2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ: Tata Nexon EV டார்க் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
published on பிப்ரவரி 01, 2024 08:00 pm by ansh for டாடா நெக்ஸன் இவி
- 51 Views
- ஒரு கருத்தை எழுதுக
சப்-4m எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் இந்த பதிப்பில் உள்ளேயும் வெளியேயும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, ஆனால் புதிதாக வசதிகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.
-
டார்க் எடிஷன் நெக்ஸான் இவி -யின் லாங் ரேஞ்ச் வேரியன்ட்களுடன் மட்டுமே கிடைக்கும்.
-
வெளிப்புறம் முழுவதும் பிளாக் கலர் ஃபினிஷ், பிளாக் அலாய் வீல்கள் மற்றும் "#டார்க்" பேட்ஜ் ஆகியவற்றைப் பெறுகிறது.
-
கேபின் பிளாக் லெதரெட் அப்ஹோல்ஸ்டரியுடன் ஆல் பிளாக் தீமிலும் வருகிறது.
-
ஃபுல்லி லோடட் வேரியன்ட்களின் அடிப்படையில் இது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் 2023 இல் வெளியானது, ஆனால் இதனுடன் ப்ரீ-பேஸ்லிஃப்ட் நெக்ஸான் EV மேக்ஸ் உடன் வழங்கப்பட்ட டார்க் எடிஷன் கொடுக்கப்படவில்லை. ஆனால் அந்த ஆப்ஷன் மீண்டும் டாடா Nexon EV Dark 2024 ஆக பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் அறிமுகமாகியுள்ளது. இது முழுவதும் ஸ்டீல்த்தி பிளாக் கலரை பெறுகிறது மற்றும் இது எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் பெரிய பேட்டரி பேக் வேரியன்ட்களுடன் வழங்கப்படும். இந்த ஸ்பெஷல் எடிஷன் காரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் இங்கே:
ஆல் பிளாக் எக்ஸ்ட்டீரியர்
நெக்ஸான் EV -யின் வடிவமைப்பில் மாற்றங்கள் எதுவும் இல்லை என்றாலும், டார்க் எடிஷனுக்கு இது ஆல் ஆல் பிளாக் ட்ரீட்மென்ட்டை பெறுகிறது. இது முற்றிலும் பிளாக் நிற எக்ஸ்ட்டீரியர் ஷேடு, பிளாக் கிரில், பிளாக் பம்பர் மற்றும் டார்க் டிண்டட் "டாடா" லோகோ ஆகியவற்றுடன் வருகின்றது.
இது 16-இன்ச் ஏரோடைனமிக் சக்கரங்கள், பிளாக் ரூஃப் ரெயில்ஸ் மற்றும் "# டார்க்" என்ற பேட்ஜ் முன் ஃபெண்டர்களில் கொடுக்கப்பட்டுள்ளது, பின்புறம் அதே பிளாக் ட்ரீட்மென்ட் மற்றும் பேட்ஜிங்கை பெறுகிறது.
இது தவிர, செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள LED ஹெட்லைட்கள், பானெட் முழுமைக்கும் உள்ள LED DRL, முன்பக்க பம்பரில் ஏரோடைனமிக் இன்செர்ட்கள் மற்றும் கனெக்டட் LED டெயில் லைட்கள் உட்பட மீதமுள்ள வடிவமைப்பு விஷயங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை. பிளாக்-அவுட் ஃபினிஷ் மற்றும் LED லைட்டிங் ஸ்ட்ரிப்களின் கலவையானது புதிய நெக்ஸான் EV டார்க் காருக்கு குறிப்பாக இரவில் சாலை -யில் சிறப்பான தோற்றத்தை வழங்குகிறது.
ஆல்-பிளாக் கேபின்
டாடா நெக்ஸான் EV -யின் டாப்-ஸ்பெக் வேரியன்ட் படம் எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. டார்க் எடிஷனில் இந்த கேபின் பிளாக் நிறத்தில் இருக்கும்.
உள்ளே இது மற்ற டாடா டார்க் எடிஷன் மாடல்களை போலவே இருக்கும், ஆல் பிளாக் கேபின் உட்பட. இது பிளாக் டாஷ்போர்டு, கிளாஸி பிளாக் சென்டர் கன்சோல் மற்றும் பிளாக் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஸ்டீயரிங் வீல், கியர் நாப் மற்றும் உள்ளே கதவு கைப்பிடிகளில் இதேபோன்ற பிளாக் நிறத்தை பார்க்க முடிகின்றது. இங்கே, "# டார்க்" முத்திரை ஹெட் ரெஸ்ட்களில் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய அம்சங்கள் இல்லை
இந்த ஸ்பெஷல் எடிஷன் ஏற்கனவே டாப் வேரியன்ட் நெக்ஸான் EV -க்கு எந்த புதிய அம்சங்களையும் கொண்டு வரவில்லை. இது 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, டச் பேனலுடன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், பின்புற ஏசி வென்ட்கள், சன்ரூஃப் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. கார் சார்ஜ் செய்யப்படும்போது டச் ஸ்கிரீனில் Arcade.ev மூலமாக பயணிகளை கேம்களை விளையாடலாம், திரைப்படங்களை பார்க்கலாம். இது வெஹிகிள் டூ வெஹிகிள் சார்ஜ் வசதியையும் கொண்டுள்ளது.
மேலும் படிக்க: பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 நிகழ்வில் Tata Nexon CNG கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது 6 ஏர்பேக்குகள், ABS உடன் EBD, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், ஹில் ஹோல்ட் மற்றும் டிசென்ட் கண்ட்ரோல், ஆட்டோ-டிம்மிங் IRVM மற்றும் ஒரு ப்ளைண்ட் வியூ மானிட்டர் கொண்ட 360 டிகிரி கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது.
பெரிய பேட்டரி பேக்
டாடா நெக்ஸான் EV -யின் டார்க் எடிஷன், பெரிய 40.5 kWh பேட்டரி பேக் வேரியன்ட்களுடன் மட்டுமே வழங்கப்படும். இந்த பேட்டரி பேக் 144 PS/ 214 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் 465 கிமீ ரேஞ்சை வழங்குகிறது.
மேலும் படிக்க: 2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ: Mercedes-Benz EQG கான்செப்ட் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது
வழக்கமான நெக்ஸான் EV ஆனது ஒரு சிறிய 30 kWh பேட்டரி பேக் ஆப்ஷனுடன் 129 PS/ 215 Nm அவுட்புட்டை தரும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 325 கிமீ ரேஞ்சை கொடுக்கும்.
விலை
டாடா நெக்ஸான் EV டார்க் எடிஷன் விலை ரூ.14.74 லட்சத்தில் இருந்து ரூ.19.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கலாம். இது வழக்கமான வேரியன்ட்களை விட சற்று கூடுதலான விலை ஆகும்.
மேலும் படிக்க: நெக்ஸான் EV ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful