2024 ஆம் ஆண்டுக்கான வேர்ல்டு கார் ஆஃப் தி இயர் விருதை வென்றது கியா EV9
- 36 Views
- ஒரு கருத்தை எழுதுக
கியாவின் ஃபிளாக்ஷிப் EV 2024 ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
EV9 -க்கு 2024 வேர்ல்டு எலக்ட்ரிக் வெஹிகிள் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
-
WCOTY 2024 -யின் பட்டியலில் BYD சீல் மற்றும் Volvo EX30 ஆகியவையும் முன்னிலையில் உள்ளன.
-
EV9 என்பது கியாவின் ஃபிளாக்ஷிப் 3-வரிசை எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும்.
-
RWD மற்றும் AWD ஆகிய இரண்டு ஆப்ஷன்களுடன் வேர்ல்டுளவில் பல்வேறு எலக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் பேட்டரி பேக் அமைப்புகளுடன் கிடைக்கிறது.
-
விலை சுமார் ரூ.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கலாம். CBU ஆக இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேர்ல்டு கார் ஆஃப் தி இயர் (WCOTY) பட்டத்திற்கான முதல் மூன்று வேட்பாளர்களை இறுதி செய்யப்பட்டு இப்போது வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கியா EV9 வெற்றியாளராக முதலிடத்தை பிடித்துள்ளது. EV9 கார் WCOTY விருதை வென்றது மட்டுமல்லாமல் ‘வேர்ல்டு எலக்ட்ரிக் வெஹிகிள்’ பட்டத்தையும் பெற்றுள்ளது.
முதலிடத்துக்கான கடும் போட்டி
முதலிடத்துக்கு BYD சீல் (இந்தியாவிலும்) மற்றும் வால்வோ EX30 (இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது) - ஆகிய இரண்டு எலக்ட்ரிக் கார்களும் போட்டியிட்டன. ஒரு கார் வேர்ல்டு எலக்ட்ரிக் வெஹிகிள் விருதுகளை வெல்வதற்கு அது குறைந்தது இரண்டு கண்டங்களில் விற்கப்பட வேண்டும். 29 நாடுகளைச் சேர்ந்த 100 வாகனப் பத்திரிகையாளர்கள் அடங்கிய நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேர்ல்டு கார் விருதுகள் அதன் வடிவமைப்பு விலை மற்றும் 7-இருக்கை உட்புறத்தின் அடிப்படையில் கியா EV9 வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.
பிற WCOTY 2024 வெற்றியாளர்கள்
வேர்ல்டு கார் விருதுகள் 2024 -ல் கியா EV9 மட்டும் வெற்றியடையவில்லை. பிற பிரிவுகளில் விருதுகளைப் பெற்ற மற்ற மாடல்கள் பின்வருமாறு:
மாடல் |
விருதின் வகை |
BMW 5 சீரிஸ்/ i5 |
வேர்ல்டு லக்ஸரி கார் |
ஹூண்டாய் அயோனிக் 5 N |
வேர்ல்டு ஃபெர்பாமன்ஸ் கார் |
வால்வோ EX30 |
வேர்ல்டு அர்பன் கார் |
டொயோட்டா ப்ரியஸ் |
வேர்ல்டு கார் டிஸைன் ஆப் தி இயர் |
கியா EV9 பற்றிய கூடுதல் விவரங்கள்
கியாவின் 3-வரிசை ஆல்-எலக்ட்ரிக் எஸ்யூவி ஆனது பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன்களை பெறுகிறது. ரியர்-வீல் டிரைவ் (RWD) மற்றும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) கட்டமைப்புகள் இரண்டையும் கொண்டுள்ளது. EV9 ஆனது 541 கி.மீ.க்கும் அதிகமான ரேஞ்சை கொண்டுள்ளன. இது வழக்கமான பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கும் லக்ஸரி எஸ்யூவி -க்கு ஒரு EV மாற்றாக அமைகிறது. இது சிறப்பான சாலை தோற்றம், எதிர்கால வடிவமைப்பு உடன் கூடிய விசாலமான கேபினையும் கொண்டுள்ளது.
இந்திய வெளியீடு மற்றும் விலை
கியா EV9 இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவிற்கு முழுமையாக கட்டமைக்கப்பட்ட (CBU) இறக்குமதி ஆக கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 80 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும். இது போன்ற BMW iX மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் EQE SUV லக்ஸரி எலக்ட்ரிக் எஸ்யூவி -களுக்கு குறைவான விலை கொண்ட மாற்றாக இருக்கும்.
0 out of 0 found this helpful