விளையாட்டு வீரர்கள் 14 பேருக்கு மஹிந்திரா எஸ்யூவி -களை அன்பளிப்பாக வழங்கிய ஆனந்த் மஹிந்திரா
published on பிப்ரவரி 21, 2024 06:00 pm by shreyash for மஹிந்திரா தார்
- 14 Views
- ஒரு கருத்தை எழுதுக
விளையாட்டு வீரர்களின் பட்டியலில் மஹிந்திரா XUV700 -ன் கஸ்டமைஸ்டு வெர்ஷன்களை பெற்ற இரண்டு பாராலிம்பியன்களும் உள்ளனர்.
மஹிந்திரா மற்றும் மஹிந்திரா -வின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, உலகளாவிய போட்டிகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் படைத்தவர்களுக்கு அல்லது தேசத்திற்கு பங்களிப்பவர்களுக்கு எஸ்யூவிகளை பரிசாக கொடுத்து வருகிறார். இதில் விளையாட்டு வீரர்கள், ஒலிம்பியன்கள் மேலும் பல்வேறு இந்திய விளையாட்டு வீரர்கள் உள்ளனர். சமீபத்தில், ஆனந்த் மஹிந்திரா கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கானின் தந்தைக்கு மஹிந்திரா தார் ஒன்றை வழங்கினார். கடந்த சில ஆண்டுகளில் ஆனந்த் மஹிந்திராவிடம் இருந்து பரிசு பெற்ற விளையாட்டு வீரர்களின் பட்டியல் இங்கே.
நௌஷாத் கான் (சர்பராஸ் கானின் தந்தை) - மஹிந்திரா தார்
சர்ஃபராஸ் கான் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் அணியில் அறிமுகமானார், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு இன்னிங்ஸிலும் அரை சதம் அடித்தார். அவரது தந்தை நௌஷாத் கான், அவரது மகனின் சிறப்பான ஆட்டத்தை நேரில் காண வந்திருந்தார். நௌஷாத் கான் தொடர்ந்து சர்ஃபராஸ் கானுக்கு உத்வேகமளித்து வருகிறார். ஆகவே அவரை பெருமைப்படுத்தும் வகையில் , ஆனந்த் மஹிந்திரா சமீபத்தில் மஹிந்திரா தார் சர்பராஸ் கானின் தந்தைக்கு எஸ்யூவி -யை பரிசாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
நீரஜ் சோப்ரா - மஹிந்திரா XUV700
2021 -ம் ஆண்டில், டோக்கியோ ஒலிம்பிக்கில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்ததன் மூலம் இந்தியாவுக்காக தங்கப் பதக்கத்தை நீரஜ் சோப்ரா பெற்றார். அவருக்கு நன்றி மற்றும் மரியாதையை வெளிப்படுத்தும் வகையில், மஹிந்திராம் நிறுவனம் நீரஜ் சோப்ராவுக்கு சிறப்பாகத் கஸ்டமைஸ்டு ‘கோல்டு’ எடிஷனை பரிசளித்தது. மஹிந்திரா XUV700. இந்த ஸ்பெஷல் XUV மிட்நைட் புளூ நிறத்தில் சப்டில் கோல்டு கலர் ஆக்ஸன்ட் உடன் அவர் ஈட்டி எறிந்த தூரத்தை குறிக்கும் "87.58" என்ற பேட்ஜுடன் கொடுக்கப்பட்டது.
அவனி லேகாரா - மஹிந்திரா XUV700
பாராலிம்பிக் பதக்கம் வென்ற அவனி லெகாரா, மஹிந்திரா XUV700 -ன் பிரத்தியேகமாக கஸ்டமைஸ்டு ‘கோல்டு' பதிப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டார். டோக்கியோ 2020 பாராலிம்பிக் போட்டிகளில் அவர் நிகழ்த்திய சாதனைக்கு பிறகு இந்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது, அங்கு அவர் பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், 50 மீ ஏர் ரைபிள் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் அவர் வென்றார். இந்த கஸ்டமைஸ்டு XUV700 -யில் முன்னோக்கி, பின்னோக்கி நகரும் வகையிலான பவர்டு சீட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இதில் உள்ள சீட்டை வெளியில் இறக்கி தாழ்வாக இறக்கி கொள்ளலாம். இதன் மூலமாக இந்த காரில் பயணிப்பவர்கள் எளிதாக காருக்கு உள்ளே செல்லவும் கீழே இறங்கவும் உதவியாக இருக்கும்.
மேலும் பார்க்க: இந்தியாவில் மீண்டும் வரும் மிட்சுபிஷி நிறுவனம்… ஆனால் நீங்கள் நினைக்கும் விதத்தில் அல்ல
தீபா மாலிக் - மஹிந்திரா XUV700
மஹிந்திரா XUV700 -யின் சக்கர நாற்காலியில் அணுகக்கூடிய பதிப்பை உருவாக்குவதற்கு தீபா மாலிக்கின் பங்கு முக்கியமானதாக இருந்தது. எஸ்யூவி -யின் இந்த கஸ்டமைஸ்டு பதிப்பை அவனி லேகராவுக்கு வழங்கிய பிறகு, தீபா மாலிக், ஆனந்த் மஹிந்திராவிடமிருந்து பாராட்டுக்குரிய வகையில் மஹிந்திரா XUV700 காரை பெற்றார். இந்த எஸ்யூவி -யானது, அதன் பயன்பாட்டினை மேம்படுத்தும் வகையில் எளிதாக ஓட்டுவதற்கும், எலக்ட்ரிக்காக கன்ட்ரோல் செய்யும் வகையில் சுழலும் முன் இருக்கை மற்றும் பிற மேம்பாடுகள் உள்ளிட்ட மாற்றங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
பிவி சிந்து & சாக்ஷி மாலிக் - பழைய மஹிந்திரா தார்
2016 ரியோ ஒலிம்பிக்கில் சாக்ஷி மாலிக் மற்றும் பிவி சிந்து ஆகியோர் வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர். 58 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் பங்கேற்று ஒலிம்பிக் மல்யுத்தப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றை சாக்ஷி படைத்தார். பிவி சிந்துவும் இந்தியாவிற்கு பேட்மிண்டனில் ஒலிம்பிக் பதக்கத்தை கொண்டு வந்தார். அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கொண்டாடும் வகையில், இரு விளையாட்டு வீராங்கனைகளுக்கும் மஹிந்திரா தார் காரை வழங்கியது மஹிந்திரா.
டூட்டி சந்த் - மஹிந்திரா XUV5
ரியோ ஒலிம்பிக் 2016 ஆண்டில் பெண்களுக்கான 100 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் இடம் பிடித்த இந்திய வீராங்கனை டூட்டி சந்த், மஹிந்திரா XUV500 எஸ்யூவி -யை பரிசாகப் பெற்றார். XUV500 ஆனது XUV700 -க்கு முன்னோடியாக இருந்தது மற்றும் அந்த நேரத்தில் மஹிந்திராவின் மிகவும் பிரபலமான மாடல்களில் இது ஒன்றாக இருந்தது .
ஸ்ரீகாந்த் கிடாம்பி - மஹிந்திரா TUV300
2017 ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்ற பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு மஹிந்திரா TUV300 எஸ்யூவி பரிசாக வழங்கப்பட்டது. ஸ்ரீகாந்த் கிடாம்பி தனது சீன போட்டியாளரான சென் லாங்கை தோற்கடித்து சூப்பர் சீரிஸை வென்றார்.
ஆறு கிரிக்கெட் வீரர்களுக்கு மஹிந்திரா தார்
2021ல், இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காபா தொடரை வென்றது. இந்தத் தொடரின் போது அவர்களின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில், இந்திய அணிக்காக அறிமுகமான ஆறு கிரிக்கெட் வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசாக வழங்கப்பட்டது. முகமது சிராஜ், டி நடராஜன், ஷுப்மான் கில், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் அடங்குவர்.
மேலும் படிக்க: தார் ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful