Mahindra Scorpio N Z8 செலக்ட் வேரியன்ட் வெளியிடப்பட்டது… விலை ரூ 16.99 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றது
published on பிப்ரவரி 22, 2024 10:23 pm by rohit for mahindra scorpio n
- 36 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய Z8 செலக்ட் வேரியன்ட் மிட்-ஸ்பெக் Z6 மற்றும் ஹையர்-ஸ்பெக் Z8 டிரிம்களுக்கு இடையில் உள்ளது. மேலும் இது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.
-
புதிய Z8 செலக்ட் வேரியன்ட் ரூ.16.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
-
நெக்ஸ்ட்-லைன்-டிரிம் ஆன Z8 டிரிமை விட இது ரூ. 1.66 லட்சம் வரை குறைவானது.
-
மஹிந்திரா XUV700 -ன் மிட்நைட் பிளாக் ஷேடில் Z8 செலக்ட் வேரியன்ட்டை பிரத்தியேகமாக வழங்குகிறது.
-
இது Z8 டிரிம் போன்ற அதே LED லைட்டிங் மற்றும் பிளாக் மற்றும் பிரவுன் கேபினை பெறுகிறது.
-
சன்ரூஃப், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற Z8 -ன் காரில் உள்ள அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.
-
மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் 2-லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் பவர்டிரெய்ன்கள் என இரண்டையும் பெறுகிறது; இருப்பினும் 4WD ஆப்ஷன் இல்லை.
-
ஸ்கார்பியோ N -ன் விலை ரூ. 13.60 லட்சம் முதல் ரூ. 24.54 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சில வசதிகள் மாற்றியமைக்கப்பட்டதையடுத்து, மஹிந்திரா ஸ்கார்பியோ N மிட்-ஸ்பெக் Z6 மற்றும் ஹையர்-ஸ்பெக் Z8 டிரிம்களுக்கு இடையில் புதிதாக Z8 செலக்ட் வேரியன்ட்டை இப்போது பெற்றுள்ளது. இதன் விலை ரூ. 16.99 லட்சத்தில் இருந்து, ஸ்கார்பியோ N -ன் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது ஆனால் 4WD உடன் கிடைக்காது. எஸ்யூவி -யின் புதிய Z8 செலக்ட் வேரியன்ட் மார்ச் 1, 2024 முதல் கிடைக்கும் என்று மஹிந்திரா கூறுகிறது.
வேரியன்ட் வாரியான விலை
வேரியன்ட் |
Z8 செலக்ட் |
Z8 |
வித்தியாசம் |
பெட்ரோல் MT |
ரூ.16.99 லட்சம் |
ரூ.18.64 லட்சம் |
(ரூ 1.65 லட்சம்) |
பெட்ரோல் AT |
ரூ.18.49 லட்சம் |
ரூ.20.15 லட்சம் |
(ரூ 1.66 லட்சம்) |
டீசல் MT |
ரூ.17.99 லட்சம் |
ரூ.19.10 லட்சம் |
(ரூ 1.11 லட்சம்) |
டீசல் AT |
ரூ.18.99 லட்சம் |
ரூ.20.63 லட்சம் |
(ரூ 1.64 லட்சம்) |
ஸ்கார்பியோ N -ன் Z8 செலக்ட் வேரியன்ட், நெக்ஸ்ட்-இன்-லைன் Z8 டிரிமுடன் ஒப்பிடுகையில், விலை ரூ.1.66 லட்சம் வரை உள்ளது.
வடிவமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அப்டேட்கள்
நெக்ஸ்ட்-இன்-லைன் Z8 டிரிமிலிருந்து LED DRL -களுடன் டூயல்-பேரல் LED ஹெட்லைட்கள், 17-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் LED புரொஜெக்டர் ஃபாக் லேம்ப்கள் போன்றவற்றை இது பெற்றுள்ளது. XUV700 -யின் மிட்நைட் பிளாக் எக்ஸ்ட்டீரியர் ஷேடை, இப்போது இந்த காரில் கொடுக்கின்றது. இது இப்போதைக்கு புதிய Z8 செலக்ட் வேரியன்ட்டுக்கு மட்டுமே பிரத்தியேகமாக கிடைக்கும்.
கேபின் மற்றும் வசதிகளில் மாற்றமில்லை
இது வழக்கமான ஸ்கார்பியோ N Z8 -ன் கேபினை போலவே உள்ளது. Z8 செலக்ட் அதே பிளாக் மற்றும் பிரெளவுன் நிற கேபின் தீமுடன் லெதரெட் அப்ஹோல்ஸ்டரியுடன் வருகிறது. Z8 டிரிம் போலவே, Z8 செலக்ட் ஆனது 7 இருக்கைகள் கொண்ட அமைப்பில் மட்டுமே கிடைக்கிறது.
சலுகையில் உள்ள வசதிகளைப் பொறுத்தவரை, Z8 Select ஆனது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் 8 இன்ச் டச் ஸ்கிரீன், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, கனெக்டட் கார் டெக்னாலஜி மற்றும் சன்ரூஃப் ஆகியவற்றைப் பெறுகிறது. Z8 உடன் ஒப்பிடுகையில், Z8 செலக்ட் வேரியன்ட்டில் டூயல் ஜோன் ஏசி, புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் ஆட்டோ ஹெட்லைட்கள் ஆகியவை கொடுக்கப்படவில்லை.
Z8 செலக்ட் -ன் பாதுகாப்பு வசதிகள் பட்டியலில் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), 6 ஏர்பேக்ஸ் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
மேலும் படிக்க: Mahindra Scorpio N அடிப்படையிலான குளோபல் பிக் அப் காருக்கு Mahindra Scorpio X என்ற பெயர் கொடுக்கப்படலாம்
பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டும் ஆப்ஷன்களிலும் கிடைக்கும்
மஹிந்திரா Z8 செலக்ட் வேரியன்ட்களை பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் உடன் அந்தந்த மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் வழங்குகிறது. இந்த சமீபத்திய வேரியன்ட்டிற்கான தொழில்நுட்ப விவரங்கள் இங்கே:
விவரம் |
2-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
|
பவர் |
203 PS |
|
டார்க் |
370Nm/ 380 Nm |
|
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT/ 6-ஸ்பீடு AT |
மஹிந்திரா SUV ஐ 4-வீல் டிரைவ் டிரெய்னுடன் (4WD) டாப்-ஸ்பெக் Z8L டீசல் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களுடன் மட்டுமே வழங்குகிறது.
விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா ஸ்கார்பியோ N விலை ரூ.13.60 லட்சம் முதல் ரூ.24.54 லட்சம் வரை உள்ளது. இது டாடா ஹாரியர்/சஃபாரி போன்ற மோனோகோக் எஸ்யூவி -களுடன் போட்டியிடுகின்றது. மேலும் சில சிறிய எஸ்யூவி -களின் ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்களான ஹூண்டாய் கிரெட்டா கியா செல்டோஸ் ஆகியவற்றுடனும் போட்டியிடும். ஸ்கார்பியோ N என்பது கார் மஹிந்திராவின் வரிசையில் கம்ஃபோர்ட்-சார்ந்த மஹிந்திரா XUV700 -க்கு ஆஃப்-ரோடு-திறன் கொண்ட மாற்றாக இருக்கும்.
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (பான்-இந்தியா) -க்கான விலை ஆகும்
மேலும் படிக்க: ஸ்கார்பியோ N ஆட்டோமெட்டிக்