• English
  • Login / Register

2025 Renault Kiger மற்றும் Renault Triber கார்கள் அறிமுகம்

ரெனால்ட் கைகர் க்காக பிப்ரவரி 17, 2025 09:51 pm அன்று kartik ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 55 Views
  • ஒரு கருத்தை எழுதுக

வடிவமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் லோவர் வேரியன்ட்களில் பணத்திற்கு அதிக மதிப்பை வழங்குவதற்காக ரெனால்ட் சில வசதிகளை கூடுதலாக சேர்த்துள்ளது.

  • MY 2025 ரெனால்ட் கைகர் மற்றும் டிரைபர் ஆகியவை லோவர்-என்ட் வேரியன்ட்களில் அதிக வசதிகளை கொண்டுள்ளன. 

  • இரண்டு கார்களிலும் பவர் ஜன்னல்கள் மற்றும் சென்ட்ரல் லாக்கிங் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்பட்டுள்ளது.

  • ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 8 இன்ச் டச் ஸ்கிரீன் இப்போது பேஸ் வேரியன்ட்டுக்கு மேலே RXL வேரியன்ட்களில் கிடைக்கிறது. 

  • RXT (O) வேரியன்ட் இரண்டு மாடல்களிலும் ஃப்ளெக்ஸ் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

  • இரண்டு கார்களிலும் இன்ஜின்கள் E20 இணக்கமாக மாற்றப்பட்டுள்ளன. 

  • ரெனால்ட் கைகர் சப்-4எம் எஸ்யூவி -யின் விலை ரூ.6.1 லட்சம் முதல் 10.1 லட்சம் வரை உள்ளது. 

  • ரெனால்ட் டிரைபர் எம்பிவி -யின் விலை ரூ.6.1 லட்சம் முதல் ரூ.8.75 லட்சம் வரை உள்ளது.

இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் டிரைபர் மற்றும் கைகர்  ஆகியவற்றுக்கான MY2025 அப்டேட்டை  கொடுத்துள்ளது. இந்த இரண்டு மாடல்களின் விலை ரூ.6.1 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த அப்டேட்களால் அனைத்து வேரியன்ட்களிலும் ஒரு சில விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளன. மேலும் இரண்டு மாடல்களிலும் உள்ள இன்ஜின்கள் இப்போது E20 -க்கு இணக்கமாக மாற்றப்பட்டுள்ளன. ரெனால்ட் டிரைபர் மற்றும் ரெனாட் கைகர் பற்றிய விரைவான கண்ணோட்டம் மற்றும் வேரியன்ட்களில் புதிதாக என்ன இருக்கிறது என்பது . 

2025 ரெனால்ட் கைகர் மற்றும் டிரைபர்: வேரியன்ட் வாரியான விலை விவரங்கள் 

ரெனால்ட் கைகர் 

வேரியன்ட் 

NA பெட்ரோல் மேனுவல் 

NA பெட்ரோல் AMT 

டர்போ மேனுவல் 

டர்போ சிவிடி

RXE

ரூ.6.1 லட்சம் 

-

-

-

RXL

ரூ.6.85 லட்சம் 

ரூ.7.35 லட்சம் 

-

-

RXT பிளஸ் 

ரூ.8 லட்சம் 

ரூ.8.5 லட்சம் 

-

ரூ.10 லட்சம் 

RXZ 

ரூ 8.8 லட்சம் 

-

ரூ.10 லட்சம் 

ரூ.11 லட்சம் 

ரெனால்ட் டிரைபர் 

வேரியன்ட் 

மேனுவல் 

ஏஎம்டி 

RXE

ரூ.6.1 லட்சம் 

-

RXL 

ரூ.7 லட்சம் 

-

RXT 

ரூ.7.8 லட்சம்

-

RXZ 

ரூ 8.23 ​​லட்சம் 

ரூ.8.75 லட்சம் 

மேலும் பார்க்க: 2025 ஆடி RS Q8 இந்தியாவில் ரூ.2.49 கோடியில் வெளியிடப்பட்டது

ரெனால்ட் கைகர் மற்றும் டிரைபர்: மாற்றங்கள் என்ன?

