்றும் ஏராளமான புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த கட்டுரையில், XUV 3XO மற்றும் அதன் முன்னோடிக்கு இடையே உள்ள முதன்மையான காட்சி வேறுபாடுகளை ஆராய்வோம்.
முன் பக்கம்
மஹிந்திரா XUV 3XO-ஐ ரீடிசைன் செய்யப்பட்ட ஸ்பிளிட் கிரில் மூலம் புதுப்பித்துள்ளது. இது XUV300 -ல் இருந்து பெறுகிறது. கிரில் ஐந்து குரோம் ஸ்லேட்டுகளை கொண்டுள்ளது மற்றும் புதிய மஹிந்திரா லோகோவை பெறுகிறது. குறிப்பிடத்தக்க மாற்றங்களில் நீளமான ஃபாங் வடிவ LED DRL-கள் மற்றும் அப்டேட்டட் ஹெட்லைட் கிளஸ்டர்கள் ஹவுசிங் ப்ரொஜெக்டர் யூனிட்கள் ஆகியவை அடங்கும். கூடுதலாக மாற்றியமைக்கப்பட்ட பம்பரில் ஒரு பெரிய ஏர் டேம், ஃப்ரன்ட் கேமரா மற்றும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ரேடார் ஆகியவை உள்ளன.
பக்கவாட்டு பகுதி
XUV 3XO புதிதாக வடிவமைக்கப்பட்ட 17-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்களுடன் அறிமுகமாகிறது. இந்த அப்டேட்டுகளைத் தவிர எஸ்யூவியின் பக்கவாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லை.
பின் பக்கம்
XUV 3XO -ன் பின்பக்கத்தில் உள்ள மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்று ரேப்பரவுண்ட் மற்றும் கனெக்டட் LED டெயில் லைட்ஸ் ஆகும். ரியரில் புதிய 'XUV 3XO' பேட்ஜிங் மற்றும் வேரியன்ட்-குறிப்பிட்ட மோனிகர்களை கொண்டுள்ளது. இது ஒரு பெரிய சில்வர் ஸ்கிட் பிளேட்டைக் கொண்ட புதிய பம்பர் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க: Mahindra Thar 5-door காரின் உட்புறம் மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது - இதில் ADAS கிடைக்குமா?
கேபின்
மஹிந்திரா XUV3XO -வின் கேபினை முழுமையாக ரீடிசைன் செய்துள்ளது. XUV 3XO இப்போது XUV400 -ல் உள்ளதைப் போன்ற டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்களை கொண்டுள்ளது, அதே ஸ்டீயரிங் வீல் டிஸைனையும் கொண்டுள்ளது. கூடுதலாக, கேபின் டேஷ்போர்டில் சாஃப்ட்-டச் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி, 65W USB டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட், மாற்றியமைக்கப்பட்ட சென்ட்ரல் ஏசி வென்ட்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கிளைமேட் கண்ட்ரோல் பேனல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மிகப் பெரிய டச் ஸ்கிரீன் மற்றும் டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே
XUV300 -ன் 7-இன்ச் டச்ஸ்கிரீன் யூனிட்டுக்கு பதிலாக XUV 3XO ஆனது XUV400 -லிருந்து பெறப்பட்ட ஒரு பெரிய 10.25-இன்ச் யூனிட் உடன் வருகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட ஸ்கிரீன் வேரியன்ட்டை பொறுத்து வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றை சப்போர்ட் செய்கின்றது.
XUV 3XO ஆனது XUV400 EV போன்ற அதே 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது நவீனமயமாக்கப்பட்ட தோற்றம் மற்றும் செயல்பாட்டிற்காக பழைய டூயல்-பாட் அனலாக் கிளஸ்டருக்கு மாற்றாக அமைகிறது.
மேலும் பார்க்க: கோடையில் கார் கேபினை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டுமா? இந்த எளிய உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுங்கள்
சன்ரூஃப்
ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் XUV300 உடன் ஒப்பிடும்போது XUV 3XO-இல் உள்ள ஒரு புதிய அம்சம் செக்மென்ட்டின் முதல் பனோரமிக் சன்ரூஃப் ஆகும். அதன் பெரும்பாலான செக்மென்ட் போட்டியாளர்களில் காணப்படும் வழக்கமான சன்ரூஃப் போல இல்லாமல் XUV 3XO பெரிய பனோரமிக் ஆப்ஷனை வழங்குகிறது.
பிற வசதிகளைப் பற்றிய விவரம்
7-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ( Harman Kardon ) மியூசிக் சிஸ்டம் (சப்வூஃபர் உட்பட), வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் டூயல்-ஜோன் ஏர் கண்டிஷனிங் உள்ளிட்ட பல கூடுதல் வசதிகளுடன் XUV 3XO -ஐ மஹிந்திரா வழங்குகிறது. பாதுகாப்புக்காக இது 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ஃப்ரன்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் லெவல்-2 அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டங்களுடன் (ADAS) வருகிறது.
இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்
பழைய மாடலை போலவே XUV 3XO ஆனது டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. அதன் விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:
விவரங்கள் |
1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் |
1.2 லிட்டர் TGDi டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
112 PS |
130 PS |
117 PS |
டார்க் |
200 Nm |
230 Nm, 250 Nm |
300 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீட் MT, 6-ஸ்பீட் AT |
6-ஸ்பீட் MT, 6-ஸ்பீட் AT |
6-ஸ்பீட் MT, 6-ஸ்பீட் AMT |
கிளைம் செய்யப்படும் மைலேஜ் |
18.89 கிமீ/லி, 17.96 கிமீ/லி |
20.1 கிமீ/லி, 18.2 கிமீ/லி |
20.6 கிமீ/லி, 21.2 கிமீ/லி |
XUV 3XO -ன் பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களும் ஜிப், ஜாப் மற்றும் ஜூம் போன்ற மூன்று டிரைவ் மோட்களை வழங்குகின்றன
விலை வரம்பு மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா XUV 3XO காரின் விலை ரூ. 7.49 லட்சத்தில் இருந்து ரூ. 15.49 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை இருக்கும். இது கியா சோனெட், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் மற்றும் வரவிருக்கும் ஸ்கோடா சப்-4m எஸ்யூவி போன்ற பிரபலமான மாடல்களுடன் போட்டியிடுகிறது. கூடுதலாக XUV 3XO ஆனது மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் போன்ற சப்-4m கிராஸ்ஓவர்களுக்கு எஸ்யூவி மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க: மஹிந்திரா XUV 3XO ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful