ரெனால்ட் நிறுவனத்தின் குளிர்கால சர்வீஸ் முகாம் நவம்பர் 18 முதல் தொடக்கம்
published on நவ 18, 2024 05:51 pm by yashika for ரெனால்ட் கைகர்
- 12 Views
- ஒரு கர ுத்தை எழுதுக
ஸ்பேர் பார்ட்கள் மற்றும் லேபர் சார்ஜ் -கான ஆஃபர்கள் தவிர இந்த 7 நாட்களில் ஆக்ஸசரீஸ்கள் மீது குறிப்பிட்ட தள்ளுபடியும் கிடைக்கும்.
-
தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் அதிகாரப்பூர்வ ஆக்ஸசரீஸ்கள் மீது 15 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்
-
லேபர் சார்ஜில் 15 சதவீதம் ஆஃபர் கிடைக்கும்.
-
ரெனாட்டின் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தில் வாடிக்கையாளர்கள் 10 சதவீத தள்ளுபடியையும் பெறலாம்.
-
கார் தயாரிப்பாளரால் வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் ரெனால்ட்டின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்களில் மட்டுமே கிடைக்கும்.
-
சர்வீஸ் முகாம் நவம்பர் 18 முதல் 24 -ம் தேதி வரை ஒரு வாரம் நடைபெறும்.
ரெனால்ட் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 18 முதல் 24 ஆம் தேதி வரை இந்தியாவில் நாடு தழுவிய குளிர்கால சேவை முகாமை அறிவித்துள்ளது. பிரெஞ்சு வாகன உற்பத்தியாளரான ரெனால்ட் நிறுவனத்தின் சர்வீஸ் அதன் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரெனால்ட்டின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்களிலும் கிடைக்கும்.
மேலும் படிக்க: இந்த நவம்பரில் ரெனால்ட் கார்களில் வாடிக்கையாளர்கள் ரூ.70,000 -க்கு மேல் சேமிக்கலாம்
ஒரு வார கால முகாமில் ரெனால்ட் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல தள்ளுபடிகளை வழங்கவுள்ளது. நவம்பர் 20, 2024 -க்கு முன் மை ரெனால்ட் ஆப் மூலம் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்பேர் பாகங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ பாகங்கள் மீது 15 சதவிகிதம் வரை சலுகைகள் கிடைக்கும். லேபர் சார்ஜ் மற்றும் 10 முதல் 15 சதவிகிதப் பலன்களையும் நீங்கள் பெறலாம். முகாம் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு வாங்கிய வாகனங்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தின் சதவீதம் பொருந்தும்.
இந்த முகாமில் காஸ்ட்ரோல் இன்ஜின் ஆயில் மாற்றும் போது அதற்கான கட்டணத்தில் 10 சதவீதம் சேமிப்பும் கிடைக்கும். ஆனால் இதை மற்ற ரெனால்ட் சலுகைகளுடன் இணைத்து பெற முடியாது.
ரெனால்ட் நிறுவனம் தற்போது இந்தியாவில் ரெனால்ட் க்விட், ரெனால்ட் ட்ரைபர், மற்றும் ரெனால்ட் கைகர் என 3 மாடல்களை விற்பனை செய்கிறது. இந்தியாவில் ரெனால்ட்டின் எதிர்காலத் திட்டங்களில் 2025 ஆம் ஆண்டுக்குள் புதிய சிறிய எஸ்யூவி -யை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அது புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டராகவும் இருக்கலாம்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: கைகர் ஏஎம்டி
0 out of 0 found this helpful