Tata Safari காரின் ரெட் டார்க் எடிஷன் விவரங்களை 8 படங்களில் பார்க்கலாம்
published on பிப்ரவரி 02, 2024 07:55 pm by ansh for டாடா சாஃபாரி
- 55 Views
- ஒரு கருத்தை எழுதுக
சஃபாரியின் இந்த ஸ்பெஷல் எடிஷன் ஃபேஸ்லிஃப்ட்டுடன் திரும்பி வந்துள்ளது மற்றும் தோற்றத்தில் சிற மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் ஃபேஸ்லிஃப்ட் டாடா சஃபாரி ஸ்பெஷல் எடிஷன் 2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் ஷோ -வில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.டாடா ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் சஃபாரியுடன் வழங்கப்பட்ட அதன் மேம்படுத்தப்பட்ட ஃபிளாக்ஷிப் எஸ்யூவி -யின் ரெட் டார்க் எடிஷன் ட்ரீட்மென்ட்டை வழங்கியுள்ளது. புதிய சஃபாரி ரெட் டார்க்கின் வெளியீட்டு தேதி உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய காரின் விவரங்களை இந்த கேலரியில் பார்க்கலாம்.
முன்பக்கம்
முதலில் பார்க்கும் போது, ஏற்கனவே கிடைக்கும் சஃபாரி டார்க் எடிஷனுடன் நீங்கள் இதை குழப்பிக் கொள்ள வாய்ப்புள்ளது. ஏனெனில் இதுவும் ஆல் பிளாக் எக்ஸ்ட்டீரியர் உடன் உள்ளது, ஆனால் வித்தியாசம் மேலும் சில விஷயங்களில் உள்ளது.
முன்பக்கத்தில், ஹெட்லைட்களில் உள்ள எலமென்ட்களில் ரெட் கலர் இன்செர்ட்களையும், கிரில்லில் டாடா பேட்ஜிற்கான டார்க் குரோம் ஃபினிஷையும் நீங்கள் காணலாம்.
பக்கவாட்டு தோற்றம்
பக்கவாட்டில், ரெட் ஷேடில் முன் கதவுகளில் சஃபாரி லோகோவை பார்க்க முடியும். இந்த கிளாஸி பிளாக் கலர் பாடி, பில்லர் மற்றும் ரூஃபிலும் பயன்படுத்தப்படுகிறது. முன் ஃபெண்டரில் வைக்கப்பட்டுள்ள '# டார்க்' பேட்ஜில் கூட ரெட் கலரில் உள்ளது.
அலாய் வீல்களை பொறுத்தவரை, இது வழக்கமான சஃபாரி டார்க் போலவே 19-இன்ச் பிளாக்-அவுட்டை பெறுகின்றது, ஆனால் இந்த ஸ்பெஷல் எடிஷனில், பிரேக் காலிப்பர்கள் ரெட் கலரில் கொடுக்கப்பட்டுள்ளன.
பின்புறம்
இங்குள்ள ஒரே ரெட் எலமென்ட் டெயில்கேட்டில் ரெட் நிற ‘சஃபாரி’ பேட்ஜிங் மட்டுமே. இதற்கிடையில், சஃபாரியின் அனைத்து வண்ணங்களிலும் வழங்கப்படும் Z- வடிவ எலமென்ட்களால் கனெக்டட் LED டெயில்லேம்ப்கள் உண்மையில் இங்கே தனித்து தெரிகின்றன. பின்புற ஸ்கிட் பிளேட் கூட பிளாக் கலரில் இருக்கின்றது.
டாஷ்போர்டு
வழக்கமான டார்க் எடிஷனை போன்று பிளாக் நிறத்தில் டேஷ்போர்டு வந்தாலும், ரெட் நிற லைட்டிங் மற்றும் கிராப் ஹேண்டில்களில் காணப்படும் ரெட் கலர் போன்ற ரெட் நிற ஹைலைட் இதில் உள்ளன . சிறந்த வேரியன்ட்டின் அடிப்படையில், இந்த காட்சிக்கு வைக்கப்பட்ட மாடல் 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, டச்-பேஸ்டு ஏசி கன்ட்ரோல் பேனல் மற்றும் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றுடன் வருகிறது. இது மங்கலான ரெட் ஆம்பியன்ட் லைட்களுடன் கூடிய பனோரமிக் சன்ரூஃப் உள்ளது.
முன் இருக்கைகள்
டாடா சஃபாரி ரெட் டார்க் எடிஷனை ரெட் நிறமாக மாற்றுவது இங்கேதான். ஸ்பெஷல் எடிஷனை சஃபாரிக்கான முழு அப்ஹோல்ஸ்டரியும், ஃபேஸ்லிஃப்ட் முன் பதிப்பைப் போலவே ரெட் நிறத்தில் வருகிறது. இங்கே, ஹெட்ரெஸ்ட்களில் ‘#டார்க்’ முத்திரையை பார்க்கலாம்.
பின் இருக்கைகள்
முன்புறத்தை போலவே, பின்புறத்திலும் முற்றிலும் ரெட் கலர் சீட்கள் கொடுக்கப்பட்டுள்ளன, ஹெட்ரெஸ்ட்களில் '# டார்க்' மோனிகர் உள்ளது. கூடுதலாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இந்த ஸ்பெஷல் எடிஷன் சஃபாரியின் அக்கம்பிளிஸ்டு+ 6-சீட்டர் வேரியன்ட்களை அடிப்படையாகக் கொண்டது, எனவே நடுத்தர வரிசையில் கேப்டன் இருக்கைகளுடன் மட்டுமே அது கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது வரிசை இருக்கைகளை எங்களால் பார்க்க முடியவில்லை, ஆனால் அவை ரெட் கலரிலேயே இருக்கும்
மேலும் படிக்க: இந்த 5 படங்களில் ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக உள்ள டாடா கர்வ்வின் வெளிப்புற வடிவமைப்பை விரிவாக பாருங்கள்
டாடா சஃபாரி ரெட் டார்க் எடிஷன் வரும் மாதங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது ரூ.27.34 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் உள்ள டாப்-ஸ்பெக் சஃபாரி டார்க் வேரியன்ட்டை விட சற்று கூடுதலான விலையில் வரலாம். சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட மஹிந்திரா XUV700 -ன் நபோலி பிளாக் வழக்கமான டாடா சஃபாரி டார்க் காருக்கு போட்டியாக இருக்கும், ரெட் டார்க் எடிஷனுக்கு நேரடியான சமமான போட்டியாளர்கள் இல்லை.
மேலும் படிக்க: டாடா சஃபாரி டீசல்
0 out of 0 found this helpful