சென்னையில் உள்ள நிஸானின் தொழிற்சாலையை முழுமையாக கையகப்படுத் தும் ரெனால்ட் நிறுவனம்
aniruthan ஆல் மார்ச் 31, 2025 10:26 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 16 Views
- ஒரு கருத்தை எழுதுக
கையகப்படுத்துதல் இன்னும் சில மாதங்களில் முழுமையடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் நிஸான் நிறுவனத்தின் நிலைமை சற்று மோசமான நிலையில் உள்ளது. அந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வர நிஸான் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள ரெனால்ட்-நிஸான் கூட்டணியின் உற்பத்தி ஆலைக்கு என்ன ஆகும் என்ற கேள்வியும் பலருக்கும் எழுந்த வண்ணம் இருந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று ரெனால்ட் நிறுவனம் நிஸானுடன் பங்கு கொள்முதல் ஒப்பந்தம் செய்து கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்போது தொழிற்சாலையில் உள்ள நிஸானின் 51 சதவீத பங்குகளை ரெனால்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்த கையகப்படுத்தலால் சென்னை உற்பத்தி ஆலையில் 100 சதவீத பங்குகளை ரெனால்ட் வசம் செல்லும். மேலும் இன்னும் சில மாதங்களில் இந்த நடவடிக்கை முழுமையடையும்.
ரெனால்ட் நிறுவனத்துக்கு இதனால் என்ன பலன் ?
சென்னையில் உள்ள இந்த ஆலையின் ஆண்டு உற்பத்தி திறன் 4 லட்சம் யூனிட்டுகளாக உள்ளது. இந்த கையகப்படுத்தல் நடவடிக்கையால் இந்த தொழிற்சாலையின் 100 சதவீத உரிமை ரெனால்ட் வசம் இருக்கும். இதன் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தை விரிவாக்க உதவியாக இருக்கும்.
இந்தியாவில் நிஸான் தனது கார்களை எங்கு தயாரிக்கும்?
உரிமை ரெனால்ட் வசம் இருந்தாலும் புதிய நிஸான் கார்கள் அதே தொழிற்சாலையில் இருந்து தொடர்ந்து வெளிவரும். மேலும் டெக்னாலஜி மற்றும் வர்த்தகம் ஆகியவற்றின் இரண்டின் உரிமையும் செயல்பாடும் பாதிக்கப்படாமல் இருக்கும். இதில் ரெனால்ட் 51 சதவிகிதம் மற்றும் நிஸான் 49 சதவிகிதம் வைத்துள்ளனர். கையகப்படுத்துதலால் இந்த விஷயத்தில் எந்த மாற்றமும் இருக்காது.
இரண்டு கார் தயாரிப்பாளர்களிடமிருந்தும் அடுத்தது என்ன கார்கள் வரவுள்ளன ?
ரெனால்ட் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கைகர் மற்றும் டிரைபர் ஆகியவற்றின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிஸான் ஒரு என்ட்ரி லெவல் எம்பிவி-யை உருவாக்கும் முயற்சியில் உள்ளது. இது ட்ரைபரை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் மிக முக்கிய செய்தி என்னவென்றால், 2026 ஆண்டில் புதிய எஸ்யூவிள் அறிமுகமாகவுள்ளன. இரண்டு கார் தயாரிப்பாளர்களும் ரெனால்ட் டஸ்டர் மற்றும் அநேகமாக நிஸான் டெரானோ ஆகிய 5-சீட்டர் எஸ்யூவி -களை அறிமுகப்படுத்துவதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர எஸ்யூவி பிரிவுக்கு திரும்பவுள்ளனர். மேலும் இந்த இரண்டு எஸ்யூவி -களின் 7 சீட்டர் பதிப்பும் அறிமுகம் செய்யப்படலாம்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.