• English
  • Login / Register

இந்தியாவில் சப்-4மீ எஸ்யூவி -யை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டம் இப்போதைக்கு இல்லை… பிரீமியம் மாடல்களில் மட்டுமே கவனம் செலுத்த ஃபோக்ஸ்வேகன் முடிவு

published on மார்ச் 22, 2024 02:40 pm by rohit for வோல்க்ஸ்வேகன் விர்டஸ்

  • 32 Views
  • ஒரு கருத்தை எழுதுக

வழக்கம் போல இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் வரிசையானது விர்ட்டஸ் செடானில் இருந்து தொடங்கும். இது ஃபோக்ஸ்வேகனின் மிகவும் குறைவான விலை கொண்ட காராக ரூ. 11.56 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) கிடைக்கும்.

Volkswagen to not offer a sub-4m SUV in India

இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் ஸ்கோடா நிறுவனம் புதிய சப்-4எம் எஸ்யூவியை உருவாக்கி வருவதாக 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. ஸ்கோடா -வுடன் இணைந்து பெரிதும் உள்ளூர்மயமாக்கப்பட்ட MQB-A0-IN இயங்குதளத்தின் அடிப்படையிலான இந்தியா 2.0 மாடல்களை ஃபோக்ஸ்வேகன்  உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆகவே  ஸ்கோடா சப்-4எம் எஸ்யூவி -க்கு சமமாக ஃபோக்ஸ்வேகனில் ஒரு கார் அறிமுகப்படுத்தப்படலாம் என செய்திகள் வெளியாகின. ஆனால், ஃபோக்ஸ்வேகனின் சப்-4m எஸ்யூவி பிரிவில் நுழையாது என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஸ்பை ஷாட்டால் அதிகரித்த எதிர்பார்ப்பு

Skoda sub-4m SUV design sketch teaser

ஃபோக்ஸ்வேகன் உருவாக்கி வரும் புதிய சப்-4எம் எஸ்யூவி -க்கான என்பது சமீபத்தில் வரவிருக்கும் எஸ்யூவியின் புதிய ஸ்பை ஷாட் ஆன்லைனில் வெளிவந்தபோது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றானது. பல அறிக்கைகள் இது ஃபோக்ஸ்வேகன் காரின் சப்-4m எஸ்யூவியாகவோ அல்லது ஸ்கோடா சப்-4m எஸ்யூவி ஆக இருக்கலாம் என்றோ கூறின.

ஃபோக்ஸ்வேகனின் முடிவிற்கான காரணங்கள் என்ன ?

இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் நடவடிக்கைக்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். ஒரு காரணம் என்னவென்றால் சப்-4m எஸ்யூவி பிரிவு அதிக விலை-மதிப்பு விகிதம் மற்றும் பிரிவில் உள்ள கடுமையான போட்டியின் காரணமாக அங்கே போட்டியிடுவதை கடினமாக்குகிறது.

மற்றொரு காரணம் ஃபோக்ஸ்வேகன் பிரீமியம் கார்களில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இதன் விளைவாக அதன் இந்திய வரிசையானது ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் செடானில் இருந்து வழக்கபோல விற்பனை செய்யப்படும். இதன் விலை ரூ.11.56 லட்சத்தில் இருந்து தொடங்கும். ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் டைகுன் எஸ்யூவி மற்றும் விர்ட்டஸ் மாடல்களை மேலே கொண்டு வருவதில் கவனம் செலுத்தும் 

மேலும் படிக்க: 3 முதல் 6 மாதங்களுக்கு ஒரு முறை புதிய காரை அறிமுகப்படுத்த திட்டமிடும் MG மோட்டார்; 2024 ஆம் ஆண்டில் 2 புதிய கார்கள் வெளியாகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

ஃபோக்ஸ்வேகன் இந்தியாவிற்கு வைத்துள்ள வேறு திட்டங்கள் என்ன ?

Volkswagen Taigun new GT Sport variants

சமீபத்தில் நடைபெற்ற வருடாந்திர பிராண்ட் மாநாட்டின் படி ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய இரண்டு புதிய GT வேரியன்ட்களை அறிமுகப்படுத்த ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கான தனது முதல் முழு ஐடி.4 மின்சார எஸ்யூவி முழு இறக்குமதியாக எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தும்.

இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஃபோக்ஸ்வேகன் கார்கள் 

Volkswagen Virtus

தற்போதைக்கு ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் மூன்று மாடல்களை மட்டுமே விற்பனை செய்கின்றது: விர்ட்டஸ் செடான் மற்றும் டைகுன் மற்றும் டிகுவான் எஸ்யூவி -கள். மூன்று மாடல்களின் விலையும் ரூ.11.56 லட்சம் முதல் ரூ.35.17 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) இருக்கின்றன. விர்ட்டஸ் ஆனது ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ஸ்லாவியா, ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சியாஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடுகின்றது. ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா ஆகியவற்றுடன் டைகுன் போட்டியிடும்.டிகுவான் ஆனது ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் டுக்ஸான் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க: ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Volkswagen விர்டஸ்

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience