மஹிந்திரா Thar 3-door காரை விட கூடுதலாக இந்த 10 வசதிகளை Thar 5-door கொண்டிருக்கும்
published on பிப்ரவரி 21, 2024 06:50 pm by rohit for மஹிந்திரா தார் ராக்ஸ்
- 18 Views
- ஒரு கருத்தை எழுது க
5-டோர் தார் கூடுதலாக பாதுகாப்பு, கம்ஃபோர்ட் மற்றும் சொகுசு ஆகியவற்றுக்கான வசதியை பெறலாம், இது பிரீமியம் லைஃப்ஸ்டைல் ஆஃப்ரோடராக இருக்கும்.
2024 ஆம் ஆண்டில் மிகப்பெரிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யூவி வெளியீடுகளில் ஒன்றாக 5-டோர் மஹிந்திரா தார் உள்ளது. 3-டோர் தார் போலவே இந்த காரும் ஆஃப்ரோடிங்கிற்கான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும். பல ஸ்பை ஷாட்கள் இது 3 டோர் தார் உடன் ஒப்பிடும் போது தினசரி பயணத்துக்கு ஏற்றதாகவும் ஆஃப்ரோடராக வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. 5-டோர் தார் அதன் 3-டோர் காரை விட பெறும் கூடுதலான வசதிகளின் பட்டியல் இங்கே:
சன்ரூஃப்
3-டோர் தாரில் இருந்திருக்கலாம் என அனைவரும் நினைக்கும் வசதிகளில் ஒன்று சன்ரூஃப் ஆகும், இதை மஹிந்திரா இறுதியாக இதில் மெட்டல் ஹார்ட் டாப்புடன் வழங்கவுள்ளது. அதாவது, 5-டோர் தார் ஒரு சிங்கி-பேன் சன்ரூஃப் மட்டுமே கிடைக்கும் மற்றும் முழுமையான பனோரமிக் யூனிட் அல்ல.
டூயல் ஜோன் ஏசி
மஹிந்திரா அதன் நவீன மற்றும் அதிக பிரீமியம் எஸ்யூவிகளான XUV700 மற்றும் ஸ்கார்பியோ N கார்களில் காணப்படுவது போல் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மஹிந்திரா 5-டோர் தாரை பின்புற ஏசி வென்ட்களுடன் கொடுக்கும், இது தற்போதுள்ள 3-டோர் மாடலில் இல்லை.
பின்புற டிஸ்க் பிரேக்குகள்
ஸ்பை ஷாட்கள் மூலமாக ஆஃப்ரோடரின் 3-டோர் வெர்ஷன் இந்த பாதுகாப்பு தொழில்நுட்பத்தைப் பெற முடியும் என்று நம்பப்பட்டாலும், இன்னும் சந்தைக்கு வரவில்லை. மஹிந்திரா இறுதியாக அந்த பின்புற டிஸ்க் பிரேக்குகளை 5-டோர் தார் காரில் கொடுப்பது போல் தெரிகிறது.
மேலும் பார்க்க: விளையாட்டு வீரர்கள் 14 பேருக்கு மஹிந்திரா எஸ்யூவி -களை அன்பளிப்பாக வழங்கிய ஆனந்த் மஹிந்திரா
பெரிய டச் ஸ்கிரீன்
தற்போதைய தார், 2020 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் 7 இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப்பை வழங்கியுள்ளது. இப்போது 5-டோர் தாரில் XUV400 EV -யில் உள்ளதைப் போன்ற வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ஷனை கொண்ட ஒரு பெரிய 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் கொடுக்கப்படலாம் .
டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்பிளே
5-டோர் தாரில் கிடைக்கும் மற்றொரு பிரீமியம் அம்சம் XUV400 EV -ன் ஸ்பை ஷாட்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட ஒரு வசதி டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே (10.25-இன்ச் யூனிட்) ஆகும். தற்போதைய தாரில், கலர் MID ஒரு அனலாக் அமைப்புடன் வருகிறது.
எலக்ட்ரிக்கலி ஆபரேட்டட் ஃபியூல் லிட் ஓபனர்
எரிபொருள் டேங்க் மூடியை திறப்பது என்பது தார் உரிமையாளர்கள் எதிர் கொள்ளும் ஒரு சிறிய சிரமங்களில் ஒன்றாக இருக்கின்றது. காரணம் இது சாவி -யின் மூலமாக கையை வைத்து திறக்கும் வகையில் உள்ளது. மஹிந்திராவும் இந்த சிக்கலை பற்றி அறிந்துள்ளதை போல தெரிகிறது, மேலும் நீண்ட வீல்பேஸ் எஸ்யூவியை எரிபொருள் டேங்க் மூடியை திறப்பதற்கான எலக்ட்ரிக் ரிலீஸ் உடன் கொடுக்கவுள்ளது. அதற்கான பட்டன் ஸ்டீயரிங் வீலின் வலது பக்கத்தில் அமைந்துள்ள கண்ட்ரோல் பேனலில் கொடுக்கப்பட்டுள்ளது.
முன்பக்க பார்க்கிங் சென்சார்கள் கொண்ட ரிவர்சிங் கேமரா
5-டோர் தார், ரிவர்சிங் கேமரா உட்பட பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கும். 3-டோர் தாரில் இல்லாத முன்பக்க பார்க்கிங் சென்சார்களையும் மஹிந்திரா வழங்கும்.
ரியர் சென்டர் ஆர்ம்ரெஸ்ட்
3-டோர் தார் காரை விட 5-டோர் மாடலில் வழங்கப்படும் பயனுள்ள வசதி பின்புற சென்டர் ஆர்ம்ரெஸ்ட் ஆகும். 3-டோர் தார் காரின் இரண்டாவது வரிசையில் இரண்டு கஸ்டமைஸ்டு சீட்கள் இருப்பதால், அது இருபுறத்தில் மட்டுமே ஆர்ம்ரெஸ்ட் சப்போர்ட் மட்டுமே கிடைத்தது. மையத்தில் ஒன்றைப் பொருத்த முடியவில்லை. இரண்டாவது வரிசைக்கு பெஞ்ச் இருக்கைகள் வழங்கப்படுவதால் 5-டோர் தாரில் இது சாத்தியமாகியுள்ளது.
6 ஏர்பேக்ஸ்
மஹிந்திரா வரவிருக்கும் நீண்ட வீல்பேஸ் தார் மீது 6 ஏர்பேக்குகளை அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் வரவிருக்கும் பாதுகாப்பு கிட் விதிமுறைக்கு ஏற்ப ஸ்டாண்டர்டாக வழங்குவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் என தெரிகின்றது. தற்போதைய மாடலில், இரண்டு முன் ஏர்பேக்குகள் மட்டுமே உள்ளன.
360 டிகிரி கேமரா
5-டோர் தார் 360 டிகிரி கேமராவுடன் வரலாம், இது குறுகலான பார்க்கிங் இடங்களில் காரை கையாளுவதை எளிதாகவும் வசதியாகவும் மாற்றும் மற்றும் ஆஃப்-ரோடு சவால்களை எதிர்கொள்ளும் போது பயனுள்ளதாக இருக்கும்.
5-டோர் பதிப்பில் எதிர்பார்க்கப்படும் 3-டோர் தாரில் தற்போது கிடைக்காத சில பிரீமியம் அம்சங்கள் இவை. நீளமான தார் மீது மஹிந்திரா வேறு என்ன வசதி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? கமெண்டில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
மேலும் படிக்க: மஹிந்திரா தார் ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful