• English
    • Login / Register

    Citroen Basalt மற்றும் Tata Curvv: விவரங்கள் ஒப்பீடு

    டாடா கர்வ் க்காக ஆகஸ்ட் 14, 2024 03:25 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 39 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    டாடா கர்வ் மற்றும் சிட்ரோன் பசால்ட் ஆகிய இரண்டும் அடிப்படை விஷயங்களை கொண்டுள்ளன. அதே சமயம் சில விஷயங்களில் இரண்டு கார்களுக்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கிறது என்பதை இங்கே பார்ப்போம்.

    இந்தியாவில் காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் டாடா கர்வ் மற்றும் சிட்ரோன் பசால்ட் என இரண்டு கார்கள் விற்பனைக்கு புதிதாக வந்துள்ளன. பாசால்ட் காருக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் கர்வ் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் விலை தவிர கர்வ் எஸ்யூவி-கூபே பற்றிய அனைத்து விவரங்களும், அனைத்து வசதிகள் உட்பட பல விவரங்கள் தெரிய வந்துள்ளன. ஆகவே இங்கே கர்வ் மற்றும் பசால்ட் ஆகியவற்றை அவற்றின் விவரங்கள் மற்றும் பேப்பரில் உள்ள வசதிகளின் அடிப்படையில் ஒப்பிடுவோம்.

    அளவீடுகள்

    அளவீடுகள்

    சிட்ரோன் பசால்ட்

    டாடா கர்வ்

    வித்தியாசம்

    நீளம்

    4352 மி.மீ

    4308 மி.மீ

    + 44 மி.மீ

    அகலம்

    1765 மி.மீ

    1810 மி.மீ

    (-) 45 மி.மீ

    உயரம்

    1593 மி.மீ

    1630 மி.மீ

    (-) 30 மி.மீ

    வீல்பேஸ்

    2651 மி.மீ

    2560 மி.மீ

    + 91 மி.மீ

    பூட் ஸ்பேஸ்

    470 லிட்டர்

    500 லிட்டர்

    + 30 லிட்டர்

    • கர்வ் கார் சிட்ரோன் பசால்ட் -டை விட அகலமானது மற்றும் உயரமானது. அதேவேளையில் பாசால்ட் கர்வை விட 44 மி.மீ நீளமானது.

    • பாசால்ட் கர்வ்வை விட 91 மி.மீ நீளமான வீல்பேஸை கொண்டுள்ளது.

    • பூட் ஸ்பேஸ் என்று வரும்போது ​​பாசால்ட்டை விட 30 லிட்டர் கூடுதல் லக்கேஜ் லோடிங் திறனை கர்வ் வழங்குகிறது. இது இரண்டு கூடுதல் சாஃப்ட் பைகளை எடுத்துச் செல்ல ஏற்றதாக இருக்கும்.

    பவர்டிரெய்ன்

     

    சிட்ரோன் பசால்ட் 

    டாடா கர்வ்

    இன்ஜின்

    1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் (N/A) பெட்ரோல்

    1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல்

    1.2 லிட்டர் T-GDi பெட்ரோல்

    1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல்

    1.5 லிட்டர் டீசல்

    பவர்

    82 பிஎஸ்

    110 PS

    125 PS

    120 PS

    118 PS

    டார்க்

    115 Nm

    205 Nm வரை

    225 Nm

    170 Nm

    260 Nm

    பரவும் முறை

    5-ஸ்பீடு MT

    6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT^

    6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT*

    6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT*

    6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT*

    *DCT: டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

    ^AT - டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

    Tata Curvv Front

    • டாடா கர்வ் இரண்டு டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகிறது. அதேசமயம் பாசால்ட் ஒரு நேச்சுரலி (N/A) ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் ஒரு டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகிறது.

    • டாடாவின் புதிய GDi (டேரக்ட் இன்ஜெக்ஷன்) இன்ஜின் பசால்ட்டின் டர்போ-பெட்ரோல் இன்ஜினை விட அதிக சக்தி வாய்ந்தது. மற்றும் அதிக டார்க்கை உருவாக்குகிறது.

    • டாடா கர்வ் காரை ஆப்ஷனலான 7-ஸ்பீடு DCT உடன் வழங்குகிறது. அதே நேரத்தில் பசால்ட் இன் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 6-ஸ்பீடு AT இன் ஆப்ஷனை பெறுகிறது.

    • டாடா கர்வ் ஆனது 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனை பெறுகிறது. அதே சமயம் சிட்ரோன் பசால்ட்டில் டீசல் பவர்டிரெய்னை கிடைக்காது.

    மேலும் பார்க்க: டாடா கர்வ் EV மற்றும் MG ZS EV: விலை ஒப்பீடு

    வசதிகள்

    வசதிகள்

    சிட்ரோன் பசால்ட்

    டாடா கர்வ்

    வெளிப்புறம்

    • LED DRL -களுடன் LED ஹெட்லைட்கள்

    • ஆலசன் ஃபாக் லைட்ஸ்

    • ஆலசன் டெயில் லைட்ஸ்

    • ஷார்க்-ஃபின் ஆண்டெனா

    • ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள்

    • 16-இன்ச் அலாய் வீல்கள்

    • கனெக்டட் LED DRLகளுடன் ஆட்டோ-எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள்

    • LED DRL -களில் வெல்கம் & குட்பை அனிமேஷன்கள்

    • சீக்வென்ஷியல் டேர்ன் இண்டிகேட்டர்கள்

    • கனெக்டட் LED டெயில் லைட்ஸ்

    • ஷார்க்-ஃபின் ஆண்டெனா

    • ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள்

    • 18-இன்ச் அலாய் வீல்கள்

    இன்ட்டீரியர்

    • டூயல்-டோன் பிளாக் மற்றும் வொயிட் டாஷ்போர்டு

    • வொயிட் செமி லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி

    • லெதரைட் சீட் அப்ஹோல்ஸ்டரி

    • ஸ்டோரேஜ் உடன் முன் ஆர்ம்ரெஸ்ட்

    • கப் ஹோல்டர்களுடன் பின்புற மைய ஆர்ம்ரெஸ்ட்

    • டூயல்-டோன் டாஷ்போர்டு (வேரியன்ட் அடிப்படையில்)

    • ஆம்பியன்ட் லைட்ஸ்

    • லெதரைட் சீட் அப்ஹோல்ஸ்டரி 

    • லெதரைட் சுற்றப்பட்ட ஸ்டீயரிங்

    • ஒளிரும் டாடா லோகோவுடன் 4-ஸ்போக் ஸ்டீயரிங்

    • ஸ்டோரேஜ் உடன் முன் ஆர்ம்ரெஸ்ட்

    • கப் ஹோல்டர்களுடன் பின்புற மைய ஆர்ம்ரெஸ்ட்

    கம்ஃபோர்ட் & வசதி

    • பின்புற வென்ட்களுடன் ஆட்டோமெட்டிக் ஏசி

    • ஸ்டீயரிங்கில் உள்ள கன்ட்ரோல்கள்

    • வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்

    • 12V பவர் அவுட்லெட்

    • டைப்-A USB ஃபோன் சார்ஜர்

    • பின் இருக்கைகளுக்கு தொடையின் கீழ் செய்து கொள்ளக்கூடிய சப்போர்ட்

    • உயரத்தை செய்து கொள்ளக்கூடிய ஓட்டுநர் இருக்கை

    • 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே

    • எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட் கொள்ளக்கூடிய மற்றும் ஆட்டோ ஃபோல்டபிள் ORVM -கள்

    • டே/நைட் ஐஆர்விஎம்

    • பின்புற வென்ட்களுடன் ஆட்டோமெட்டிக் ஏசி

    • வென்டிலேட்டட் முன் இருக்கைகள்

    • ஏர் பியூரிஃபையர் 

    • க்ரூஸ் கன்ட்ரோல்

    • வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்

    • டைப்-A மற்றும் டைப்-சி USB ஃபோன் சார்ஜர்கள்

    • 6 வே பவர்டு ஓட்டுனர் இருக்கை

    • உயரத்தை சரி செய்து கொள்ளக்கூடிய கோ டிரைவர் சீட்

    • 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே

    • ஜெஸ்டர்டு கன்ட்ரோல்டு பவர்டு டெயில்கேட்

    • துடுப்பு மாற்றிகள்

    • மல்டி டிரைவ் மோடுகள்: ஸ்போர்ட், இகோ, சிட்டி

    • எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் மற்றும் ஆட்டோ ஃபோல்டபிள் ORVM -கள்

    • ஆட்டோ டிம்மிங் IRVM

    • பனோரமிக் சன்ரூஃப்

    • கூல்டு க்ளோவ் பாக்ஸ்

    • 60:40 பின்புற ஸ்பிளிட் சீட்கள் 

    இன்ஃபோடெயின்மென்ட்

    • 10.2 இன்ச் டச் ஸ்கிரீன்

    • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே

    • 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்

    • 12.3-இன்ச் இன்ச் டச் ஸ்கிரீன்

    • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே

    • 9-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம்.

    • கனெக்டட் கார் டெக்னாலஜி

    • கார்-டு-ஹோம் செயல்பாட்டுடன் அலெக்சா வாய்ஸ் கமென்ட்

    பாதுகாப்பு

    • 6 ஏர்பேக்ஸ்

    • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC)

    • பின்புற பார்க்கிங் கேமரா

    • பின்புற பார்க்கிங் சென்சார்கள்

    • பின்புற டிஃபோகர்

    • EBD உடன் ABS

    • ஹில் ஹோல்ட் அசிஸ்ட்

    • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்

    • அனைத்து இருக்கைகளுக்கும் 3-பாயிண்ட் சீட்பெல்ட்

    • அனைத்து இருக்கைகளுக்கும் சீட்பெல்ட் ரிமைண்டர்கள்

    • ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள்

    • 6 ஏர்பேக்ஸ்

    • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC)

    • ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்

    • பிளைண்ட் ஸ்பாட் கண்காணிப்புடன் 360 டிகிரி கேமரா

    • பின்புற டிஃபோகர்

    • ரெயின் சென்ஸிங் வைப்பர்கள்

    • முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள்

    • EBD உடன் ABS

    • அனைத்து இருக்கைகளுக்கும் 3-பாயிண்ட் சீட்பெல்ட்

    • அனைத்து இருக்கைகளுக்கும் சீட்பெல்ட் ரிமைண்டர்கள்

    • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்

    • லெவல் 2 ADAS

    • ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள்

    Tata Curvv Dashboard

    • கர்வ் தெளிவாக அதன் விரிவான வசதிகள் பட்டியலுடன் மட்டுமல்லாமல், உள்ளேயும் வெளியேயும் பிரீமியம் வடிவமைப்பு கூறுகளுடன் பசால்ட் காரை விட முன்னணியில் உள்ளது. கனெக்டட் எல்இடி லைட் செட்டப், பெரிய 18-இன்ச் அலாய்கள் மற்றும் ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் ஆகியவை இதில் அடங்கும்.

    • சிட்ரோனின் எஸ்யூவி-கூபே ஆனது LED DRL -களுடன் LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்களை பெறுகிறது. ஆனால் நீங்கள் சிறிய 16-இன்ச் சக்கரங்கள் கிடைக்கும். மற்றும் பெட்டல்-டைப் டோர் ஹேண்டில்கள் பழையதாக தோன்றுகின்றன.

    • கர்வ் ஆனது பெரிய 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது மட்டுமல்லாமல், பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 6-வே பவர் அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற பிரீமியம் வசதிகளையும் பெறுகிறது.

    • இருப்பினும், சிட்ரோன் பாசால்ட் 10.2-இன்ச் டச் ஸ்கிரீன், 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் ORVM -களை பெறுகிறது. 

    • இரண்டு கார்களிலும் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை சப்போர்ட் செய்கிறது. கர்வ் அதன் 9-ஸ்பீக்கர் JBL சவுண்ட் சிஸ்டத்துடன் பசால்ட்டை விட சற்று முன்னிலையில் உள்ளது. மறுபுறம் பசால்ட் வழக்கமான 6-ஸ்பீக்கர்  சவுண்ட் சிஸ்டத்தையே பெறுகிறது.

    • பாதுகாப்புக்காக இரண்டு கார்களிலும் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளன.

    • ஆனால் கர்வ் கூடுதலாக 360 டிகிரி கேமராவை பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், முன் பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங்  மற்றும் மிக முக்கியமாக அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் ஆட்டோமேட்டிக் உள்ளிட்ட லெவல் 2 மேம்பட்ட டிரைவர் உதவி அமைப்புகளை (ADAS) கொண்டுள்ளது. 

    விலை

    டாடா கர்வ்

    சிட்ரோன் பசால்ட்

    ரூ 9.15 லட்சம் முதல் ரூ 17.30 லட்சம் (எதிர்பார்க்கப்படுகிறது)

    ரூ.7.99 லட்சம் முதல் ரூ.13.57 லட்சம் (அறிமுகம்)

    விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை

    டாடா கர்வ் -க்கான விலை செப்டம்பர் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும்.

    முக்கிய விவரங்கள்

    டாடா கர்வ் -ன் தோற்றம் மற்றும் வசதிகளின் அடிப்படையில் அதிக பிரீமியமாக இருப்பதை மேலே உள்ள ஒப்பீட்டில் தெளிவாகக் பார்க்க முடியும். மேலும் இது டீசல் இன்ஜின் உட்பட அதிக சக்திவாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது. இருப்பினும் இந்த வசதிகள் சிட்ரோன் பாசால்ட்டுடன் ஒப்பிடும்போது டாடா கர்வ்வை விலை உயர்ந்த காராக மாற்றுகின்றன. பசால்ட் கண்ணைக் கவரும் வடிவமைப்பையும் பெற்றிருந்தாலும் வசதிகளின் அடிப்படையில் சில விஷயங்கள் சமரசம் செய்யப்பட்டுள்ளன.

    நவீன வடிவமைப்பு விஷயங்களுடன் கூடிய வசதிகள் நிறைந்த எஸ்யூவி-கூபே உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் டாடா கர்வ்க்காக காத்திருக்க வேண்டும். இருப்பினும் நீங்கள் பட்ஜெட் விலையில் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்ட ஸ்டைலான காரை தேடினால் பசால்ட் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

    கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    மேலும் படிக்க: சிட்ரோன் பசால்ட் ஆன்ரோடு விலை

    was this article helpful ?

    Write your Comment on Tata கர்வ்

    1 கருத்தை
    1
    S
    srikanth
    Aug 16, 2024, 12:37:57 PM

    East or west tata is the best

    Read More...
      பதில்
      Write a Reply

      explore similar கார்கள்

      ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

      புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

      கார் செய்திகள்

      • டிரெண்டிங்கில் செய்திகள்
      • சமீபத்தில் செய்திகள்

      டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

      • லேட்டஸ்ட்
      • உபகமிங்
      • பிரபலமானவை
      ×
      We need your சிட்டி to customize your experience