இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது Kia EV9
க்யா ev9 க்காக அக்டோபர் 03, 2024 05:49 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 37 Views
- ஒரு கருத்தை எழுதுக
கியா EV9 என்பது இந்தியாவில் கியா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எலக்ட்ரிக் எஸ்யூவி ஆக இருக்கும். இது 561 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும்.
-
இது E-GMP தளத்தை அடிப்படையாகக் கொண்டது. கியா EV6 மற்றும் ஹூண்டாய் அயோனிக் 5 ஆகிய கார்களும் இதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டவை.
-
வெளிப்புறத்தில் இது கிரில் மற்றும் ஸ்டார் மேப் LED DRL -களில் டிஜிட்டல் லைட்டிங் பேட்டர்ன் உள்ளது.
-
உள்ளே இது டிரிபிள் ஸ்கிரீன் செட்டப்புடன் மினிமலிஸ்டிக் ஃபுளோட்டிங் டாஷ்போர்டு வடிவமைப்பைப் கொண்டுள்ளது.
-
இரண்டாவது வரிசை இருக்கைகள் 8-வே சக்தி அட்ஜெஸ்ட்டபிள் மற்றும் மசாஜ் ஃபங்ஷனுடன் வருகின்றன.
-
டூயல் சன்ரூஃப்கள், ரிலாக்சேஷன் ஃபங்ஷன் முன் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகள் மற்றும் லெவல் 2 ADAS உடன் வருகிறது.
-
99.8 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 500 கி.மீக்கு மேல் கிளைம்டு ரேஞ்சை வழங்குகிறது.
-
384 PS மற்றும் 700 Nm நான்கு சக்கரங்களையும் இயக்கும் டூயல் மோட்டார் செட்டப்பை கொண்டுள்ளது.
அதன் உலகளாவிய அறிமுகத்திலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கியா EV9 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 1.30 கோடி (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. EV9 ஆனது E-GMP தளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஏற்கெனவே கியா EV6 மற்றும் ஹூண்டாய் அயோனிக் 5 ஆகியவை இந்த கட்டமைப்பில் வடிவமைக்கப்படுகின்றன. இந்த ஃபிளாக்ஷிப் கியா EV கார் முற்றிலும் கட்டப்பட்ட யூனிட்டாக (CBU) இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.
வடிவமைப்பு
EV9 ஆனது பாக்ஸி எஸ்யூவி போன்ற ஷேடை கொண்டிருந்தாலும் கூட நவீன எல்இடி லைட்டிங் எலமென்ட்களுடன் இது இன்னும் அதிநவீனமாக தோற்றமளிக்கிறது. முன்புறத்தில் இது டிஜிட்டல் பேட்டர்ன் லைட்டிங்கை கிரில் உள்ளது, செங்குத்தாக உள்ள ஹெட்லைட் செட்டப், ஸ்டார் மேப் லைட்டிங் எனப்படும் LED DRL -களும் இதில் உள்ளன. இது அனிமேஷன் செய்யப்பட்ட லைட்டிங் பேட்டர்னை கொடுக்கிறது. EV9 ஆனது டேப்பர்ட் ரூஃப் லைனையும் கொண்டுள்ளது. அதே சமயம் பின்புறத்தில் செங்குத்தாக அடுக்கப்பட்ட LED டெயில் லைட்கள் மற்றும் சில்வர் ஸ்கிட் பிளேட் கொண்ட பிளாக் அவுட் பம்பருடன் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க: இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது 2024 கியா கார்னிவல்
கேபின் மற்றும் வசதிகள்
உள்ளே கியா EV9 பிளாக் கலரில் ஃபினிஷிங் செய்யப்பட்ட ஃபிரீ ஃபுளோட்டிங் டாஷ்போர்டு வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது மினிமலிஸ்டிக்காக தெரிகிறது. அதன் 3 ஸ்கிரீன் செட்டப் முக்கிய ஹைலைட்ஸ்களில் ஒன்றாகும் இதில் இரண்டு 12.3-இன்ச் ஸ்க்ரீன்கள் இரண்டு டிஸ்ப்ளேக்களுக்கு இடையில் 5.3-இன்ச் கிளைமேட் கண்ட்ரோல் டிஸ்ப்ளே மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் ஸ்கிரீனுக்கு கீழே, ஸ்டார்ட்/ஸ்டாப், கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் வென்டிலேட்டட் செட்டப், மீடியா மற்றும் பிற செட்டிங்க்ஸ்களுக்கான டாஷ்போர்டு பேனலில் கிட்டத்தட்ட மறைக்கப்பட்ட வகை டச்-இன்புட் கன்ட்ரோல்களும் உள்ளன.
இந்தியா-ஸ்பெக் EV9 -ன் மற்ற அம்சங்களில் முதல் மற்றும் இரண்டாவது வரிசைக்கான தனிப்பட்ட சன்ரூஃப்கள், டிஜிட்டல் IRVM (பின்புறக் வியூ மிரர்ஸ் உள்ளே), முதல் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கான லெக் சப்போர்ட் மற்றும் 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவை அடங்கும். EV9 -ன் இரண்டாவது வரிசை கேப்டன் இருக்கைகளை 8-வே பவர் அட்ஜெஸ்ட்டபிள் மற்றும் மசாஜ் ஃபங்ஷனுடன் கிடைக்கின்றன.
EV9 -யின் பாதுகாப்புக்காக மல்டி ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆட்டோமெட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற வசதிகள் உள்ளன. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி ஏற்கனவே யூரோ என்சிஏபி மற்றும் ஏஎன்சிஏபி கிராஷ் டெஸ்ட்களில் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது.
பவர்டிரெய்ன் விவரங்கள்
இந்தியா-ஸ்பெக் EV9 ஆனது 99.8 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. விரிவான விவரங்கள் இங்கே:
பேட்டரி பேக் |
99.8 kWh |
கிளைம்டு ரேஞ்ச் |
561 கி.மீ வரை (ARAI-MIDC Full) |
எலக்ட்ரிக் மோட்டார்களின் எண்ணிக்கை |
2 |
பவர் |
384 PS |
டார்க் |
700 Nm |
ஆக்ஸிலரேஷன் (0-100 கி.மீ/மணி) |
5.3 வினாடிகள் |
டிரைவ் டைப் |
AWD (ஆல்-வீல் டிரைவ்) |
ARAI - ஆட்டோமெட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா
MIDC - மாடிஃபைடு இந்தியன் டிரைவிங் சைக்கிள்
கியாவின் ஃபிளாக்ஷிப் எலக்ட்ரிக் எஸ்யூவி ஆனது 350 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இதனால் பேட்டரி பேக்கை வெறும் 24 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை ரீசார்ஜ் செய்ய முடியும். EV9 ஆனது V2L (வெஹிகிள் டூ லோடு) வசதியையும் கொண்டுள்ளது. இது காரின் பேட்டரியைப் பயன்படுத்தி வெளிப்புற சாதனங்களை இயக்க உதவுகிறது.
விலை & போட்டியாளர்கள்
இந்தியாவில், கியா EV9 ஆனது BMW iX மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் EQE எஸ்யூவி ஆகியவற்றுக்கு விலை குறைவான மாற்றாக இருக்கும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.