எக்ஸ்க்ளூஸிவ்: இந்தியாவுக்கான கியா EV9 -யின் விவரங்கள் இங்கே
published on செப் 18, 2024 08:08 pm by shreyash for க்யா ev9
- 46 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியா-ஸ்பெக் கியா EV9 ஆனது 99.8 kWh பேட்டரி பேக்கை பயன்படுத்தும். இது 500 கி.மீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும்.
-
கிரில்லில் டிஜிட்டல் லைட்டிங் பேட்டர்ன் மற்றும் ஸ்டார் மேப் LED DRL -கள் ஆகியவற்றை வெளியில் பார்க்க முடிகிறது.
-
உள்ளே இது டிரிபிள் ஸ்கிரீன் செட்டப்புடன் மினிமலிஸ்ட் டாஷ்போர்டு வடிவமைப்புடன் வருகிறது.
-
டூயல் சன்ரூஃப்கள், ரிலாக்சேஷன் முன் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகள் மற்றும் நிலை 2 ADAS ஆகியவையும் ஹைலைட்ஸ் ஆக உள்ளன.
-
இரண்டாவது வரிசை இருக்கைகள் 8-வே பவர் அட்ஜெஸ்ட்டபிள் மற்றும் மசாஜ் ஃபங்ஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
-
டூயல் மோட்டார் செட்டப் உள்ளது. இது 384 PS மற்றும் 700 Nm நான்கு சக்கரங்களையும் டிரைவ் செய்கிறது.
-
350 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இதன் மூலமாக 24 நிமிடங்களில் 10-80 சதவிகிதம் சார்ஜ் செய்யலாம்.
-
விலை ரூ.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
கியா EV9 அக்டோபர் 3, 2024 அன்று கியாவின் ஃபிளாக்ஷிப் எலக்ட்ரிக் எஸ்யூவி -யாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. EV9 ஆனது E-GMP தளத்தை அடிப்படையாகக் கொண்டது. இது Kia EV6 மற்றும் ஹூண்டாய் அயோனிக் 5 ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னதாக இந்தியா-ஸ்பெக் EV9, அளவுகள், வசதிகள், பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச் உடன் உட்பட அதன் விவரங்கள் பற்றிய சில பிரத்யேக தகவல்களை இப்போது நாங்கள் பெற்றுள்ளோம்.
அளவுகள்
நீளம் |
5,010 மி.மீ |
அகலம் |
1,980 மி.மீ |
உயரம் |
1,755 மி.மீ |
வீல்பேஸ் |
3,100 மி.மீ |
கியா EV9 ஆனது 5 மீட்டர் நீளம் கொண்டது, இது அதன் ஒட்டுமொத்த சாலை தோற்த்தை மேம்படுத்துகிறது. இன்டெகிரேட்டட் டிஜிட்டல் பேட்டர்ன் லைட்டிங், வெர்டிகலான ஹெட்லைட் செட்டப், ஸ்டார் மேப் லைட்டிங் எனப்படும் LED DRL -களை கொண்டுள்ளது. இது அனிமேஷன் லைட்டிங் பேட்டர்னை உருவாக்குகிறது.
தொழில்நுட்பம் கூடுதலான கேபின்
கியா EV9 ஆனது, டூயல்-டோன் வொயிட் மற்றும் பிளாக் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன், பிளாக் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்ட மினிமலிஸ்டிக் டாஷ்போர்டு வடிவமைப்புடன் வருகிறது. இரண்டு 12.3-இன்ச் ஸ்கிரீன்கள், இந்த இரண்டு ஸ்கிரீன்களுக்கு இடையே 5.3-இன்ச் க்ளைமேட் கண்ட்ரோல் டிஸ்ப்ளே மூலம் இன்டெகிரேட்டட் 3 ஸ்கிரீன் செட்டப் உடன் வருகிறது. ஸ்கிரீனுக்கு கீழே டாஷ்போர்டு பேனலில் ஸ்டார்ட்/ஸ்டாப், கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் வென்டிலேட்டட் செட்டப், மீடியா மற்றும் பிற செட்டப்களுக்கு கிட்டத்தட்ட மறைக்கப்பட்ட டச்-இன்புட் கன்ட்ரோல்கள் உள்ளன. EV9 -ன் இரண்டாவது வரிசை கேப்டன் இருக்கைகளை 8-வே பவர் அட்ஜெஸ்ட்டபிள் மற்றும் மசாஜ் ஃபங்ஷன் உடன் வழங்குகிறது.
இந்தியா-ஸ்பெக் EV9 -ன் மற்ற வசதிகளில் முதல் மற்றும் இரண்டாவது வரிசைக்கான தனிப்பட்ட சன்ரூஃப்கள், டிஜிட்டல் IRVM (பின்புறக் காட்சி கண்ணாடியின் உள்ளே) மற்றும் கால் சப்போர்ட் உடன் முதல் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கான தளர்வு வசதி ஆகியவை உள்ளன. EV9 -ன் பாதுகாப்பு கிட், ஆட்டோமெட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகளை உள்ளடக்கியது.
மேலும் பார்க்க: 2024 கியா கார்னிவல் முன்பதிவு செய்த முதல் நாளில் 1,800 முன்கூட்டிய ஆர்டர்களைக் கடந்தது
பேட்டரி பேக் & ரேஞ்ச்
கியா இந்தியா-ஸ்பெக் EV9 ஐ 99.8 kWh பேட்டரி பேக்குடன் வழங்கும். விரிவான விவரங்கள் பின்வருமாறு:
பேட்டரி பேக் |
99.8 kWh |
கிளைம்டு ரேஞ்ச் |
500 கி.மீ -க்கு மேல் |
எலக்ட்ரிக் மோட்டார்களின் எண்ணிக்கை |
2 |
டிரைவ் டைப் |
AWD (ஆல்-வீல் டிரைவ்) |
வீல் |
384 PS |
டார்க் |
700 Nm |
EV9 ஆனது 350 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இதன் மூலம் அதன் பேட்டரி பேக் வெறும் 24 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யப்படலாம். EV9 ஆனது V2L (வெஹிகிள் டூ வெஹிகிள்) ஃபங்ஷனையும் கொண்டிருக்கும். இது காரின் பேட்டரி பேக் மூலம் உங்கள் வெளிப்புற சாதனங்களுக்கு பவரை பகிர அனுமதிக்கிறது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
கியா EV9 விலை ரூ.80 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் BMW iX மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் EQE எஸ்யூவி ஆகியவற்றுக்கு மாற்றாக இருக்கும்.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.