2025 ஏப்ரலில் ரெனால்ட் கார்கள் ரூ.88,000 வரை தள்ளுபடியுடன் கிடைக்கும்
kartik ஆல் ஏப்ரல் 03, 2025 07:53 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ரெனால்ட்டின் 3 மாடல்களின் லோயர்-ஸ்பெக் டிரிம்களுக்கு பணத் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் கிடைக்காது.
-
கைகரில் அதிகபட்சமாக ரூ.88,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.
-
ட்ரைபரில் ரூ.83,000 மற்றும் க்விட்டில் ரூ.78,000 வரை சேமிக்கலாம்.
-
இந்த அனைத்து சலுகைகளும் 30 ஏப்ரல் 2025 வரை பொருந்தும்.
ஏப்ரல் 2025 மா 3 கார்களுக்கான சலுகைகளை ரெனால்ட் வெளியிட்டுள்ளது. இந்த ஆஃபர்கள் இந்த மாத இறுதி வரை பொருந்தும். 2024 மற்றும் 2025 ஆகிய இரண்டு ஸ்டாக்குகளுக்கும் பொருந்தும் என்றாலும், 2024 ஆண்டு மாடல்களில் அதிக பலன்கள் கிடைக்கும். இந்த ஆஃபர்களில் பணத் தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச்ப் பலன்கள், லாயல்டி தள்ளுபடிகள், கார்ப்பரேட் சலுகைகள் மற்றும் பல அடங்கும். 2025 ஏப்ரல் ரெனால்ட் கார்களில் நீங்கள் பெறக்கூடிய அனைத்து ஆஃபர்களின் விரிவான பட்டியல் இங்கே.
ரெனால்ட் க்விட்
சலுகை |
மாடல் ஆண்டு 2025/2025 |
2024 மாடல்கள் |
|
பணத் தள்ளுபடி |
ரூ. 10,000 வரை |
ரூ. 40,000 வரை |
|
எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் |
ரூ. 15,000 வரை |
ரூ. 15,000 வரை |
|
லாயல்டி ஆஃபர் |
ரூ. 15,000 வரை |
ரூ. 15,000 வரை |
|
கார்ப்பரேட் ஆஃபர் |
ரூ. 8,000 வரை |
ரூ. 8,000 வரை |
|
மொத்த ஆஃபர் |
ரூ. 48,000 வரை |
ரூ. 78,000 வரை |
-
2024 க்விட் மாடல்களுக்கு மிக அதிகபட்சமாக ரூ.78,000 வரை தள்ளுபடிகள் கிடைக்கும். அதே சமயம் 2025 மாடல்களுக்கு ரூ.48,000 வரை மொத்த ஆஃபர்கள் கிடைக்கும்.
-
லோவர்-ஸ்பெக் வேரியன்ட்களான RXE மற்றும் RXL (O), பணத் தள்ளுபடி அல்லது எக்ஸ்சேஞ்ச் பலன் கிடைக்காது. லாயல்டி போனஸ் மட்டுமே கிடைக்கும்.
-
மற்ற மாடல்களை போலவே, கார்ப்பரேட் போனஸ் ரூ 8,000 அல்லது ரூ 4,000 ரூரல் போனஸ் க்விட் -க்கு கிடைக்கிறது.
-
ரெனால்ட் க்விட் -ல் ரூ.3,000 வரை ரெஃபரல் போனஸையும் வழங்குகிறது.
-
ரெனால்ட் க்விட் காரின் விலை ரூ.4.69 லட்சம் முதல் ரூ.6.44 லட்சம் வரை உள்ளது.
மேலும் பார்க்க: ஹூண்டாய் கிரெட்டா SX பிரீமியம் வேரியன்ட் படங்களில் விளக்கப்பட்டுள்ளது
ரெனால்ட் ட்ரைபர்
சலுகை |
மாடல் ஆண்டு 2025/2025 |
2024 மாடல்கள் |
|
பணத் தள்ளுபடி |
ரூ. 10,000 வரை |
ரூ. 40,000 வரை |
|
எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் |
ரூ. 20,000 வரை |
ரூ. 20,000 வரை |
|
லாயல்டி ஆஃபர் |
ரூ. 15,000 வரை |
ரூ. 15,000 வரை |
|
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ. 8,000 வரை |
ரூ. 8,000 வரை |
|
மொத்த தள்ளுபடி |
ரூ. 53,000 வரை |
ரூ. 83,000 வரை |
-
2025 ட்ரைபர் மாடல்களுக்கு ரூ. 53,000 வரை மொத்த தள்ளுபடியையும், 2024 மாடல்களுக்கு ரூ.83,000 வரை தள்ளுபடியும் கிடைக்கும்.
-
பேஸ்-ஸ்பெக் RXE வேரியன்ட்டிற்கு ரொக்க மற்றும் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகள் கிடைக்காது. லாயல்டி மற்றும் ரெஃபரல் ஆஃபர்கள் மட்டுமே கிடைக்கும்.
-
ட்ரைபரை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 8,000 கார்ப்பரேட் தள்ளுபடி அல்லது ரூ. 4,000 ரூரல் ஆஃபர்களை பெறலாம். இது விவசாயிகள், சர்பஞ்ச் மற்றும் கிராம பஞ்சாயத்தை சேர்ந்தவர்களுக்கு கிடைக்கிறது.
-
இதனுடன் ரூ. 3,000 ரெஃபரல் போனஸையும் பெறலாம்.
-
ரெனால்ட் ட்ரைபரின் விலை ரூ.6.09 லட்சம் முதல் ரூ.8.97 லட்சம் வரை உள்ளது.
ரெனால்ட் கைகர்
சலுகை |
மாடல் ஆண்டு 2025/2025 |
2024 மாடல்கள் |
|
பணத் தள்ளுபடி |
ரூ. 15,000 வரை |
ரூ. 45,000 வரை |
|
எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் |
ரூ. 20,000 வரை |
ரூ. 20,000 வரை |
|
லாயல்டி ஆஃபர் |
ரூ. 15,000 வரை |
ரூ. 15,000 வரை |
|
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ. 8,000 வரை |
ரூ. 8,000 வரை |
|
மொத்த தள்ளுபடி |
ரூ. 58,000 வரை |
ரூ. 88,000 வரை |
-
கைகரின் 2025 ஆண்டு யூனிட்களுக்கு ரூ. 58,000 வரை பலன் கிடைக்கும். அதே நேரத்தில் 2024 மாடல்கள் ரூ.88,000 வரை அதிக மொத்த தள்ளுபடியைப் பெறுகின்றன.
-
கைகரின் லோவர்-ஸ்பெக் RXE மற்றும் RXL வேரியன்ட்கள், லாயல்டி பலன்களை மட்டுமே பெறுகின்றன மற்றும் பண மற்றும் எக்ஸ்சேஞ்ச் பலன்கள் கிடைக்காது.
-
கார்ப்பரேட் நிறுவனம் ரூ.8,000 கார்ப்பரேட் தள்ளுபடி அல்லது ரூ.4,000 ரூரல் ஆஃபர் கிடைக்கும். இதை விவசாயிகள், சர்பஞ்ச் மற்றும் கிராம பஞ்சாயத்தை சேர்ந்தவரகளுக்கு கிடைக்கும். ஆனால் இந்த ஆஃபர்களை சேர்த்து பெற முடியாது.
-
ரெனால்ட் கைகரில் ரூ.3,000 ரெஃபரல் போனஸும் கிடைக்கும்.
-
ரெனால்ட் கைகர் காரின் விலை ரூ.6.09 லட்சம் முதல் ரூ.11.22 லட்சம் வரை உள்ளது.
அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி -க்கானவை
மாநிலம் அல்லது நகரத்தைப் பொறுத்து தள்ளுபடிகள் மாறுபடலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள ரெனால்ட் டீலரை தொடர்பு கொள்ளவும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.