• English
  • Login / Register

Mahindra Thar Earth எடிஷன் வெளியிடப்பட்டது, விலை ரூ.15.40 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது

மஹிந்திரா தார் க்காக பிப்ரவரி 27, 2024 07:25 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 26 Views
  • ஒரு கருத்தை எழுதுக

தார் எர்த் எடிஷன் டாப்-ஸ்பெக் LX டிரிம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. விலை ரூ.40,000 வரை கூடுதலாக இருக்கும்.

Mahindra Thar Earth Edition launched

  • ஸ்பெஷல் எடிஷன் தார் பாலைவனத்தின் குன்றுகளைக் குறிக்கும் வேரியன்ட்யில் பெய்ஜ் நிற தீமை பெறுகிறது.

  • வெளிப்புறத்தில் ‘எர்த் எடிஷன்’ பேட்ஜ்கள் மற்றும் டூன்-இன்ஸ்பைர்டு டீக்கால்கள் உள்ளன.

  • பீஜ் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் ஹெட்ரெஸ்ட்களில் டூன் போன்ற எம்போஸிங்கை பெறுகிறது.

  • கேபினில் ஸ்டீயரிங் வீல் மற்றும் டோர் பேட்கள் உட்பட சில பெய்ஜ் கலர் ஆக்ஸன்ட்ஸ் உள்ளன.

  • பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் என இரண்டின் தேர்வையும் இது பெறுகிறது; 4WD உடன் மட்டுமே வருகிறது.

  • விலை ரூ.15.40 லட்சம் முதல் ரூ.17.60 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) இருக்கும்.

மஹிந்திரா தார் தார் பாலைவனத்தால் ஈர்க்கப்பட்ட 'எர்த் எடிஷன்' என்ற ஸ்பெஷல் எடிஷனை இப்போது பெற்றுள்ளது. இது பெட்ரோல் மற்றும் டீசல் பவர் ட்ரெயின்கள் இரண்டிலும் கிடைக்கிறது, இருப்பினும் LX ஹார்ட் டாப் வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கிறது.

வேரியன்ட் வாரியான விலைகள்

வேரியன்ட்

ஸ்டாண்டர்டு வேரியன்ட்

எர்த் எடிஷன்

வித்தியாசம்

LX ஹார்ட் டாப் பெட்ரோல் MT

ரூ.15 லட்சம்

ரூ.15.40 லட்சம்

ரூ.+40,000

LX ஹார்ட் டாப் பெட்ரோல் AT

ரூ.16.60 லட்சம்

ரூ.17 லட்சம்

ரூ.+40,000

LX ஹார்ட் டாப் டீசல் MT

ரூ.15.75 லட்சம்

ரூ.16.15 லட்சம்

ரூ.+40,000

LX ஹார்ட் டாப் டீசல் AT

ரூ.17.20 லட்சம்

ரூ.17.60 லட்சம்

ரூ.+40,000

மஹிந்திரா தார் ஸ்பெஷல் பதிப்பின் விலையை டாப்-ஸ்பெக் LX டிரிம் மீது சீரான விலை உயர்வாக ரூ 40,000 வரை பெறுகின்றது.

தார் எர்த் எடிஷன் விவரங்கள்

Mahindra Thar Earth Edition
Mahindra Thar Earth Edition badge

தார் எர்த் எடிஷன், 'டெசர்ட் ப்யூரி' எனப் பெயரிடப்பட்ட புதிய சாடின் மேட் பீஜ் நிற ஷேடு மற்றும் கதவுகளில் டூன்-இன்ஸ்பைர்டு டீக்கால்களை பெறுகிறது. புதிய சில்வர்-ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல்கள், ORVM -கள் மற்றும் கிரில் ஆகியவற்றில் பீஜ் ஷேட் இன்செர்ட்களையும் மஹிந்திரா வழங்கியுள்ளது. மற்றொரு தனித்துவமான அம்சம் B-பில்லர்களில் பிரத்தியேகமான 'எர்த் எடிஷன்' பேட்ஜிங் மற்றும் பிற பேட்ஜ்களுக்கு மேட்-பிளாக் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது.

Mahindra Thar Earth Edition leatherette upholstery

உட்புறத்தில், கான்ட்ராஸ்ட் பெய்ஜ் ஸ்டிச் கொண்ட டூயல்-டோன் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி என்பது குறிப்பிடத்தக்க வித்தியாசம் ஆகும். தார் எர்த் எடிஷன், ஏசி வென்ட் சுற்றுப்புறங்கள், சென்டர் கன்சோல் மற்றும் டோர் பேனல்கள் மற்றும் ஸ்டீயரிங் ஆகியவற்றில் பிளாக் கலர் ஹைலைட்ஸை பெறுகிறது. ஹெட் ரெஸ்ட்களில் குன்று போன்ற தோற்றத்தை காட்டு வகையில் எம்போஸிங் செய்யப்பட்டுள்ளது. தார் எர்த் எடிஷன்கள் ஒவ்வொன்றும் வரிசை எண் ‘1.’ உடன் தொடங்கும் தனித்துவமான எண்ணிடப்பட்ட டெக்கரேட்டிவ் VIN பிளேட்களுடன் வருகிறது.

மேலும் படிக்க: மஹிந்திரா தார் 5-டோர் 2024 -ல் பகுதியில் வெளியிடப்படும்

போர்டில் உள்ள உபகரணங்கள்

Mahindra Thar Earth Edition cabin

LX டிரிம் காரில் உள்ள அதே போன்ற வசதிகளையே பெற்றுள்ளது. மஹிந்திரா ஸ்பெஷல் பதிப்பில் அதே 7-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப், க்ரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி மற்றும் LX டிரிம் போன்ற உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான டிரைவர் இருக்கை ஆகியவற்றை வழங்குகிறது.

தார் எர்த் பதிப்பில் பாதுகாப்புக்காக டூயல் முன்பக்க ஏர்பேக்குகள், ISOFIX சைல்டு சீட் மவுண்ட்ஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை அடங்கும்.

பவர்டிரெயின்கள் விவரம்

மஹிந்திரா தார் ஸ்பெஷல் பதிப்பை பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் வழங்குகிறது. அவற்றின் தொழில்நுட்ப விவரங்கள் இங்கே:

விவரம்

2-லிட்டர் டர்போ-பெட்ரோல்

2.2 லிட்டர் டீசல்

பவர்

152 PS

132 PS

டார்க்

300 Nm

300 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

Mahindra Thar Earth Edition

தார் எர்த் எடிஷன் 4-வீல் டிரைவ் (4WD) பதிப்பில் மட்டுமே கிடைக்கிறது. மஹிந்திரா எஸ்யூவி -யின் வழக்கமான வேரியன்ட்களை ரியர் வீல் டிரைவ் (RWD) எடிஷன்டன் வழங்குகிறது. தார் RWD வேரியன்ட்களில் சிறிய 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் அதே 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கிடைக்கும்.

விலை மற்றும் போட்டியாளர்கள்

மஹிந்திரா தார் ரூ.11.25 லட்சம் முதல் ரூ.17.60 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கூர்க்கா ஃபோர்ஸ் மற்றும் மாருதி ஜிம்னி ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க: தார் ஆட்டோமெட்டிக்

was this article helpful ?

Write your Comment on Mahindra தார்

1 கருத்தை
1
R
rajesh kumar
Feb 27, 2024, 8:14:30 PM

My favourite Car

Read More...
    பதில்
    Write a Reply

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    • டாடா சீர்ரா
      டாடா சீர்ரா
      Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • நிசான் பாட்ரோல்
      நிசான் பாட்ரோல்
      Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
      அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • எம்ஜி majestor
      எம்ஜி majestor
      Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • டாடா பன்ச் 2025
      டாடா பன்ச் 2025
      Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • பிஒய்டி sealion 7
      பிஒய்டி sealion 7
      Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    ×
    We need your சிட்டி to customize your experience