• English
  • Login / Register

பாரத் NCAP சோதனையில் 5 ஸ்டார் மதிப்பீட்டை பெற்றது Mahindra Thar Roxx

published on நவ 14, 2024 04:18 pm by ansh for மஹிந்திரா தார் ராக்ஸ்

  • 19 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மஹிந்திராவின் 3 எஸ்யூவி -களும் ஒரே மாதிரியான மதிப்பீட்டை பகிர்ந்து கொள்கின்றன. அவற்றில் மிகவும் பாதுகாப்பானது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தார் ராக்ஸ் ஆகும்.

Mahindra Thar Roxx, XUV 3XO, and XUV400 EV Score 5 Stars In Bharat NCAP

  • தார் ராக்ஸ் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் (AOP) 32 -க்கு 31.09 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் (COP) 49 -க்கு 45 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

  • பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்களில் 5 ஸ்டார் மதிப்பீட்டை பெற்ற முதல் பாடி-ஆன்-ஃபிரேம் எஸ்யூவி தார் ராக்ஸ் ஆகும்.

  • XUV 3XO -ன் AOP மதிப்பெண் 32 -க்கு 29.36 ஆகவும். COP மதிப்பெண் 49 -க்கு 43 ஆகவும் உள்ளது.

  • XUV400 AOP -க்கு 32 -க்கு 30.38 புள்ளிகளையும் COP -க்கு 49 -க்கு 43 புள்ளிகளையும் பெற்றது.

  • இந்த பாதுகாப்பு மதிப்பீடுகள் அனைத்தும் எஸ்யூவி -களின் அனைத்து வேரியன்ட்களுக்கும் பொருந்தும்.

பாரத் என்சிஏபி அமைப்பால் மஹிந்திரா தார் ராக்ஸ், XUV 3XO, மற்றும் XUV400 EV ஆகிய மூன்று கார்களும் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டன. சோதனையில் மஹிந்திரா 3 எஸ்யூவி -களுக்கும் 5-ஸ்டார் கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு மதிப்பீடு கிடைத்துள்ளது. இந்த எஸ்யூவி -கள் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக முன்பக்கம், பின்பக்கம் மற்றும் பக்கவாட்டு பகுதி என முக்கியமான இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கூடுதல் விவரங்கள் இங்கே உள்ளன.

தார் ராக்ஸ்: பெரியவர்களுக்கான பாதுகாப்பு

ஃபிரன்ட்டல் ஆஃப்செட் டிஃபார்மபிள் பேரியர் டெஸ்ட்: 16 -க்கு 15.09

சைடு மூவபிள் டிஃபார்மபிள் பேரியர் டெஸ்ட்: 16 -க்கு 16

சோதனை செய்யப்பட்ட வேரியன்ட்கள்: MX3 மற்றும் AX5L

ஃபிரன்ட்டல் ஆஃப்செட் இம்பாக்ட் சோதனையில் ஓட்டுநர் மற்றும் சக பயணிகள் இருவரும் தங்கள் தலை, கழுத்து மற்றும் தொடைகளுக்கு 'நல்ல' பாதுகாப்பு கிடைத்தது. சக பயணிக்கு முழு உடலுக்கும் 'நல்ல' பாதுகாப்பு கிடைத்த போதிலும் ஓட்டுநரின் மார்பு மற்றும் கால்கள் 'போதுமான' அளவுக்கு மட்டுமே பாதுகாப்பு கிடைத்தது.

Mahindra Thar Roxx BNCAP Crash Test

சைடு இம்பாக்ட் மற்றும் சைடு போல் போல் இம்பாக்ட் சோதனைகளில் ஓட்டுனர் தலை, மார்பு, இடுப்பு மற்றும் இடுப்புக்கு 'நல்ல' பாதுகாப்பு கிடைத்தது.

மேலும் படிக்க: 2024 நவம்பர் மாதம் மஹிந்திரா தார் மற்றும் தார் ராக்ஸ் கார்களின் காத்திருப்பு கால விவரங்கள்

பெரியவர்களுக்கான பாதுகாப்பில் தார் ராக்ஸ் 32க்கு 31.09 மதிப்பெண்கள் பெற்றது. தார் ராக்ஸ் ஆனது 5-நட்சத்திர பாரத் NCAP மதிப்பீட்டைப் பெற்ற முதல் பாடி-ஆன்-ஃபிரேம் எஸ்யூவி ஆகும். இது ஒரு இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) காருக்கு கிடைத்த அதிகபட்ச மதிப்பெண் ஆகும்.

தார் ராக்ஸ்: குழந்தைகளுக்கான பாதுகாப்பு

Mahindra Thar Roxx BNCAP Crash Test

டைனமிக் ஸ்கோர்: 24க்கு 24

CRS நிறுவல் மதிப்பெண்: 12 -க்கு 12

வாகன மதிப்பீட்டு மதிப்பெண்: 13க்கு 9

18 மாத டம்மி குழந்தை மற்றும் 3 வயது டம்மி குழந்தை ஆகிய இரண்டும் குழந்தை இருக்கையில் பின்புறமாக நிறுவப்பட்டது. மேலும் ஆஃப்-ரோடர் முன் மற்றும் சைடு இம்பாக்ட் சோதனைகளில் முழு மதிப்பெண்களை எட்டியது.

குழந்தைகளுக்கான பாதுகாப்பில் தார் ராக்ஸ் 49 -க்கு 45 புள்ளிகளைப் பெற்றது.

XUV 3XO: பெரியவர்களுக்கான பாதுகாப்பு

ஃப்ரண்டல் ஆஃப்செட் டிஃபார்மபிள் பேரியர் டெஸ்ட்: 16 -க்கு 13.36

சைடு அசையும் டிஃபார்மபிள் பேரியர் சோதனை: 16 -க்கு 16

சோதிக்கப்பட்ட வேரியன்ட்கள்: MX2 மற்றும் AX7L

முன்சைடு இம்பாக்ட் சோதனையில் டிரைவர் மற்றும் சக பயணி இருவருக்கும் தலை, கழுத்து மற்றும் தொடைகளுக்கு 'நல்ல' பாதுகாப்பு கிடைத்தது. உடன் பயணிக்கும் டிபியாஸ் -க்கு 'நல்ல' பாதுகாப்பு கிடைத்தது. இருப்பினும், ஓட்டுநரின் மார்பு, பாதங்கள் மற்றும் வலது காலில் பாதுகாப்பு 'போதுமானதாக' கருதப்பட்டது. மேலும் ஓட்டுநரின் இடது காலின் பாதுகாப்பு 'விளிம்பு' நிலை அளவுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது.

Mahindra XUV 3XO BNCAP Crash Test

மறுபுறம், சைடு மற்றும் சைடு போல் இம்பாக்ட் சோதனைகளின் போது, ​​ஓட்டுநரின் முழு உடலும் தலை, மார்பு, இடுப்பு மற்றும் இடுப்புக்கு 'நல்ல' பாதுகாப்பைப் பெற்றது.

மேலும் படிக்க: Skoda Kylaq மற்றும் முக்கிய போட்டியாளர்கள்: அளவுகள் ஒப்பீடு

பெரியவர்களுக்கான பாதுகாப்பில் XUV 3XO 32 -க்கு 29.36 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

XUV 3XO: குழந்தைகளுக்கான பாதுகாப்பு

Mahindra XUV 3XO BNCAP Crash Test

டைனமிக் மதிப்பெண்: 24 -க்கு 24

CRS இன்ஸ்டாலேஷன் மதிப்பெண்: 12 -க்கு 12

வாகன மதிப்பீட்டு மதிப்பெண்: 13க்கு 7

குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பரிசோதிக்கப்பட்ட போது, ​​18 மாத குழந்தை மற்றும் 3 வயது குழந்தை இருவருக்கும் குழந்தை இருக்கை பின்புறமாக பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளுக்கும் முன் மற்றும் சைடு இம்பாக்ட் சோதனைகள் செய்யப்பட்டன மற்றும் 3XO இரண்டிலும் முழு புள்ளிகளைப் பெற்றது.

குழந்தைகள் பாதுகாப்பில் மஹிந்திரா XUV 3XO 49 புள்ளிகளுக்கு 43 புள்ளிகளைப் பெற்றது.

XUV400 EV: பெரியவர்களுக்கான பாதுகாப்பு

ஃப்ரண்டல் ஆஃப்செட் டிஃபார்மபிள் பேரியர் டெஸ்ட்: 16 -க்கு 14.38

சைடு மூவபிள் டிஃபார்மபிள் பேரியர் டெஸ்ட்: 16 -க்கு 16

சோதனை செய்யப்பட்ட வேரியன்ட்கள்: EC மற்றும் EL

ஃபிரன்டல் இம்பாக்ட் சோதனையின் போது ​​XUV400 ஓட்டுநர் மற்றும் சக பயணிகளின் தலை, கழுத்து மற்றும் தொடைகளுக்கு 'நல்ல' பாதுகாப்பை வழங்கியது. ஓட்டுநருக்கு வலது காலுக்கு 'நல்ல' பாதுகாப்பு கிடைத்தது, அதே நேரத்தில் சக பயணிகளுக்கு ஒட்டுமொத்தமாக 'நல்ல' பாதுகாப்பு கிடைத்தது. அதே சமயம் ஓட்டுநரின் மார்பு, பாதங்கள் மற்றும் இடது காலுக்கான பாதுகாப்பு 'போதுமானதாக' இருந்தது.

Mahindra XUV400 EV BNCAP Crash Test

தார் ராக்ஸ் மற்றும் XUV 3XO போலவே XUV400 ஆனது டிரைவரின் தலை, மார்பு, இடுப்பு மற்றும் இடுப்புக்கு சைடு மற்றும் சைடு போல் சோதனைகளில் 'நல்ல' ஒட்டுமொத்த பாதுகாப்பை வழங்கியது.

மேலும் படிக்க: புதிய Mahindra XEV 9e மற்றும் BE 6e இன்டீரியர் விவரங்கள் வெளியாகியுள்ளன

பெரியவர்களுக்கான பாதுகாப்பில் இது 32 -க்கு 30.38 மதிப்பெண்களைப் பெற்றது. இது அதன் புதுப்பிக்கப்பட்ட ICE உடன்பிறப்பு (3XO) பெற்றதை விட இது அதிகம்.

XUV400 EV: குழந்தைகளுக்கான பாதுகாப்பு

Mahindra XUV400 EV BNCAP Crash Test

டைனமிக் மதிப்பெண்: 24 -க்கு 24

CRS இன்ஸ்டாலேஷன் மதிப்பெண்: 12 -க்கு 12

வெஹிகிள் அசெஸ்மென்ட் மதிப்பெண்: 13 -க்கு 7

XUV400 ஆனது XUV 3XO போன்ற குழந்தைகள் பயணிகள் பாதுகாப்பில் அதே முடிவுகளைக் பெற்றது. டம்மியான 18 மாத குழந்தை மற்றும் 3 வயது குழந்தை இரண்டும் குழந்தை இருக்கை -யின் பின்புறமாக பொருத்தப்பட்டன. மேலும் முன் மற்றும் சைடு இம்பாக்ட் சோதனைகளில் XUV400 முழு டைனமிக் மதிப்பெண்ணுடன் வெளிவந்தது.

குழந்தைகள் பாதுகாப்பில் XUV400 EV ஆனது 49 -க்கு 43 புள்ளிகளைப் பெற்றது.

கார்களில் உள்ள பாதுகாப்பு வசதிகள்

Mahindra Thar Roxx Airbag

3 கார்களும் 6 ஏர்பேக்குகள் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கர்களுடன் வருகின்றன. தார் ராக்ஸ் மற்றும் XUV 3XO போன்ற மாடல்கள் 360 டிகிரி கேமரா மற்றும் லெவல்-2 ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) போன்ற வசதிகளை கொண்டுள்ளன.

மேலும் படிக்க: 2024 அக்டோபர் மாதம் மஹிந்திரா டீசல் எஸ்யூவி -கள் 70 சதவீதத்திற்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளன 

இந்த மாடல்களின் சில வேரியன்ட்கள் மட்டுமே கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் கூட பாரத் NCAP பாதுகாப்பு மதிப்பீடு 3 எஸ்யூவி -களின் அனைத்து வேரியன்ட்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

Mahindra Thar Roxx

மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் விலை ரூ.12.99 லட்சம் முதல் ரூ.22.49 லட்சம் வரையில் உள்ளது. XUV 3XO காரின் விலை ரூ. 7.79 லட்சம் முதல் ரூ. 15.49 லட்சம் வரையிலும், XUV400 விலை ரூ.15.49 லட்சம் முதல் ரூ. 19.39 லட்சம் வரையிலும் உள்ளது. 

விலை விவரங்கள் அனைத்து எக்ஸ்-ஷோரூம் -க்கானவை

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: தார் ராக்ஸ் டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Mahindra தார் ROXX

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • ஸ்கோடா enyaq iv
    ஸ்கோடா enyaq iv
    Rs.65 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • வோல்க்ஸ்வேகன் id.4
    வோல்க்ஸ்வேகன் id.4
    Rs.65 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • மஹிந்திரா பிஇ 09
    மஹிந்திரா பிஇ 09
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • வோல்வோ ex90
    வோல்வோ ex90
    Rs.1.50 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • மஹிந்திரா எக்ஸ்யூவி இ8
    மஹிந்திரா எக்ஸ்யூவி இ8
    Rs.35 - 40 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
×
We need your சிட்டி to customize your experience