Renault Triber ஃபேஸ்லிஃப்ட் முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது
ரெனால்ட் டிரிபர் 2025 க்காக மார்ச் 21, 2025 03:11 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 9 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ட்ரைபரின் ஸ்பை ஷாட்டில் கார் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது. இதில் புதிய ஸ்பிளிட்-எல்இடி டெயில் லைட்கள் மற்றும் டெயில்கேட் டிசைன் போன்றவை காரில் இருந்தன.
2025 ஜனவரி -யில் ரெனால்ட் ட்ரைபர் காருக்கு ஒரு மிட்லைஃப் ஃபேஸ்லிஃப்ட் கிடைக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இது இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது 2025 ட்ரைபரின் சோதனைக் கார் சமீபத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ளது, முழுவதுமாக மறைக்கப்பட்ட இந்த காரின் பின்பக்கம் மட்டுமே புகைப்படங்களில் தெரிகிறது. போட்டோ மூலாமாக நமக்கு தெரிய வரும் விஷயங்கள் இங்கே:
என்ன பார்க்க முடிகிறது ?
கார் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்தாலும் சில வடிவமைப்பு விஷயங்களை 2025 ரெனால்ட் ட்ரைபரில் பார்க்க முடிகிறது. ஸ்பிளிட்-வகை எல்இடி டெயில் லைட் வடிவமைப்பு இருந்தது, இது தற்போதைய-ஸ்பெக் மாடலின் டெயில் லைட்களுடன் ஒப்பிடும்போது வடிவமைப்பில் சில மாற்றங்கள் இருக்கலாம்.
பின்புற வைப்பர் கூட தெரிகிறது மற்றும் டெயில்கேட்டிலும் அதிக ஆக்ரோஷமான ஃபோல்டுகள் இருக்கலாம் என தெரிகிறது. மேலும் பம்பர் வடிவமப்பிலும் மாற்றங்கள் இருக்கலாம்.
பக்கவாட்டு பகுதி ஓரளவுக்கு தெரிகிறது, அது தற்போதைய-ஸ்பெக் மாடல் போலவே உள்ளது. இருப்பினும் இது புதிய அலாய் வீல்கள் உடன் வரலாம்.
முன்புறம் புதிய ஹெட்லைட்கள், கிரில் மற்றும் பம்பர் வடிவமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். உட்புற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் சற்று மாற்றியமைக்கப்பட்ட டாஷ்போர்டு வடிவமைப்பையும், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நிஸான் மேக்னைட் போலவே வித்தியாசமான கேபின் தீம் உடன் வரலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலும் படிக்க: ஹோண்டா அதன் கார்களின் விலையை வரும் ஏப்ரல் முதல் உயர்த்தவுள்ளது
2025 ரெனால்ட் ட்ரைபர்: எதிர்பார்க்கப்படும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு
தற்போதைய-ஸ்பெக் ட்ரைபரைப் போலவே வசதிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 8-இன்ச் டச் ஸ்கிரீன், 7-இன்ச் செமி-டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஆட்டோ ஏசி மற்றும் ரியர்-வியூ மிரர் (ஐஆர்விஎம்) உள்ளே ஆட்டோ டிம்மிங் ஆகிய வசதிகளை இது பெறலாம்.
தற்போதைய-ஸ்பெக் ட்ரைபரில் வழங்கப்படும் 4 ஏர்பேக்குகளுடன் ஒப்பிடும்போது இதன் பாதுகாப்புத் தொகுப்பில் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) இடம்பெறலாம். EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர்-வியூ கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) உள்ளிட்ட மற்ற பாதுகாப்பு விஷயங்கள் ஒரே மாதிரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ரெனால்ட் ட்ரைபர்: எதிர்பார்க்கப்படும் பவர்டிரெயின் ஆப்ஷன்கள்
2025 ரெனால்ட் ட்ரைபர் தற்போதைய ஸ்பெக் மாடலில் உள்ள அதே 1-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
1-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் |
பவர் |
72 PS |
டார்க் |
96 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT / 5-ஸ்பீடு AMT |
இந்த இன்ஜின் சிஎன்ஜி ஆப்ஷனுடன் மேனுவல் ஆப்ஷனையும் பெறுகிறது. அங்கீகரிக்கப்பட்ட டீலரால் சிஎன்ஜி ஆப்ஷன் காரில் பொருத்தப்படும்.
ட்ரைபர் கைகரின் 100 பிஎஸ் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினும் கொடுக்கப்படலாம். ஆனால் ரெனால்ட் நிறுவனம் இன்னும் இதை உறுதிப்படுத்தப்படவில்லை.
2025 ரெனால்ட் ட்ரைபர்: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
2025 ரெனால்ட் ட்ரைபர் தற்போதைய-ஸ்பெக் மாடலை விட சற்று கூடுதல் விலையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.6.10 லட்சம் முதல் ரூ.8.97 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) வரை உள்ளது. தற்போதைய-ஸ்பெக் மாடலை போலவே ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ட்ரைபருக்கும் இந்தியாவில் நேரடி போட்டியாளர்கள் இல்லை. ஆனால் இது மாருதி எர்டிகா, மாருதி XL6 மற்றும் கியா கேரன்ஸ் ஆகியவற்றுக்கு ஒரு சிறிய மற்றும் விலை குறைவான மாற்றாக இருக்கிறது.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.