Renault Triber மற்றும் Kiger கார்கள் இந்திய இராணுவத்தில் இப்போது இணைந்துள்ளன
published on அக்டோபர் 23, 2024 05:39 pm by rohit for ரெனால்ட் டிரிபர்
- 37 Views
- ஒரு கருத்தை எழுதுக
ரெனால்ட் நிறுவனம் இறுதியாக அதன் கார்களை இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளது. மூன்று மாடல்கள் சில யூனிட்களை இப்போது இந்திய இராணுவத்தின் 14 படையணிகளில் இடம் பெற்றுள்ளன.
2024 செப்டம்பர் மாதம் ரெனால்ட் இந்தியா நிறுவனம் ரெனால்ட் க்விட், ரெனால்ட் ட்ரைபர், மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய மாடல்களின் சில யூனிட்களை இந்திய இராணுவத்தின் 14 படையணிகளுக்கு (எ.கா. ஃபயர் அண்ட் ஃப்யூரி கார்ப்ஸ்) பரிசளித்தது. இப்போது ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் மற்றும் கைகர் என இரண்டு மாடல்களை இந்திய இராணுவத்தின் கிழக்கு படையணியிடம் ஒப்படைத்துள்ளது.
ரெனால்ட் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் நாட்டின் தலைமை நிர்வாக அதிகாரியுமான வெங்கட்ராம் எம்,"இந்த வாகனங்களை வழங்குவதன் மூலம் இந்திய இராணுவத்தின் கிழக்கு படையணிக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் உண்மையிலேயே பெருமை கொள்கிறோம். ட்ரைபர் மற்றும் கைகர் ஆகியவை தரம், பாதுகாப்பு மற்றும் மேக் இன் இந்தியா முயற்சியில் ரெனால்ட்டின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன. இந்த வாகனங்கள் கிழக்குக் கட்டளை பிரிவின் இயக்கம் மற்றும் தளவாடத் திறன்களை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். ரெனால்ட் இந்தியா சமூகத்திற்கு சேவை செய்வதற்கும், இந்திய தேசத்தை பாதுகாப்பவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளது. இந்த பங்களிப்பு அவர்களின் விலைமதிப்பற்ற சேவைக்கான எங்கள் பாராட்டுக்கான ஒரு சிறிய பங்களிப்பாகும்."
ரெனால்ட் ட்ரைபர் பற்றிய ஒரு பார்வை
ட்ரைபர் என்பது ரெனால்ட்டின் சப்-4m கிராஸ்ஓவர் MPV ஆகும். இது 4 வேரியன்ட்களில் கிடைக்கிறது: RXE, RXL, RXT மற்றும் RXZ. இதில் ஏழு பேர் வரை பயணிக்க முடியும்.
ரெனால்ட் 1-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் (72 PS/96 Nm), 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது. 8-இன்ச் டச் ஸ்கிரீன், 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவை காரில் உள்ளன. இதன் பாதுகாப்புக்காக 4 ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர்வியூ கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) ஆகியவை உள்ளன.
மேலும் படிக்க: 2024 ரெனால்ட் ட்ரைபர் விமர்சனம்: பட்ஜெட்டில் ஒரு குடும்பத்துக்கான கார்
ரெனால்ட் கைகர்: ஒரு விரைவான பார்வை
ரெனால்ட் கைகர் ஒரு சப்-4m எஸ்யூவி ஆகும். இது RXE, RXL, RXT, RXT (O) மற்றும் RXZ என 5 வேரியன்ட்களில் கிடைக்கும். இது இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன: 1-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் இன்ஜின் (72 PS/96 Nm, 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது). மற்றும் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (100) PS/160 Nm வரை 5-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT உடன் இணைக்கப்பட்டுள்ளது).
8-இன்ச் டச் ஸ்கிரீன், 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆட்டோ ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் (டர்போ வேரியன்ட்களில் மட்டும்) ஆகியவை முக்கிய வசதிகளாகும். ரெனால்ட் 4 ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, மற்றும் TPMS போன்றவை பாதுகாப்புக்காக உள்ளன.
விலை மற்றும் போட்டியாளர்கள்
ரெனால்ட் ட்ரைபர் காரின் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.8.97 லட்சம் வரையிலும், கைகரின் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.11.23 லட்சம் வரையிலும் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) உள்ளது. ட்ரைபர் மாற்றாக மாருதி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஆகியவற்றுக்கு மாற்றாக உள்ளது. மேலும் மாருதி எர்டிகா மற்றும் XL6, டொயோட்டா ரூமியான், அத்துடன் கியா கேரன்ஸ் ஆகியவற்றுக்கு ஒரு ஆப்ஷனாகவும் இருக்கும்.
ரெனால்ட் எஸ்யூவி மஹிந்திரா XUV 3XO, நிஸான் மேக்னைட், டாடா நெக்ஸான், மற்றும் சோனெட் உடன் போட்டியிடுகிறது. மேலும் இது போன்ற சப்-4 மீ கிராஸ்ஓவர்களான மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டெய்சர் ஆகியவற்றுடனும் போட்டியிடுகிறது.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: ட்ரைபர் ஏஎம்டி