• English
    • Login / Register

    2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ: Mercedes-Benz EQG கான்செப்ட் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது

    ansh ஆல் பிப்ரவரி 01, 2024 07:13 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    36 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் ஜி-வேகன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது

    Mercedes-Benz EQG Concept At The 2024 Bharat Mobility Expo

    • இது ICE ஜி-வேஜன் போன்ற வடிவமைப்பைப் பெறுகிறது, ஆனால் EV -க்கான குறிப்பிட்ட எலமென்ட்களை பார்க்க முடிகின்றது.

    • ஆல் வொயிட் கேபினில் டூயல்-இன்டெகிரேட்டட் டிஸ்பிளேக்கள் போன்ற வசதிகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம், மற்ற கேபின் தீம்களும் வழங்கப்படும்.

    • ஒவ்வொரு வீலுக்கும் தனித்தனி மோட்டார் என 4-மோட்டார் செட்டப் உடன் வரும்.

    •  ஆரம்ப விலை 3.5 கோடி (எக்ஸ்-ஷோரூம்) -யில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் இது 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம்.

    2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் Mercedes-Benz EQG,  காட்சிப்படுத்தியுள்ளது அடிப்படையில் இது ஒரு எலக்ட்ரி ஜி-வேகன் கான்செப்ட் ஆகும். EQG கான்செப்ட் முதன்முதலில் 2021 ஆண்டில் உலகளவில் அறிமுகமானது இப்போது முதல் முறையாக இந்தியாவிற்கு வந்துள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ், EQG ஆனது, உற்பத்திக்கு தயாராக இருக்கும் நிலையில், அதன் உலகளாவிய அறிமுகத்திற்குப் பிறகு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. எலக்ட்ரிக் ஜி-வேகன் பற்றிய விவரங்கள் குறைவாகவே உள்ளன, இதுவரை நாம் அறிந்த விஷயங்கள் இங்கே.

    வடிவமைப்பு

    Mercedes-Benz EQG Concept Front

    EQG -ன் முக்கிய வடிவமைப்பு ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) G-கிளாஸ் -லிருந்து வேறுபட்டதல்ல. இது ஒரே மாதிரியான பாக்ஸி வடிவத்தை கொண்டுள்ளது, ஆனால் சுற்றிலும் EV-என்பதை எடுத்துக்காட்டும் வடிவமைப்பு எலமென்ட்களை பெறுகிறது. முன்னால், வட்ட வடிவ ஹெட்லைட்கள் இன்னும் உள்ளன, ஆனால் அவற்றுக்கிடையே, ரேடியேட்டர் ஆனது கிரில் மூடிய மற்றும் ஒளிரும் கிரில்லுக்காக அகற்றப்பட்டுள்ளது. இந்த கிரில் ஒரு ஒளிரும் மெர்சிடிஸ் பென்ஸ் லோகோவை கொண்டுள்ளது மற்றும் மற்ற எலக்ட்ரிக் மெர்சிடிஸ் மாடல்களை போலவே சதுர வடிவ பேட்டர்னை கொண்டுள்ளது.

    Mercedes-Benz EQG Concept Side

    இந்த EQG கான்செப்ட் மேபேக் போன்ற 22-இன்ச் அலாய் வீல்களை பெறுகிறது, இது தயாரிப்பு தயாராக இருக்கும் பதிப்பில் ஆப்ஷனலாக கொடுக்கப்படலாம். இங்கே, நீங்கள் எக்ஸ்ட்ரீயர் டோர் புரெடக்டரையும் காணலாம், இது LED லைட் ஸ்ட்ரிப்பாகவும் செயல்படுகிறது. கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், டூயல்-டோன் எக்ஸ்ட்டீரியர் ஃபினிஷ், காரின் கீழ் பாதி சில்வர் மற்றும் மேல் பாதி கருப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது.

    Mercedes-Benz EQG Concept Rear

    டெயில்கேட்டில் உள்ள வழக்கமான உதிரி சக்கரம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஸ்குவாரிஷ் கேஸால் மாற்றப்பட்டு, சுற்றிலும் எல்இடி லைட் ஸ்டிரிப் கொண்டுள்ள போதிலும், பின்புறம் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே உள்ளது. இதற்கிடையில், பம்பர் மற்றும் டெயில்லைட்கள் ICE மாடலைப் போலவே இருக்கும்.

    Mercedes-Benz EQG Concept At CES 2024

    மெர்சிடிஸ் சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் CES 2024 இல் உருமறைப்பு செய்யப்பட்டிருந்தாலும், தயாரிப்புக்கு நெருக்கமான பதிப்பைக் காட்சிப்படுத்தியது. டெயில்கேட்டில் பொருத்தப்பட்ட உதிரி சக்கரம் உட்பட அலாய் சக்கரங்களுக்கான மிகவும் யதார்த்தமான வடிவமைப்பை அது கொண்டிருந்தது.

    கேபின்

    Mercedes-Benz EQG Concept Cabin

    உள்ளே, EQG கான்செப்ட் முழு வொயிட் கேபினைப் பெறுகிறது, ஆனால் உற்பத்திக்கு தயாராக இருக்கும் பதிப்பில் அதிக வண்ணங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கேபினில் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன் மற்றும் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே ஆகியவற்றிற்கான டூயல்-ஒருங்கிணைந்த காட்சி அமைப்பைக் கொண்டுள்ளது. கேபின் ஜி-கிளாஸின் வலிமை மற்றும் மற்ற மெர்சிடிஸ் மாடல்களின் பிரீமியம் தோற்றத்தின் கலவையைக் கொண்டுள்ளது.

    மேலும் படிக்க: 2024 Mercedes-AMG GLE 53 Coupe அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் விலை ரூ 1.85 கோடி

    டாஷ்போர்டில் வொயிட் மற்றும் சில்வர் நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட முன் பயணிகளுக்கான கிராப் ஹேண்டில் உள்ளது, மேலும் இது மெர்சிடிஸின் பாரம்பரிய டர்பைன் வடிவ ஏசி வென்ட்களை பெறுகிறது. சென்டர் கன்சோல், கியர் செலக்டர், டோர் ஹேண்டில்கள் மற்றும் பவர்டு இருக்கைகளுக்கான கன்ட்ரோல்கள் உள்ளிட்ட கேபின் வடிவமைப்பு மற்ற மெர்சிடிஸ் மாடல்களை போலவே உள்ளன.

    பவர்டிரெய்ன்

    Mercedes-Benz EQG Concept

    மெர்சிடிஸ்-பென்ஸ் EQG இன்னும் தயாரிப்புக்கு முந்தைய நிலையில் இருப்பதால், விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. தற்போது தெரிய வந்த ஒரே விவரம் என்னவென்றால், இது 4-மோட்டார் செட்டப்பை பெறும், ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒரு மோட்டார் மற்றும் ஆஃப்-ரோடிங் கெபாசிட்டி -க்காக 2-ஸ்பீடு கியர்பாக்ஸ் கிடைக்கும். இந்த 4-மோட்டார் செட்டப், மெர்சிடிஸ் "ஜி-டர்ன்" என்ற கூல்டு பார்ட்டு ட்ரிக் -கை அனுமதிக்கிறது, ஒவ்வொரு சக்கரத்தையும் வெவ்வேறு திசைகளில் சுழற்றுவதன் மூலம் அதன் இடத்தில் இருந்தபடியே சுழல அனுமதிக்கிறது. மெர்சிடிஸ்-பென்ஸ் -ன் அறிக்கையின்படி, எலக்ட்ரிக் G-கிளாஸ் ஆனது ICE G-வேகன் போன்ற ஆஃப்-ரோடு திறன் கொண்டதாக இருக்கும், அதன் திறன்கள் வேறு சில பகுதிகளிலும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

    வெளியீடு

    Mercedes-Benz EQG Concept

    உற்பத்திக்கு தயாரான மெர்சிடிஸ்-பென்ஸ் EQG இந்த ஆண்டு உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும், மேலும் 2025 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் வரலாம். இங்குள்ள வழக்கமான ஜி-கிளாஸின் விலை ரூ.2.55 கோடி முதல் ரூ.4 கோடி வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது, எலக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகப்படுத்தப்படும் போது விலை ரூ. 3.5 கோடியிலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம்.

    was this article helpful ?

    Write your Comment on Mercedes-Benz ஜி கிளாஸ் எலக்ட்ரிக்

    மேலும் ஆராயுங்கள் on மெர்சிடீஸ் ஜி கிளாஸ் எலக்ட்ரிக்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    ரிமோட் ஏசி ஆன்/ஆஃப்

      டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

      • பிரபலமானவை
      • உபகமிங்
      ×
      We need your சிட்டி to customize your experience