இந்தியாவிற்கான புதிய Renault மற்றும் Nissan எஸ்யூவி-களின் முதல் டீஸர் வெளியாகியுள்ளது, 2025 ஆண்டில் கார்களின் அறிமுகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது
published on மார்ச் 28, 2024 06:13 pm by rohit for ரெனால்ட் டஸ்டர் 2025
- 23 Views
- ஒரு கருத்தை எழுதுக
இரண்டு எஸ்யூவி -களும் புதிய மற்றும் பெரிதும் உள்ளூர்மயமாக்கப்பட்ட CMF-B பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டவை. இந்த பிளாட்ஃபார்ம் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு வரவிருக்கும் பிற ரெனால்ட்-நிஸான் மாடல்களிலும் பயன்படுத்தப்படும்.
-
ரெனால்ட் மற்றும் நிஸான் 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் மீண்டும் நுழைய உள்ளது.
-
புதிய எஸ்யூவி -களின் முதல் டீஸர் படம் வெளியானது அவற்றின் வலுவான மற்றும் ஸ்டைலான வடிவமைப்பை இப்படம் எடுத்துக்காட்டுகிறது.
-
புதிய (இந்தியாவுக்கான) மற்றும் பெரிதும் உள்ளூர்மயமாக்கப்பட்ட CMF-B பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டது.
-
CMF-B பிளாட்ஃபார்ம் ஒவ்வொரு பிராண்டின் கீழும் 5-சீட்டர் மற்றும் 7-சீட்டர் கொண்ட எஸ்யூவி இரண்டிற்கும் அடித்தளமாக செயல்படும்.
-
பெட்ரோல் ஆப்ஷன்களுடன் மட்டுமே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு டர்போ-பெட்ரோல் பவர்டிரெயின் கொடுக்கப்படலாம்.
-
5-சீட்டர் கொண்ட மாடல்கள் 2025 ஆம் ஆண்டில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதன் விலை ரூ. 10 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும்.
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தான் இந்தியாவில் நான்கு எஸ்யூவி -கள் உட்பட ஆறு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் ரெனால்ட்-நிஸான் திட்டங்களைப் பற்றி நாங்கள் முதலில் அறிந்தோம். இப்போது கார் தயாரிப்பாளர் கூட்டணி இந்தியாவிற்கு வரவிருக்கும் எஸ்யூவி-களின் முதல் பார்வையை எங்களுக்கு வழங்கியுள்ளது. அவை 2025 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டீசர் படம் எதைக் காட்டுகிறது?
டீஸர் படம் ரெனால்ட் மற்றும் நிஸான் இரண்டிலிருந்தும் அதிகாரப்பூர்வமாக C-செக்மென்ட் எஸ்யூவி-களாக வகைப்படுத்தப்பட்ட புதிய காம்பாக்ட் எஸ்யூவி-களின் முதல் பார்வையை நமக்கு வழங்குகிறது. டிசைன் டீசரில் அவற்றின் முன்பகுதியை பார்க்க முடிகின்றது. ரெனால்ட் எஸ்யூவி ஒரு முரட்டுத்தனமான அழகியலைக் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இது ஒரு வலுவான முன்பக்க பம்பர் மற்றும் உயரமான ஸ்கிட் பிளேட் ஆகியவற்றை கொண்டுள்ளது. நிஸான் மாடல் மறுபுறம் பானட்டின் அகலத்தில் இயங்கும் கனெக்டட் LED DRL ஸ்ட்ரிப் மற்றும் கிரில்லின் மையத்தில் உள்ள நிஸான் லோகோ வரை செல்லும் இரண்டு நேர்த்தியான குரோம் பார்களுடன் மிகவும் ஸ்டைலான தோற்றத்தைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் இன்ஜின்கள் போன்ற விஷயங்களை பகிர்ந்து கொண்டாலும் ஒவ்வொரு எஸ்யூவி-யும் தனித்துவமான காட்சிப் பண்புகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிளாட்ஃபார்ம் பற்றிய கூடுதல் விவரங்கள்
இந்த இரண்டு எஸ்யூவி-களும் புத்தம் புதிய பெரிதும் உள்ளூர்மயமாக்கப்பட்ட CMF-B பிளாட்ஃபார்மை பயன்படுத்தும் இது இந்தியாவிற்கு முதன்முறையாகும். இந்த பிளாட்ஃபார்ம் நான்கு புதிய C-செக்மென்ட் எஸ்யூவி-களுக்கு அடித்தளமாக செயல்படும் ஒவ்வொரு வாகன தயாரிப்பாளரும் 5 சீட்டர்கள் மற்றும் 7 சீட்டர்களைக் கொண்ட எஸ்யூவி-யை அறிமுகப்படுத்துகிறார்கள். வரவிருக்கும் இந்த மாடல்கள் பல்வேறு சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்படும்.
பவர்டிரெயின் ஆப்ஷன்கள் எப்படி?
குறிப்பிட்ட டெக்னிக்கல் ஸ்பெசிஃபிகேஷன்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் இந்தியாவில் டீசல் இன்ஜின்களை நிறுத்துவதற்கான இரு வாகன உற்பத்தியாளர்களின் முடிவோடு எஸ்யூவி டூயோ பிரத்தியேகமாக பெட்ரோல் பவர்டிரெயின்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்களில் டர்போ-பெட்ரோல் இன்ஜின்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம் அவற்றின் முக்கிய செக்மென்ட்டில் போட்டியாளர்களிடையே காணப்படும் போக்குகளை பிரதிபலிக்கிறது. இந்த நான்கு புதிய எஸ்யூவி-களில் ஒன்றைக் கருத்தில் கொண்டு அடுத்த தலைமுறை ரெனால்ட் டஸ்ட்டரை உள்ளடக்கியிருக்கலாம் ஆல்-வீல் டிரைவ் வேரியன்ட் ஒரு ஆப்ஷனாக கிடைக்க வாய்ப்புள்ளது.
எதிர்பார்க்கப்படும் அறிமுகம் மற்றும் விலை
ரெனால்ட்-நிஸான் எஸ்யூவி-கள் குறிப்பாக 5-சீட்டர் கொண்ட மாடல்கள் 2025 ஆம் ஆண்டில் சந்தைக்கு வரும். இதன் தொடக்க விலை ரூ.10 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா ,ஹூண்டாய் கிரெட்டா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஹோண்டா எலிவேட் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்ற போட்டியாளர்களை எதிர்கொள்ளும் இந்த எஸ்யூவி-கள் இந்தியாவில் கடுமையாக போட்டி உள்ள பிரிவில் நுழையும்.
7-சீட்டர் கொண்ட எஸ்யூவி-கள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம் ஒருவேளை 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கூட அறிமுகப்படுத்தப்படலாம்.
0 out of 0 found this helpful