2025 Renault Kiger And Renault Triber Launched, Prices Start From Rs 6.1 Lakh

இரண்டு கார்களும் வடிவமைப்பில் எந்த மாற்றத்தையும் பெறவில்லை என்றாலும் முக்கியமாக காரிலுள்ள வசதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்றும் சில விஷயங்கள் முன்பை விட அணுகக்கூடியதாக உள்ளது. அனைத்து விவரங்களும் இங்கே:

  • ஒன் அபோவ் பேஸ் RXL வேரியன்ட்டிலிருந்து ரெனால்ட் இப்போது 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை வழங்குகிறது. இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை சப்போர்ட் செய்யும்.

  • சென்ட்ரல் லாக்கிங் கதவுகள் மற்றும் நான்கு பவர்டு ஜன்னல்கள் இப்போது இரண்டு கார்களுக்கும் அனைத்து வேரியன்ட்களிலும் ஸ்டாண்டர்டாக கிடைக்கின்றன. 

  • இரண்டு மாடல்களிலும் உள்ள RXT வேரியன்ட்கள் இப்போது 15-இன்ச் ஹைப்பர் ஸ்டைல் ​​ஸ்டீல் வீல்களை கொண்டுள்ளன. இவை அலாய்களின் வடிவமைப்பைப் பிரதிபலிக்கின்றன. 

  • ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட் இப்போது டாப்-எண்ட் ரெனால்ட் கைகர் RXZ -ல் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

2025 Renault Kiger And Renault Triber Launched, Prices Start From Rs 6.1 Lakh

இந்த மாற்றங்களைத் தவிர இரண்டு மாடலில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. 

ரெனால்ட் கைகர் மற்றும் டிரைபர்: இன்ஜின் ஆப்ஷன் விவரங்கள் 

கைகர் மற்றும் டிரைபர் இரண்டிலும் உள்ள இன்ஜின் ஆப்ஷன்கள் இப்போது E20 -க்கு ஏற்றபடி மாற்றப்பட்டுள்ளன. தொழில்நுட்ப விவரங்கள் இங்கே: 

இன்ஜின் 

ரெனால்ட் கைகர் மற்றும் டிரைபர் 1-லிட்டர் N/A பெட்ரோல் 

ரெனால்ட் கைகர் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் 

பவர் 

72 PS

100 PS 

டார்க் 

96 Nm

160 Nm வரை

டிரான்ஸ்மிஷன்

5-ஸ்பீடு MT/AMT 

5-ஸ்பீடு  MT / CVT

N/A - நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் 

CVT - கன்டினியூஸ்லி வேரியபிள் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

AMT - ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்

டிரைபர் மற்றும் கைகர் இரண்டும் 1-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. கைகர் கூடுதல் பவர்புல்லான 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கும்.

போட்டியாளர்கள்

Renault Triber Rvials

ரெனால்ட் கைகர் அதிகமாக போட்டி நிலவும் சப்-4m எஸ்யூவி பிரிவில் உள்ளது. இது நிஸான் மேக்னைட், மாருதி பிரெஸ்ஸா, சோனெட், மஹிந்திரா XUV 3XO மற்றும் டாடா நெக்ஸான் ஆகியவற்றுக்கு இருக்கும். இது போன்ற மற்ற மாடல்களுக்கும் போட்டியாக உள்ளது டாடா பன்ச், ஹூண்டாய் எக்ஸ்டர், மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டெய்சர் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

Renault Kiger Rivals

மறுபுறம் ரெனால்ட் டிரைபர் -க்கு எந்த நேரடி போட்டியாளர்களும் இல்லை. ஆனால் இது மாருதி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் போன்றவற்றுக்கு 7-சீட்டர் மாற்றாகக் கருதப்படலாம். 

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on Renault கைகர்

1 கருத்தை
1
S
saga koti bala sai teja
Feb 17, 2025, 9:03:13 PM

Triber RXL also would provide sharkfin antenna, steering mounted controls and roof rails same like Kiger RXL. Is there any improvement in terms of safety.

Read More...
    பதில்
    Write a Reply

    explore similar கார்கள்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    • டாடா சீர்ரா
      டாடா சீர்ரா
      Rs.10.50 லட்சம்Estimated
      செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • நிசான் பாட்ரோல்
      நிசான் பாட்ரோல்
      Rs.2 சிஆர்Estimated
      அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • எம்ஜி majestor
      எம்ஜி majestor
      Rs.46 லட்சம்Estimated
      ஏப், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • டாடா harrier ev
      டாடா harrier ev
      Rs.30 லட்சம்Estimated
      மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • vinfast vf3
      vinfast vf3
      Rs.10 லட்சம்Estimated
      பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
    ×
    We need your சிட்டி to customize your experience