• English
    • Login / Register

    வரும் ஏப்ரல் மாதம் முதல் ரெனால்ட் கார்களின் விலை உயரவுள்ளது

    ரெனால்ட் டிரிபர் க்காக மார்ச் 21, 2025 05:15 pm அன்று kartik ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 3 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    தயாரிப்பு உள்ளீடு செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்த ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    2025 ஏப்ரல், புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து அதன் கார்கள் விலை உயரும் என ரெனால்ட் அறிவித்துள்ளது. 2023 ஆண்டுக்கு ரெனால்ட் நிறுவனம் அறிவிக்கும் முதல் விலை உயர்வு இதுவாகும். இந்தியாவில் ரெனால்ட் தற்போது க்விட், ட்ரைபர் மற்றும் கைகர் என மூன்று கார்களை விற்பனை செய்கிறது. மேலும் ரெனால்ட் நிறுவனம் விலை உயர்வுக்கான காரணத்தையும், விலை எவ்வளவு உயரவுள்ளது போன்ற தகவல்களை வெளியிட்டுள்ளது, அவை இங்கே: 

    விலை உயர்வுக்கான காரணம் 

    தயாரிப்பு உள்ளீடு செலவுகள் அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என ரெனால்ட் தெரிவித்துள்ளது. கார்களின் விலையை 2 சதவிகிதம் வரை ரெனால்ட் உயர்த்தவுள்ளது. தேர்வு செய்யப்படும் மாடல் மற்றும் வேரியன்ட் ஆகியவற்றின் அடிப்படையில் விலை உயர்வு இருக்கும் என்றும் ரெனால்ட் குறிப்பிட்டுள்ளது. எடுத்துக்காட்டுக்கு மூன்று ரெனால்ட் கார்களின் தற்போதைய விலை விவரங்கள் இங்கே: 

    மாதிரி

    தற்போதைய விலை வரம்பு 

    க்விட் 

    ரூ.4.70 லட்சம் முதல் ரூ.6.44 லட்சம் 

    ட்ரைபர் 

    ரூ.6.10 லட்சம் முதல் ரூ.8.98 லட்சம்

    கைகர் 

    ரூ.6.10 லட்சம் முதல் ரூ.11.23 லட்சம் 

    * அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை

    மேலும் பார்க்க:ஹோண்டா அதன் கார்களின் விலையை வரும் ஏப்ரல் முதல் உயர்த்தவுள்ளது

    ரெனால்ட்டின் எதிர்காலத் திட்டம் 

    Renault Triber

    ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில்தான் கைகர் மற்றும் ட்ரைபர் ஆகியவற்றுக்கு மாடல் இயர் 2025 அப்டேட்டை கொடுத்தது இந்த ஆண்டின் பிற்பகுதியிலும் இந்த கார்களின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்புகளை வெளியிடவும் தயராகி வருகிறது. சோதனை செய்யப்பட்டு வரும் ஃபேஸ்லிஃப்டட் ட்ரைபர் இப்போது முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on Renault டிரிபர்

    explore similar கார்கள்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எம்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience