பிப்ரவரி 2024 மாதம் அறிமுகமான புதிய கார்களின் விவரங்கள்: Tata Tiago மற்றும் Tigor CNG AMT Mahindra Thar எர்த் எடிஷன் Skoda Slavia ஸ்டைல் எடிஷன் மற்றும் பல கார்கள்
published on மார்ச் 04, 2024 07:02 pm by shreyash for டாடா டியாகோ
- 28 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவுக்கு வரவிருக்கும் பல கார்கள் உலகளவில் அறிமுகமாகியுள்ளன. சில கான்செப்ட் வடிவ கார்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
பிப்ரவரி 2024 மாதத்தில் இந்தியாவில் அல்லது உலகளவில் பல புதிய வெளியீடுகள் மற்றும் வெளியீடுகளைக் பார்க்க முடிந்தது. டாடாவின் முதல் CNG-ஆட்டோமெட்டிக் கார்கள் முதல் மஹிந்திரா மற்றும் ஸ்கோடாவின் புதிய ஸ்பெஷல் எடிஷன்கள் வரை. இதற்கிடையில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் புதிய தயாரிப்புகளை ரெனால்ட் மற்றும் ஸ்கோடா ஆகியவை உலகளவில் வெளியிட்டன. மேலும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 நிகழ்விலும் சில அறிமுகங்களை பார்க்க முடிந்தது.
வெளியீடுகள்
டாடா டியாகோ / டாடா NRG / டிகோர் CNG AMT
டாடா டியாகோ AMT CNG (NRG உட்பட) |
ரூ.7.90 லட்சம் முதல் ரூ.8.80 லட்சம் |
டாடா டிகோர் AMT CNG |
ரூ.8.85 லட்சம் முதல் ரூ.9.55 லட்சம் |
பிப்ரவரி 2024 -ல் டாடா டியாகோ மற்றும் டாடா டிகோர் வடிவில் இந்தியாவில் முதல் CNG ஆட்டோமெட்டிக் கார்கள் வெளியிடப்பட்டன. CNG AMT அறிமுகத்துடன் டாடா டியாகோ டியாகோ NRG மற்றும் டிகோர் ஆகியவற்றுடன் புதிய எக்ஸ்ட்டீரியர் கலர் ஸ்கீமையும் அறிமுகப்படுத்தியது.
டியாகோ NRG மற்றும் டிகோர் ஆகியவை 86 PS மற்றும் 113 Nm ஐ அவுட்புட்டை கொடுக்கும் 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் வருகின்றன. ஆனால் CNG மோடில் இந்த இன்ஜினின் அவுட்புட் 73.5 PS மற்றும் 95 Nm ஆக குறைக்கப்படுகிறது. இந்த கார்களின் CNG ஆட்டோமெட்டிக் வேரியன்ட் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் உடன் வழங்கப்படும். மேலும் 5-ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா தார் எர்த் எடிஷன்
விலை |
ரூ.15.40 லட்சம் முதல் ரூ.17.60 லட்சம் |
மஹிந்திரா நிறுவனம் அதன் ஆஃப்ரோடர் எஸ்யூவி தார் ஸ்பெஷல் எர்த் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. மஹிந்திரா தார் புதிய பதிப்பில் டெசர்ட் ப்யூரி (சாடின் மேட் ஃபினிஷ்) எக்ஸ்ட்டீரியர் ஷேடு உள்ளது. தார் எர்த் பதிப்பின் உட்புறம் ஹெட்ரெஸ்ட்களில் டூன் டிசைன் பேட்டர்ன் உடன் கூடிய பெய்ஜ் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி கொடுக்கப்பட்டுள்ளது. தார் எர்த் எடிஷனை பற்றிய கூடுதல் தகவலுக்கு லிங்கை கிளிக் செய்து பார்வையிடலாம்.
தார் எர்த் எடிஷன் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களின் 4-வீல் டிரைவ் (4WD) வேரியன்ட்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது.
மேலும் பார்க்க: CNG ஆட்டோமெட்டிக் ஆப்ஷன் பயன்பாட்டுக்கு வருவதற்கு இவ்வளவு காலம் ஆனது ஏன் ?
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N Z8 செலக்ட் வேரியன்ட்
விலை |
ரூ.16.99 லட்சம் முதல் ரூ.18.99 லட்சம் |
ஜனவரி 2024 மாதத்தில் சில அம்ச வசதிகளை சேர்த்த பிறகு மஹிந்திரா நிறுவனம் Scorpio N -ன் புதிய Z8 Select வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியது. மஹிந்திரா ஸ்கார்பியோ N -ன் இந்த சமீபத்திய வேரியன்ட் மிட்-ஸ்பெக் Z6 மற்றும் ஹையர்-ஸ்பெக் Z8 வேரியன்ட்களுக்கு இடையே உள்ள இடைவெளியை இது நிரப்பும். கூடுதலாக எஸ்யூவி இப்போது XUV700 -ன் மிட்நைட் பிளாக் எக்ஸ்ட்டீரியர் ஷேடையும் பெறுகிறது.
வசதிகளை பொறுத்தவரை ஸ்கார்பியோ N -ன் Z8 செலக்ட் வேரியன்ட்டில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, டிரைவருக்கான 7 இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, கனெக்டட் கார் டெக்னாலஜி, மற்றும் சன்ரூஃப் உடன் 8 இன்ச் டச் ஸ்கிரீனை பெறுகிறது. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவை உள்ளன.
Z8 Select வேரியன்ட் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் (203 PS / 380 Nm வரை) மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் (175 PS / 400 Nm) ஆகிய இரண்டு ஆப்ஷன்களையும் பெறுகிறது. இரண்டு யூனிட்களும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன. எஸ்யூவியின் Z8 செலக்ட் வேரியன்ட் உடன் 4WD கிடைக்கவில்லை.
மேலும் பார்க்க: 2024 மார்ச் மாதத்தில் வரவிருக்கும் கார்கள்: Hyundai Creta N Line Mahindra XUV300 Facelift மற்றும் BYD Seal
ஸ்கோடா ஸ்லாவியா ஸ்டைல் எடிஷன்
விலை |
ரூ.19.13 லட்சம் |
ஸ்கோடா ஸ்லாவியா ஸ்டைல் எடிஷன் என்று அழைக்கப்படும் மற்றொரு ஸ்பெஷல் எடிஷனை பெற்றது. ஸ்லாவியாவின் இந்தப் எடிஷன் டாப்-ஸ்பெக் ஸ்டைல் வேரியண்ட்டை அடிப்படையாகக் கொண்டது. இது 500 யூனிட்கள் மட்டுமே இது கிடைக்கும். பி-பில்லர்களில் ‘எடிஷன்’ பேட்ஜ் பிளாக்டு ORVMகள் மற்றும் பிளாக் ரூஃப் ஆகியவை உள்ளன. இது சில் பிளேட்டில் 'ஸ்லாவியா' சின்னத்தையும் ஸ்டீயரிங் வீலின் கீழ் பகுதியில் 'எடிஷன்' மோனிகரையும் பெறுகிறது.
ஸ்லாவியா ஸ்டைல் எடிஷன் டூயல் கேமரா டேஷ்கேம் மற்றும் படில் லேம்ப்களுடன் வருகிறது. ஸ்லாவியா ஸ்டைல் பதிப்பின் இன்ஸ்ட்ரூமென்ட் பட்டியலில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஸ்கோடா ஸ்லாவியாவின் ஸ்டைல் எடிஷனை 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வழங்குகிறது இது 150 PS மற்றும் 250 Nm 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
BMW 7 சீரிஸ் செக்யூரிட்டி
இது ஒரு வழக்கமான வெளியீடு அல்ல, ஆனால் இதை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். ஒன்று BMW 7 சீரிஸின் புதிய செக்யூரிட்டி பதிப்பாகும். இது 760i Protection xDrive VR9 என்று அழைக்கப்படுகிறது. BMW செடான் தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் விஐபி -க்கள் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள நபர்களுக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இது 4.4-லிட்டர் V8 பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது இது 530 PS மற்றும் 750 Nm அவுட்புட்டை உருவாக்குகிறது. மேலும் செடான் 0-100 கிமீ/மணி தூரத்தை வெறும் 6.6 வினாடிகளில் முடிக்க அனுமதிக்கிறது. 7 சீரிஸின் பிளாஸ்ட்-ப்ரூஃப் எடிஷன் பற்றி மேலும் அறிய இந்த இணைப்பைப் பார்வையிடவும்.
அறிமுகங்கள்
ஹூண்டாய் கிரெட்டா N லைன்
ஹூண்டாய் இறுதியாக அதன் காம்பாக்ட் எஸ்யூவியான கிரெட்டா N லைனின் ஸ்போர்டியர் எடிஷனை பற்றிய முழுமையான தோற்றத்தை வெளியிட்டது. ஹூண்டாய் கிரெட்டா N லைன் காரில் புதிய கிரில், புதுப்பிக்கப்பட்ட பம்ப்பர்கள், ரெட் கலர் ஹைலைட்ஸ், ரெட் கலர் பிரேக் காலிப்பர்களுடன் கூடிய புதிய 18-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் டூயல்-டிப் எக்ஸாஸ்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.
கிரெட்டா N லைன் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும் இது 160 பிஎஸ் மற்றும் 253 என்எம் டார்க். ஹூண்டாய் இந்த N லைன் எஸ்யூவி -யை 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் (DCT ஆட்டோமேட்டிக்) கூடுதலாக 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கும். கிரெட்டா N லைனுக்கான முன்பதிவுகளும் இப்போது திறக்கப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
ரெனால்ட் டஸ்டர்
ரெனால்ட் பேட்ஜிங் உடன் மூன்றாம் தலைமுறை டஸ்டர் எஸ்யூவி கடந்த மாதம் துருக்கியில் வெளியிடப்பட்டது. இந்த புதிய டஸ்டர் CMF-B தளத்தை அடிப்படையாகக் கொண்டது. உலகளவில் இது மைல்ட்-ஹைப்ரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் மற்றும் ஆல்-வீல் டிரைவ் (ஏடபிள்யூடி) டிரைவ் ட்ரெய்ன் ஆப்ஷனுடன் வழங்கப்படுகிறது.
டேசியா ஸ்பிரிங் இவி
ரெனால்ட் -ன் பட்ஜெட் சார்ந்த பிராண்டான டேசியா ஐரோப்பிய சந்தைகளுக்கு அதன் புதிய அனைத்து-எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் ஸ்பிரிங் EV -யை அறிமுகம் செய்துள்ளது. இது சில வடிவமைப்பு மாற்றங்களுடன் ஐரோப்பிய சந்தைகளுக்கான எலக்ட்ரிக் ரெனால்ட் க்விட் ஆகும். மேலும் இது அடுத்த ஆண்டு வரவிருக்கும் புதிய தலைமுறை ரெனால்ட் க்விட்க்கான வடிவமைப்புக்கான முன் வடிவமாகவும் செயல்படும்.
ஸ்பிரிங் EV பற்றிய கூடுதல் விவரங்களை காணலாம் இங்கே.
டாடா சஃபாரி ரெட் டார்க் எடிஷன்
டாடா சஃபாரி ரெட் டார்க் எடிஷன் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 -ல் மீண்டும் அறிமுகமானது. எஸ்யூவியின் ரெட் டார்க் எடிஷன் அதன் முன்-பேஸ்லிஃப்ட் பதிப்பில் கிடைத்தது. ஆனால் டாடா நவம்பர் 2023 மாதம் சஃபாரி ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தியபோது அதை விற்பனையில் இருந்து நிறுத்தியது. கிளிக் செய்வதன் மூலம் சஃபாரி ரெட் டார்க் பதிப்பின் கேலரியை இங்கே பார்க்கலாம்
டாடா எஸ்யூவி -யில் பல வடிவமைப்பு மாற்றங்களைச் செய்யவில்லை. உள்ளேயும் வெளியேயும் ரெட் ஹைலைட்டை தவிர. புதிய சஃபாரியின் வழக்கமான டாப்-ஸ்பெக் வேரியன்ட் போன்ற அதே வசதிகளை கொண்டுள்ளது.
டாடா நெக்ஸான் EV டார்க் எடிஷன்
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 இல் டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட்டின் டார்க் எடிஷனையும் டாடா காட்சிப்படுத்தியது. இது எல்லா இடங்களிலும் ஸ்டீல்த்தி பிளாக் ட்ரீட்மென்ட்டை பெறுகிறது. மேலும் இது எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் பெரிய பேட்டரி பேக் வேரியன்ட்களுடன் வழங்கப்படும்.
உங்களுக்கு கூடுதல் தகவல் தேவைப்படுகின்றது என்றால் இந்த இணைப்பைப் பார்வையிடவும்.
ஸ்கோடா ஆக்டேவியா ஃபேஸ்லிஃப்ட் வெளியிடப்பட்டது
சர்வதேச சந்தையில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஸ்கோடா ஆக்டேவியா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புடன் புதிய கேபின், பல புதிய வசதிகள் மற்றும் பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை வழங்குகிறது. செடான் முதலில் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். அதன் பின்னர் முன்பை விட சக்திவாய்ந்த vRS எடிஷன் மட்டுமே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
மேலும் படிக்க: டியாகோ AMT
0 out of 0 found this helpful