Citroen Basalt -ஐ விட Tata Curvv சிறப்பான 5 வசதிகளுடன் வரக்கூடும்
published on ஜூலை 30, 2024 02:38 pm by samarth for டாடா கர்வ்
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
இரண்டு எஸ்யூவி -கூபேக்களும் ஆகஸ்ட் 2024-இல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா கர்வ் ICE மற்றும் EV ஆகிய இரண்டு வெர்ஷன்களிலும் கிடைக்கும்.
இரண்டு புதிய மாஸ்-மார்க்கெட் எஸ்யூவி-கூபேக்கள் விரைவில் இந்திய சாலைகளில் பயணிக்க உள்ளன. டாடா கர்வ் ஆகஸ்ட் 7 அன்று அதன் எலக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது. சிட்ரோன் பசால்ட் இந்திய சந்தையில் சிட்ரோனின் ஐந்தாவது காராக இருக்கும். இரு வாகன உற்பத்தியாளர்களும் தங்களது சமீபத்திய மாடல்கள் பற்றிய விவரங்களை முழுமையாக வெளியிடவில்லை என்றாலும் சமீபத்திய டீஸர்கள் சில நுண்ணறிவுகளை வழங்கியுள்ளன. பாசால்ட்டை விட கர்வ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஐந்து அம்சங்கள் பற்றிய தகவல்கள் இதோ.
பெரிய ஸ்கிரீன்கள்
டாடா சமீபத்தில் கர்வ்வின் உட்புறங்களை டீசரில் வெளிப்படுத்தியது இது ஒரு பெரிய 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இவை இரண்டும் நெக்ஸான் EV -யில் உள்ளது போன்றே அமைந்திருக்கிறது. மாறாக சிட்ரோன் பாசால்ட் 10.2 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 7 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. பெரிய ஸ்கிரீன்கள் உங்களின் விருப்பமாக இருக்கும்பட்சத்தில் டாடா கர்வ் உங்களுக்கான ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
பனோரமிக் சன்ரூஃப்
டாடா கர்வ் அறிமுகப்படுத்தப்பட்ட போது அது ஒரு பரந்த சன்ரூஃப் கொண்டதாக டீசரில் காட்டப்பட்டது. அதே சமயம் பாசால்ட்டிற்காக வெளியிடப்பட்ட டீஸர்களில் இருந்து சன்ரூஃப் (சிங்கிள்-பேன் யூனிட் கூட இல்லை) இருப்பதற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை.
பிரீமியம் ஸ்பீக்கர்கள்
டாடா கர்வ்வில் JBL-லின் 9-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் மற்றும் ஒரு சப் வுஃபரும் இதில் இடம்பெறுகிறது இது ஏற்கனவே ஹாரியர் மற்றும் சஃபாரி போன்ற மற்ற டாடா மாடல்களில் இடம்பெற்றுள்ளது. மாறாக சிட்ரோன் பசால்ட் காரில் பிராண்டட் அல்லாத ஆடியோ சிஸ்டத்துடன் வரலாம்.
மேலும் பார்க்க: Tata Curvv மற்றும் Tata Curvv EV: இரண்டு கார்களின் வெளிப்புற வடிவமைப்பு ஒப்பீட
வென்டிலேட்டட் சீட்கள்
சிட்ரோன் பசால்ட் தவறவிட வாய்ப்புள்ள மற்றொரு வசதி ஆனால் டாடா கர்வ்வில் இடம்பெறும் என எதிர்பார்க்கக்கூடிய ஒரு வசதி அதன் வென்டிலேட்டட் முன் சீட்கள். நாட்டின் சில பகுதிகளில் கோடை காலங்களில் இந்த வசதி மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும். டாடா ஏற்கனவே பஞ்ச் EV நெக்ஸான் சஃபாரி மற்றும் ஹாரியர் உள்ளிட்ட அதன் பெரும்பாலான எஸ்யூவி-களில் வென்டிலேட்டட் சீட்களை வழங்கிவருகிறது எனவே இது கர்வ் டியோவிலும் இடம் பெற வாய்ப்புள்ளது.
ADAS
அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்
டாடா கர்வ் ஆனது அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டங்களுடன் (ADAS) வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பல ஸ்பை ஷாட்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. கர்வ்-க்கான எதிர்பார்க்கப்படும் ADAS அம்சங்களில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் லேன்-கீப்பிங் அசிஸ்ட் ஃபார்வர்ட் கோலிஷன் வார்னிங் மற்றும் ஒரு பிளைண்ட் ஸ்பாட் வியூ மானிட்டர் ஆகியவை அடங்கும். மாறாக சிட்ரோன் பசால்ட் எந்த ஒரு ADAS தொழில்நுட்பத்தையும் வழங்கப்போவதில்லை என்பது வருத்தமளிக்கிறது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா கர்வ் ICE (இன்டர்னல் கம்பஷன் இன்ஜின்) ரூ. 10.50 லட்சத்திலிருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கர்வ் EV-யின் ஆரம்ப விலை ரூ. 20 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம். சிட்ரோன் பாசால்ட் ரூ.10 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு எஸ்யூவி-கூபேக்களும் ஹூண்டாய் கிரெட்டா மாருதி கிராண்ட் விட்டாரா ஹோண்டா எலிவேட் மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற காம்பாக்ட் எஸ்யூவி-களுக்கு ஒரு ஸ்டைலான மாற்றாக இருக்கும்.
லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்
0 out of 0 found this helpful