இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது 2024 Kia Carnival
published on அக்டோபர் 03, 2024 06:06 pm by rohit for க்யா கார்னிவல்
- 40 Views
- ஒரு கருத்தை எழுதுக
2023 ஆம் ஆண்டின் மத்தியில் இரண்டாம் தலைமுறை கார்னிவல் மாடல் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டது. இப்போது கியா கார்னிவல் ஒரு இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் வந்துள்ளது.
-
இது ஒரே ஒரு ஃபுல்லி லோடட் லிமோசின் பிளஸ் வேரியன்ட்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 63.90 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
வடிவமைப்பில் 4-பீஸ் LED ஹெட்லைட்ஸ் மற்றும் 18-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை உள்ளன.
-
கேபின் 3-வரிசை இருக்கை செட்டப் மற்றும் ஒரே ஒரு பிளாக் மற்றும் பிரெளவுன் தீம் ஆப்ஷனை கொண்டுள்ளது.
-
இரண்டு சன்ரூஃப்கள், டூயல் 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் மற்றும் லெவல்-2 ADAS ஆகியவை அடங்கும்.
-
8-ஸ்பீடு AT உடன் கனெக்டட் ஒரு 2.2-லிட்டர் டீசல் இன்ஜினுடன் வழங்கப்படுகிறது.
சில காலத்துக்கு பிறகு கியா கார்னிவல் இப்போது இந்திய சந்தைக்கு திரும்பியுள்ளது. இப்போது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நான்காவது தலைமுறை பதிப்பில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கியா 2024 செப்டம்பரின் நடுப்பகுதியில் இருந்து பிரிமியம் MPV -க்கான முன்பதிவுகளை ஆன்லைனில் மற்றும் அதன் டீலர்ஷிப்களில் ரூ.2 லட்சத்திற்குத் தொடங்கியது. புதிய கார்னிவல் ரூ.63.90 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) விலையில் ஒரே ஒரு ஃபுல்லி லோடட் லிமோசின் பிளஸ் வேரியன்ட்டில் கிடைக்கிறது.
புதிய கியா கார்னிவல் காரின் வெளிப்புறம்
இந்தியா-ஸ்பெக் 2024 கியா கார்னிவல் உலகளவில் விற்கப்படும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நான்காம்-தலைமுறை மாடலை போலவே இருக்கிறது. இது கியாவின் புதிய வடிவமைப்பை கொண்டுள்ளது. இதில் ஒரு கிரில் (குரோம் கார்னிஷ் உள்ளன), வெர்டிகலாக உள்ள 4-பீஸ் LED ஹெட்லைட்கள் மற்றும் கனெக்டட் LED DRL -கள் உள்ளன.
பக்கவாட்டில் இந்தியாவில் விற்கப்பட்ட இரண்டாம் தலைமுறை கார்னிவலில் இருந்து பின்பக்க பயணிகளுக்கான பவர்-ஸ்லைடிங் டோர்கள் அப்படியே உள்ளன. மற்ற வெளிப்புற சிறப்பம்சங்கள் புதிய 18-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் கனெக்டட் LED டெயில் லைட்ஸ் ஆகியவை உள்ளன.
மேலும் படிக்க: 2024 செப்டம்பர் மாதம் அறிமுகமான கார்களின் விவரங்கள்
புதிய கியா கார்னிவல் இன்ட்டீரியர்
2024 இந்தியா-ஸ்பெக் கியா கார்னிவலின் உட்புறமும் சர்வதேச சந்தைகளில் விற்கப்படும் மாடலை போலவே உள்ளது. இது 3-வரிசை அமைப்பில் இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகள் மற்றும் கடைசி வரிசையில் ஒரு பெஞ்ச் சீட் உடன் வருகிறது. இந்த கார் ஒரே ஒரு டேன் மற்றும் பிரெளவுன் கலர் கேபின் தீமில் கிடைக்கும்.
இது இரண்டு 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் உடன் வருகிறது (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்டேஷன்), மற்றும் 11-இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD). இது லும்பார் சப்போர்ட் உடன் கூடிய 12-வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுநர் இருக்கை மற்றும் 8-வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் பயணிகள் இருக்கை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இரண்டு சிங்கிள்-பேன் சன்ரூஃப்கள், 3-ஜோன் ஆட்டோ ஏசி, ஒரு பவர்டு டெயில்கேட் மற்றும் 12-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் கியா கார்னிவலை வழங்குகிறது.
8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, நான்கு டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டிபிஎம்எஸ் (டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம்) ஆகியவை பாதுகாப்புக்காக உள்ளன. இது லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) பெறுகிறது, ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் ஆகியவையும் உள்ளன.
புதிய கியா கார்னிவல் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்
புதிய இந்தியா-ஸ்பெக் கார்னிவல் ஒரே ஒரு இன்ஜின்-கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன் வழங்கப்படுகிறது, அதன் விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:
விவரங்கள் |
2.2 லிட்டர் டீசல் |
பவர் |
193 PS |
டார்க் |
441 Nm |
டிரான்ஸ்மிஷன் |
8-ஸ்பீடு ஏடி |
3.5-லிட்டர் V6 பெட்ரோல் (287 PS/353 Nm) மற்றும் 1.6-லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் (242 PS/367 Nm) உட்பட பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் சர்வதேச-ஸ்பெக் கார்னிவலை கியா வழங்குகிறது.
புதிய கியா கார்னிவல் காரின் போட்டியாளர்கள்
2024 கியா கார்னிவல் ஆனது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மற்றும் மாருதி இன்விக்டோ ஆகிய கார்களுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கும். மேலும் லெக்ஸஸ் எல்எம் மற்றும் டொயோட்டா வெல்ஃபயர் ஆகியவற்றுக்கு விலை குறைவான ஆப்ஷனாக இருக்கும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful