Tata Nexon: 4 ஃபியூல் ஆப்ஷன்களுடன் இந்தியாவில் கிடைக்கும் ஒரே கார்
published on செப் 26, 2024 05:52 pm by dipan for டாடா நிக்சன்
- 39 Views
- ஒரு கருத்தை எழுதுக
நெக்ஸான் ஏற்கனவே பெட்ரோல், டீசல் மற்றும் EV பதிப்புகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் CNG பவர்டிரெயின் ஆப்ஷனையும் பெற்றது. ஆகவே சந்தையில் அனைத்து விதமான எரிபொருள் ஆப்ஷன்களிலும் கிடைக்கும் ஒரே ஒரு கார் ஆக உருவெடுத்துள்ளது.
டாடா நெக்ஸான் -ன் CNG வெர்ஷன் எஸ்யூவி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை ரூ 8.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா). இந்த அப்டேட் மூலம் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் ஆல் எலக்ட்ரிக் (EV) என 4 எரிபொருள் ஆப்ஷன்களுடன் வரும் இந்தியாவின் ஒரே காராக நெக்ஸான் ஆனது. அனைத்து பவர்டிரெய்ன் ஆப்ஷன்களின் விரிவான விவரங்களை இங்கே பார்ப்போம்:
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
நெக்ஸான் -ன் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) பதிப்பில் வழங்கப்படும் இன்ஜின் ஆப்ஷன்களின் விவரங்களை இங்கே பார்ப்போம்:
எரிபொருள் ஆப்ஷன்கள் |
டீசல் |
டர்போ-பெட்ரோல் |
சிஎன்ஜி |
இன்ஜின் |
1.5 லிட்டர் டீசல் |
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் |
1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்ஜின் |
பவர் |
115 PS |
120 PS |
100 PS |
டார்க் |
260 Nm |
170 Nm |
170 Nm |
டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள்* |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AMT |
5-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AMT, 7-ஸ்பீடு DCT |
6-ஸ்பீடு MT |
*MT = மேனுவல் டிரான்ஸ்மிஷன், AMT = ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன், DCT = டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், AT = டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்
இப்போது நெக்ஸான் EV -யின் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை பார்ப்போம்:
லாங் ரேஞ்ச் |
மீடியம் ரேஞ்ச் |
||
பேட்டரி பேக் |
30 kWh |
40.5 kWh |
45 kWh |
எலக்ட்ரிக் மோட்டார்களின் எண்ணிக்கை |
1 |
1 |
1 |
பவர் |
129 PS |
143 PS |
143 PS |
டார்க் |
215 Nm |
215 Nm |
215 Nm |
MIDC கிளைம்டு ரேஞ்ச் |
325 கி.மீ |
465 கி.மீ |
485 கி.மீ |
C75 ரேஞ்ச் |
210-230 கி.மீ |
290-310 கி.மீ |
330-375 கி.மீ |
டாடா நெக்ஸான் EV இரண்டு வேரியன்ட்கள் மற்றும் 3 பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது. டாடா மோட்டார்ஸின் C75 ரேஞ்ச் 75 சதவீத வாடிக்கையாளர்களுக்கு நிஜ உலக ரேஞ்சை கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 120 கிமீ / மணி வரை வேகம் மற்றும் 250 கிலோ வரை லோடிங் நிலைமைகளை கையாளக்கூடியது. உண்மையான நிலைமைகளை சிறப்பாக பிரதிபலிக்க ரேஞ்ச் வெவ்வேறு வெப்பநிலைகளின் கீழ் சோதிக்கப்படுகிறது.
மேலும் படிக்க: Tata Nexon CNG மற்றும் Maruti Brezza CNG: விவரங்கள் ஒப்பீடு
விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா நெக்ஸான் ICE விலை ரூ.8 லட்சம் முதல் ரூ.15.50 லட்சம் வரை இருக்கிறது. இது சப்காம்பாக்ட் எஸ்யூவி -களான ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், மஹிந்திரா XUV 3XO, நிஸான் மேக்னைட், மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற கார்களுக்கு போட்டியாக உள்ளது.
நெக்ஸான் CNG, மறுபுறம், 8.99 லட்சம் முதல் 14.59 லட்சம் வரை உள்ளது. இது மாருதி பிரெஸ்ஸா சிஎன்ஜி மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் சிஎன்ஜி ஆகிய கார்களுக்கு போட்டியாக உள்ளது.
டாடா நெக்ஸான் EV 12.49 லட்சம் முதல் 17.19 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்றும் சந்தையில் அதன் ஒரே நேரடி போட்டியாளராக மஹிந்திரா XUV400 EV உள்ளது. மேலும் இது டாடா கர்வ்வ் EV மற்றும் தி MG ZS EV ஆகிய கார்களுக்கு விலை குறைவான மாற்றாக இருக்கும்.
விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை
கிடைக்கக்கூடிய அனைத்து எரிபொருள் ஆப்ஷன்களுடன் அதிக கார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: டாடா நெக்ஸான் ஏஎம்டி
0 out of 0 found this helpful