பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 நிகழ்வில் Tata Nexon CNG கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
published on பிப்ரவரி 01, 2024 07:34 pm by rohit for டாடா நிக்சன்
- 47 Views
- ஒரு கருத்தை எழுதுக
நெக்ஸான் CNG ஆனது எஸ்யூவி -யின் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது, இதில் டாடா -வின் டூயல் சிலிண்டர் டெக்னாலஜி உள்ளது.
-
டாடாவின் CNG வரிசையில் இணையும் ஐந்தாவது கார் நெக்ஸான் ஆகும்.
-
டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜினுடன் ஆப்ஷனலான CNG கிட்டை பெறும் இந்தியாவின் முதல் கார் இதுவாகும்.
-
சுமார் 230 லிட்டர் லக்கேஜ் திறன் கொண்ட பூட் ஃப்ளோருக்கு கீழே தனித்தனியாக இரண்டு CNG சிலிண்டர்களை கொண்டுள்ளது.
-
கிளைம்டு மைலேஜ் புள்ளிவிவரங்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
-
2024 -ன் முதல் பாதியில் வெளியீடு இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது; விலை ரூ.9 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
டாடா பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 நிகழ்வில் ஒரு புதிய சீரிஸை கொண்டு வந்துள்ளது, மேலும் மிக முக்கியமான அறிமுகங்களில் ஒன்று நெக்ஸான் சிஎன்ஜி ஆகும். இந்த எரிபொருள் ஆப்ஷனை வழங்கும் முதல் சப்-4m எஸ்யூவி இதுவாக இருக்காது, ஆனால் டர்போ-சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜினுடன் வழங்குவது நாட்டிலேயே முதல் முறையாகும். டாடா டியாகோ மற்றும் டாடா பன்ச் போன்றவற்றில் காணப்படும் டூயல் சிலிண்டர் தொழில்நுட்பத்தையும் டாடா நெக்ஸான் CNG கொண்டுள்ளது.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
நெக்ஸான் CNG ஆனது எஸ்யூவி -யின் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் பொருத்தப்பட்டுள்ளது, இது வழக்கமாக 120 PS மற்றும் 170 Nm என மதிப்பிடப்படுகிறது, ஆனால் சிஎன்ஜியில் இயங்கும் என்பதால் மற்ற டாடா சிஎன்ஜி கார்களைப் போலவே குறைவான செயல்திறனை எதிர்பார்க்கலாம். நெக்ஸான் CNG காரும் சிஎன்ஜி மோடில் நேரடியாக ஸ்டார்ட் அமைப்பை கொண்டுள்ளது. நெக்ஸான் CNG -யின் மாற்றியமைக்கப்பட்ட அவுட்புட், மைலேஜ் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
பூட் ஸ்பேஸ் எவ்வளவு ?
டூயல் சிலிண்டர் டெக்னாலஜி கொடுக்கப்பட்டதால், நெக்ஸான் CNG சுமார் 230 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டது. எனவே எஸ்யூவி -யின் அடிப்பகுதியில் ஸ்பேர் வீல் உள்ளது.
மேலும் படிக்க: 2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ: Mercedes-Benz EQG கான்செப்ட் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது
வசதிகள் நிறைந்த CNG எஸ்யூவி
வழக்கமான நெக்ஸானை போலவே நெக்ஸான் CNG வசதிகள் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், மேலும் 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், சன்ரூஃப் மற்றும் டச் கன்ட்ரோல்களுடன் ஆட்டோ ஏசி ஆகியவற்றுடன் வரலாம். பாதுகாப்பைப் பொறுத்தவரை, நெக்ஸான் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் விலை
டாடா நெக்ஸான் CNG 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம், இதன் விலை ரூ. 9 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. மாருதி பிரெஸ்ஸா இதன் நேரடி போட்டியாளர்களாக இருக்கும். மேலும் கியா சோனெட்,ஹூண்டாய் வென்யூ, மற்றும் மாருதி ஃப்ரான்க்ஸ் சப்-4மீ கிராஸ்ஓவர் ஆகிய கார்களுக்கு கிரீனர் ஃபியூல் கொண்ட மாற்றாகவும் இருக்கும்.
மேலும் படிக்க: டாடா நெக்ஸான் AMT
0 out of 0 found this helpful