பிப்ரவரி 2024 மாத சப்-4எம் எஸ்யூவி விற்பனையில் Tata Nexon மற்றும் Kia Sonet கார்களை முறியடித்தது Maruti Brezza

published on மார்ச் 11, 2024 05:58 pm by rohit for மாருதி brezza

  • 20 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இங்குள்ள இரண்டு எஸ்யூவி -கள் மட்டுமே மாதந்தோறும் (MoM) விற்பனை எண்ணிக்கையில் வளர்ச்சியைக் கண்டன.

Sub-4m SUVs February 2024 sales

டாடா நெக்ஸான் மற்றும் மாருதி பிரெஸ்ஸா உட்பட சப்-4m எஸ்யூவி பிரிவில் ஏழு முக்கிய மாடல்கள் உள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக நெக்ஸான் இந்த பிரிவில் ஆதிக்கம் செலுத்திய நிலையில் பிப்ரவரி மாதத்தில் மாருதி எஸ்யூவி மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது. இந்த பிரிவு ஒட்டுமொத்தமாக 55000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையை கண்டது. ஆனால் ஜனவரி 2024 உடன் ஒப்பிடும்போது இது 12.5 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.

2024 பிப்ரவரி மாத விற்பனையில் இந்த எஸ்யூவி -கள் எவ்வாறு செயல்பட்டன என்பதைப் பற்றிய விரிவான தகவல்கள் இங்கே:

சப்-காம்பாக்ட் எஸ்யூவி -கள் & கிராஸ் ஓவர்கள்

 

பிப்ரவரி 2024

ஜனவரி 2024

MoM வளர்ச்சி

நடப்பு சந்தை பங்கு (%)

நடப்பு சந்தை பங்கு (கடந்த ஆண்டு%)

YoY mkt பங்கு (%)

சராசரி விற்பனை (6 மாதங்கள்)

மாருதி பிரெஸ்ஸா

15765

15303

3.01

28.04

27.53

0.51

14527

டாடா நெக்ஸான்

14395

17182

-16.22

25.6

24.27

1.33

14607

கியா சோனெட்

9102

11530

-21.05

16.19

17.15

-0.96

5595

ஹூண்டாய் வென்யூ

8933

11831

-24.49

15.89

17.43

-1.54

11355

மஹிந்திரா XUV300

4218

4817

-12.43

7.5

6.64

0.86

4643

நிஸான் மேக்னைட்

2755

2863

-3.77

4.9

3.8

1.1

2504

ரெனால்ட் கைகர்

1047

750

39.6

1.86

3.14

-1.28

828

மொத்தம்

56215

64276

-12.54

       

முக்கிய விவரங்கள்

Maruti Brezza

  • மாருதி பிரெஸ்ஸா 15000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையான நிலையில் அதிகம் விற்பனையாகும் சப்-4எம் எஸ்யூவி பட்டியலில் முதலிடத்துக்கு திரும்பியது. அதன் சந்தைப் பங்கு 28 சதவீதத்திற்கு சற்று அதிகமாக இருந்தது.

  • டாடா நெக்ஸான் 14000 யூனிட்டுகளுக்கு மேல் மொத்த விற்பனையுடன் இரண்டாவது இடத்திற்கு சென்றது. அதன் மந்த் ஓவர் மந்த் எனப்படும் ஒரு மாதத்துக்கான (MoM) எண்ணிக்கை 16 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது. மற்றும் அதன் மொத்த விற்பனை  சராசரி 6-மாத விற்பனை எண்ணிக்கையுடன் கூட பொருந்தவில்லை. எண்ணிக்கையில் டாடா நெக்ஸான் EV -யின் விற்பனைத் தரவும் அடங்கும்.

Kia Sonet

  • அதே நேரத்தில் பிப்ரவரி 2024 மாதத்தில் கியா சோனெட் விற்பனை அதன் சராசரி 6 மாத விற்பனை புள்ளிவிவரங்களை முறியடித்தது. எஸ்யூவி அதன் MoM எண்ணில் 21 சதவீதத்திற்கும் அதிகமான வீழ்ச்சியைக் கண்டது. அதன் ஆண்டுக்கு ஆண்டு (YoY) சந்தைப் பங்கு கூட சுமார் 1 சதவீதம் குறைந்துள்ளது.

  • ஹூண்டாய் வென்யூ கிட்டத்தட்ட 9000 யூனிட்களின் மொத்தமாக விற்பனையானதால் சோனெட் காரின் விற்பனைக்கு நெருக்கமாக இருந்தது. பிப்ரவரி 2024 மாதத்தில் அதன் சந்தைப் பங்கு 16 சதவீதத்தை நெருங்கியது. மொத்த விற்பனை புள்ளிவிவரங்களில் ஹூண்டாய் வென்யூ N லைன் விற்பனையும் அடங்கும்.

Mahindra XUV300

  • மஹிந்திரா XUV300 4000-யூனிட் விற்பனையைக் கடக்க முடிந்தது. இருப்பினும் அதன் சராசரி 6-மாத விற்பனை எண்ணிக்கையைத் தாண்ட முடியவில்லை. அதன் சந்தைப் பங்கு 7.5 சதவீதமாக இருந்தது.

  • நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகியவை இரண்டின் ஒட்டுமொத்த விற்பனையை சேர்த்தாலும் அதனால் 4000-யூனிட் விற்பனையை தாண்ட முடியவில்லை. ஆகவே XUV300 -க்கு பின்னால் இருந்தது. கைகர் மட்டுமே மற்ற எஸ்யூவி (இங்குள்ள பிரெஸ்ஸாவிற்கு பிறகு) கிட்டத்தட்ட 40 சதவிகிதம் நேர்மறையான MoM வளர்ச்சியைக் கண்டது. 

மேலும் படிக்க: இந்த மார்ச் மாதத்தில் சப்காம்பாக்ட் எஸ்யூவி -யை வீட்டிற்கு எடுத்துச் செல்ல எவ்வளவு காலம் ஆகும் என்பதை இங்கே பார்க்கலாம்

மேலும் படிக்க: பிரெஸ்ஸா ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மாருதி brezza

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience