2025 ஆண்டில் 4 மாருதி கார்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட ுகிறது
மாருதி இ விட்டாரா க்காக டிசம்பர் 23, 2024 07:55 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 120 Views
- ஒரு கருத்தை எழுதுக
இரண்டு ஃபேஸ்லிஃப்ட் -களுடன் மாருதி தனது முதல் EV -யை இந்தியாவிற்கு கொண்டு வரலாம். மற்றும் அதன் பிரபலமான எஸ்யூவி -யின் 3-சீரிஸ் பதிப்பையும் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான கார் தயாரிப்பாளரான மாருதி வரும் 2025 ஆம் ஆண்டில் இரண்டு புதிய தயாரிப்புகள் மற்றும் சில ஃபேஸ்லிஃப்ட் கார்களை கொண்டு வரலாம் எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் மாருதி இந்தியாவிற்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கக்கூடிய அனைத்து கார்களையும் பார்ப்போம்:
மாருதி இ-விட்டாரா
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஜனவரி 2025
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.22 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்)
தயாரிப்புக்கு தயாராகவுள்ள மாருதி இ விட்டாரா. இது ஏற்கெனவே இத்தாலியில் வெளியிடப்பட்டு விட்டது. சமீபத்தில் மாருதியில் டீசரும் வெளியிடப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் 2025 ஜனவரி 17 மற்றும் 22 -க்கு இடையில் நடைபெறும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் அறிமுகமாகலாம். குளோபல்-ஸ்பெக் மாடல் 49 kWh மற்றும் 61 kWh பேட்டரி பேக்குகளுடன் வருகிறது. டிரைவிங் ரேஞ்ச் சுமார் 550 கி.மீ வரை இருக்கும். இந்திய-ஸ்பெக் மாடலின் விவரங்களும் அப்படியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.1-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஃபிக்ஸ்டு பனோரமிக் ரூஃப், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) , 360 டிகிரி கேமரா மற்றும் லெவல்-2 ADAS வசதிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7 இருக்கைகள் கொண்ட மாருதி கிராண்ட் விட்டாரா
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஜூன் 2025
மாருதி கிராண்ட் விட்டாரா -வின் 7-சீட் வெர்ஷன் சமீபத்தில் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் போது படம்பிடிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் காம்பாக்ட் எஸ்யூவி ஆனது இந்தியாவில் 2025 ஆண்டில் வெளியிடப்படலாம் என்று தெரிய வருகிறது. இருக்கை தளவமைப்பு மட்டுமல்ல, சோதனைக் காரின் ஹெட்லைட்கள், டெயில் லைட்கள், பம்பர் மற்றும் டேஷ்போர்டு உள்ளிட்ட வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். 5 இருக்கைகள் கொண்ட கிராண்ட் விட்டாரா ஆனது இ-விட்டாராவால் இருந்து நிறைய விஷயங்களை பெற்றது போல தோன்றியது. இருப்பினும் இந்த வரவிருக்கும் 7-சீட்டர் எஸ்யூவி பற்றி மேலும் கருத்து தெரிவிக்க மாருதியிடம் இருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக நாம் காத்திருக்க வேண்டும்.
9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற 5-சீட்டர் பதிப்பின் வசதிகளை இது தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலும் படிக்க: 2024 ஆண்டில் வெளியான டாப் 10 மைலேஜ் கொண்ட கார்கள்
மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட்
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: மார்ச் 2025
மாருதி பலேனோ இப்போது அதன் இரண்டாம் தலைமுறை அவதாரத்தில் உள்ளது. மேலும் இது 2022 ஆண்டில் அதன் கடைசி ஃபேஸ்லிஃப்டை பெற்றது. இந்த காருக்கு ஒரு அப்டேட் கொடுக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது என்பதால் 2025 ஆண்டு மார்ச் மாதம் மாருதி பலேனோவின் மற்றொரு ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தலாம். மேலும் இந்த ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பலேனோ ஒரு ஹைப்ரிட் பவர்டிரெய்ன் செட்டப்பை கொண்டிருக்கும் எனவும் தகவல் பரவி வருகிறது. 2024 தொடக்கத்தில் இருந்து மாருதி இதற்கான வேலைகளில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
ஃபேஸ்லிஃப்டட் பலேனோ ஒரு பெரிய டச் ஸ்கிரீன், ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, சிங்கிள்-பேன் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், டயர்-பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (டிபிஎம்எஸ்) மற்றும் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) ஆகியவற்றுடன் வரலாம்.
மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஆகஸ்ட் 2025
2022 ஆண்டில் ஃபேஸ்லிஃப்டை பெற்ற பலேனோவை போலவே மாருதி பிரெஸ்ஸா -வுக்கும் அதே ஆண்டில் ஒரு அப்டேட் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு எந்த ஒரு விரிவான அப்டேட்டும் கொடுக்கப்படவில்லை. ஸ்கோடா கைலாக் மற்றும் கியா சைரோஸ் போன்ற புதிய சப் காம்பாக்ட் எஸ்யூவி -கள் சப்-4மீ எஸ்யூவி பிரிவில் போட்டியை அதிகரித்துள்ளதால் போட்டியாளர்களை எதிர்கொள்ள கூடுதல் வசதிகள் உடன் பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் வரலாம்.
பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வென்டிலேஷன் மற்றும் பவர்டு முன் இருக்கைகள் மற்றும் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) போன்ற வசதிகள், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பிரெஸ்ஸாவின் கொடுக்கப்படலாம். மஹிந்திரா XUV 3XO ஆனது டாடா நெக்ஸான் மற்றும் கியா சைரோஸ் போன்ற மாடல்கள் சப்காம்பாக்ட் எஸ்யூவி இடத்தில் இருப்பதால் மாருதி இதில் ஒரு பனோரமிக் சன்ரூஃபை கொடுக்கலாம் என எதிர்பார்க்கிறோம்.
வேறு எந்த காரை மாருதி இந்தியாவிற்கு கொண்டு வரக்கூடும் என்று நினைக்கிறீர்கள்? கீழே உள்ள கமென்ட் பகுதியில் எங்களிடம் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.