Mahindra Scorpio N அடிப்படையிலான குளோபல் பிக் அப் காருக்கு Mahindra Scorpio X என்ற பெயர் கொடுக்கப்படலாம்
published on பிப்ரவரி 22, 2024 05:33 pm by stuti for mahindra global pik up
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
குளோபல் பிக் அப் என்பது 2023 -ல் காட்சிக்கு வைக்கப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ N அடிப்படையிலான பிக்கப் டிரக் கான்செப்ட் ஆகும்.
-
மஹிந்திரா குளோபல் பிக் அப், மஹிந்திரா ஸ்கார்பியோ N போன்ற அதே வடிவமைப்பை பின்பற்றுகிறது, ஆனால் முரட்டுத்தனமான வடிவமைப்புடன் இருக்கின்றது.
-
பிக்-அப்பின் ப்ரொடக்ஷன்-ஸ்பெக் பதிப்பு, வடிவமைப்பின் அடிப்படையில் குறைக்கப்படும்.
-
ஸ்கார்பியோ N இன் 2.2-லிட்டர் டீசல் இன்ஜினின் அப்டேட்டட் எடிஷனை பயன்படுத்தலாம்
-
2026 -ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம்.
ஸ்கார்பியோ N- அடிப்படையிலான மஹிந்திரா குளோபல் பிக் அப் ஆகஸ்ட் 2023 -ல் தென்னாப்பிரிக்காவில் உலகளவில் அறிமுகமானது. பின்னர், நவம்பர் 2023 -ல், மஹிந்திராவும் ஸ்கார்பியோ N அடிப்படையிலான பிக்கப்பிற்கான வடிவமைப்பு காப்புரிமைக்கு விண்ணப்பித்தது. இப்போது, மஹிந்திரா ஒரு புதிய பெயரை இந்தியாவில் வர்த்தகத்திற்காக பதிவு செய்துள்ளது : ஸ்கார்பியோ X. எந்த மஹிந்திரா மாடல் இந்த பெயரை கொண்டிருக்கும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், மஹிந்திரா குளோபல் பிக் அப் இன் உற்பத்திக்கு தயாராக இருக்கும் பதிப்பாக இது இருக்கலாம் என்று தெரிய வருகின்றது.
ஸ்கார்பியோ X காரை தவிர, அதன் வர்த்தக பெயர் அங்கீகரிக்கப்பட்டதாகக் தெரிவித்துள்ளது, மஹிந்திரா அதே நேரத்தில் மேலும் பல பெயர்களின் வர்த்தக பெயர்களுக்கு விண்ணப்பித்திருந்தது, இதில் கீழே உள்ள பெயர்கள் இருக்கின்றன:
-
ஸ்கார்பியோ கே
-
ஸ்கார்பியோ எல்
-
ஸ்கார்பியோ எம்
-
ஸ்கார்பியோ இசட்
மஹிந்திரா இந்த பெயர் வர்த்தக பெயர்கள் அனைத்திற்கும் மே 2022 -ல் விண்ணப்பித்தது, ஆனால் அவை இன்னும் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன.
மேலும் பார்க்க: மஹிந்திரா Thar 3-door காரை விட கூடுதலாக இந்த 10 வசதிகளை Thar 5-door கொண்டிருக்கும்
மஹிந்திராவின் வரவிருக்கும் பிக்கப் டிரக்கை பற்றி இதுவரை நாம் அறிந்த விவரங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.
ஸ்கார்பியோ N காரில் இருந்து பெறப்பட்ட வடிவமைப்பு
மஹிந்திரா குளோபல் பிக் அப் கான்செப்ட், ஸ்கார்பியோ N போன்ற அதே வடிவமைப்பை பின்பற்றுகிறது, அதே மாதிரியான முன்பக்கத்துடன், ஹெட்லைட் வடிவமைப்பும் அதே போலவே உள்ளது. இருப்பினும், LED DRL -களின் வடிவமைப்பு மற்றும் முன்பக்க பம்பர் திருத்தப்பட்டுள்ளன. கூடுதலாக, டிரைவரின் பக்கவாட்டு ஏ-பில்லருடன் ஸ்நோர்கெல் பொருத்தப்பட்டுள்ளது. மஹிந்திராவால் தாக்கல் செய்யப்பட்ட வடிவமைப்பு காப்புரிமையில் கூட, குளோபல் பிக் அப் கருத்துருவின் அதே வடிவமைப்பை கொண்டுள்ளது தெரிய வருகின்றது, ஆனால் சந்தைக்கு தயாராக இருக்கும் பதிப்பு நிச்சயமாக சற்று முரட்டுத்தனம் குறைவாக இருக்கும். புதிய மஹிந்திரா பிக்கப் டிரக்கை பற்றி மேலும் அறிய நீங்கள் ஆர்வமாக இருந்தால், இந்த இணைப்பை நீங்கள் பார்வையிடலாம்.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
ஸ்கார்பியோ X ஆனது பயன்பாட்டுக்கு வரும் மஹிந்திரா பிக்கப் ஆக இருந்தால், அது ஸ்கார்பியோ N -ல் பயன்படுத்தப்படும் mHawk 2.2-லிட்டர் டீசல் இன்ஜினின் அப்டேட்டட் வெர்ஷனை பயன்படுத்தும். பிக்கப் டிரக்கிலும் ஃபோர் வீல் டிரைவ் (4WD) வழங்கப்படும். ஸ்கார்பியோ N -ன் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் 175 PS மற்றும் 400 Nm வரை அதன் ஹையர் ட்யூன் லெவல் அவுட்புட்டை கொடுக்கின்றது. 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா ஸ்கார்பியோ எக்ஸ் பற்றிய அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை என்றாலும், இந்த பிக்-அப் மாடல் 2026 ஆம் ஆண்டளவில் இந்தியாவிற்கு வரக்கூடும். மஹிந்திரா இதன் விலையை ரூ. 25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) முதல் நிர்ணயிக்கலாம். இந்தியாவில் இசுஸூ வி-கிராஸ் மற்றும் டொயோட்டா ஹைலக்ஸ் ஆகியவற்றுக்கு இது ஒரு மாற்றாக இருக்கும்
மேலும் படிக்க: மஹிந்திரா ஸ்கார்பியோ N ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful