• English
    • Login / Register

    Renault Kwid, Kiger மற்றும் Triber இப்போது CNG ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது

    ரெனால்ட் க்விட் க்காக பிப்ரவரி 24, 2025 08:27 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 47 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    ஹரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மட்டுமே சிஎன்ஜி கிட் -ஐ கார்களில் பொருத்துவதற்கான வசதிகள் தற்போது செய்யப்பட்டுள்ளன.

    ரெனால்ட் கைகர் மற்றும் டிரைபர் ஆகிய கார்களில் சிஎன்ஜி பவர்டிரெய்ன் ஆப்ஷன் கிடைக்கும் என்பதை பற்றி முன்னரே ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். இப்போது ரெனால்ட் நிறுவனம் முன்னர் குறிப்பிட்ட இரண்டு கார்களுடன் ரெனால்ட் க்விட் காருக்கும் சேர்த்து சிஎன்ஜி பவர்டிரெய்ன் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த சிஎன்ஜி கிட்கள் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்டதாக இருக்காது. மாறாக அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் அல்லது டீலர்ஷிப் மூலம் மட்டுமே கார்களில் பொருத்தப்படும். நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் இன்ஜின் மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் உடன் வரும் அனைத்து வேரியன்ட்களிலும் இந்த சிஎன்ஜி கிட்களை பொருத்திக் கொள்ளலாம்.

    மேலும் இவை வழக்கமான வேரியன்ட்களை விட சற்று கூடுதல் விலை இருக்கும்:

    மாடல்

    CNG கிட் இல்லாத விலை

    CNG கிட் உடன் விலை

    வித்தியாசம்

           

    ரெனால்ட் க்விட்

    ரூ.4.70 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை

    ரூ.5.45 லட்சம் முதல் ரூ.6.75 லட்சம்

    ரூ.75,000

    ரெனால்ட் ட்ரைபர்

    ரூ.6.10 லட்சம் முதல் ரூ.8.46 லட்சம்

    ரூ.6.90 லட்சம் முதல் ரூ.9.26 லட்சம்

    ரூ.79,500

    ரெனால்ட் கைகர்

    ரூ.6.10 லட்சம் முதல் ரூ.9.03 லட்சம்

    ரூ.6.90 லட்சம் முதல் ரூ.9.83 லட்சம்

    ரூ.79,500

    அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், புது டெல்லி

    நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட CNG கிட்கள் தற்போது ஹரியானா, UP, டெல்லி, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் மட்டுமே கிடைக்கும். மேலும் இந்த பட்டியலில் மற்ற மாநிலங்களும் விரைவில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிஎன்ஜி கருவிகளுக்கு மூன்று ஆண்டு உத்தரவாதத்துடன் வருகின்றன.

    க்விட், கைகர் மற்றும் ட்ரைபர் ஆகியவை அவற்றின் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் இன்ஜின்களின் பவர் செய்யும் செயல்திறன் புள்ளிவிவரங்களை இங்கே பார்ப்போம்:

    ரெனால்ட் க்விட், கைகர் மற்றும் ட்ரைபர்: பவர்டிரெயின் ஆப்ஷன்கள்

    Renault Kwid engine

    மாடல்

    ரெனால்ட் க்விட்

    ரெனால்ட் ட்ரைபர்

    ரெனால்ட் கைகர்

    இன்ஜின்

    1-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்

    1-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்

    1-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்

    பவர்

    68 PS

    72 PS

    72 PS

    டார்க்

    91 Nm

    96 Nm

    96 Nm

    டிரான்ஸ்மிஷன்

    5-ஸ்பீடு MT / 5-ஸ்பீடு AMT*

    5-ஸ்பீடு MT / 5-ஸ்பீடு AMT

    5-ஸ்பீடு MT / 5-ஸ்பீடு AMT

    *AMT = ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்

    குறிப்பிடத்தக்க வேரியன்ட், CNG ஆப்ஷன் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கும். AMT வேரியன்ட்களில் கிடைக்காது. மேலும் சிஎன்ஜி-பவர்டு கார்களை போலவே பெட்ரோல் வேரியன்ட்களுடன் ஒப்பிடும்போது பவர் மற்றும் டார்க் விகிதங்கள் சற்று குறைவாக இருக்கலாம்.

    Renault Kiger

    ரெனால்ட் கைகரின் சில வேரியன்ட்களும் 100 PS மற்றும் 160 Nm பவர் அவுட்புட்டை கொடுக்கும் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வருகின்றன. இருப்பினும் இந்த டர்போ இன்ஜின் CNG ஆப்ஷனுடன் கிடைக்கவில்லை.

    மேலும் படிக்க: 2024 பிப்ரவரியில் தயாரிக்கப்பட்ட இந்த கார்களில் ரூ. 1 லட்சம் அல்லது அதற்கு மேல் சேமிக்கலாம்

    ரெனால்ட் க்விட், கைகர் மற்றும் ட்ரைபர்: விலை மற்றும் போட்டியாளர்கள்

    Renault Kwid

    ரெனால்ட் க்விட் ஆனது இந்தியாவில் ரூ.4.70 லட்சம் முதல் ரூ.6.45 லட்சம் வரையிலான விலையில் ரெனால்ட் -ன் மிகவும் குறைவான விலை காராக உள்ளது. இது மாருதி ஆல்டோ கே10 மற்றும் மாருதி எஸ்-பிரஸ்ஸோ ஆகிய மற்ற என்ட்ரில் லெவல் ஹேட்ச்பேக்குகளுக்கு போட்டியாக உள்ளது. 

    Renault Triber

    ரெனால்ட் ட்ரைபர் ரூ. 6.10 லட்சம் முதல் ரூ. 8.98 லட்சம் வரையிலான விலையில் 6 அல்லது 7 இருக்கைகள் கொண்ட தளவமைப்புகளில் வருகிறது. இதற்கு இந்தியாவில் நேரடி போட்டியாளர்கள் இல்லை. ஆனால் இது மாருதி எர்டிகா, மாருதி XL6 மற்றும் கியா கேரன்ஸ் ஆகியவற்றுக்கு விலை குறைவான மாற்றாக இருக்கும்.

    ரெனால்ட் கைகர் இந்தியாவில் மிகவும் விலை குறைவான சப்-4m எஸ்யூவி -களில் ஒன்றாக இருக்கிறது. இதன் விலை ரூ.6.10 லட்சம் முதல் ரூ.11.23 லட்சம் வரை உள்ளது. இது ஸ்கோடா கைலாக், மாருதி பிரெஸ்ஸா, நிஸான் மேக்னைட், டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, சோனெட், மஹிந்திரா XUV 3XO மற்றும் கியா சிரோஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

    அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், புது டெல்லி

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on Renault க்விட்

    explore similar கார்கள்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience