வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சில டாடா கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது
published on செப் 10, 2024 09:01 pm by dipan for டாடா டியாகோ
- 64 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த குறைக்கப்பட்ட விலை மற்றும் தள்ளுபடிகள் அக்டோபர் 2024 இறுதி வரை செல்லுபடியாகும்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு, டாடா மோட்டார்ஸின் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் (ICE) மாடல்களுக்கு கணிசமான விலைக் குறைப்புகளை வழங்குகிறது, மேலும் ரூ. 1.80 லட்சம் வரை விலைக் குறைப்புகளுடன், ரூ. 45,000 கூடுதல் தள்ளுபடியையும் வழங்கப்படுகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டாடா கர்வ், டாடா பஞ்ச், டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் மற்றும் டாடாவின் எலெக்ட்ரிக் கார்களுக்கு இந்த விலை குறைப்பு வழங்கப்படவில்லை என்றாலும், இந்த விலை குறைப்பு மூலம் டாடா கார்கள் மேலும் பட்ஜெட்டுக்கு ஏற்றதாக உள்ளது. சிறப்புச் சலுகைகள் அக்டோபர் 2024 இறுதி வரை செல்லுபடியாகும் என்று டாடா அறிவித்துள்ளது. டாடாவின் ICE கார்களுக்கான திருத்தப்பட்ட விலை பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
டாடா டியாகோ
டாடா டியாகோ, பிரபலமான என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக், XE, XM, XT(O), XT, XZ மற்றும் XZ+ போன்ற ஆறு முக்கிய வேரியன்ட்களுக்கு வழங்கப்படுகிறது. டாடா டியாகோவிற்க்கான புதுப்பிக்கப்பட்ட ஆரம்ப விலை பின்வருமாறு:
மாடல் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
டாடா டியாகோ XE |
ரூ. 5.65 லட்சம் |
ரூ. 5 லட்சம் |
(-ரூ. 65,000) |
டாடா டியாகோவின் பேஸ் மாடல் XE வேரியன்ட்டிற்கான ஆரம்ப விலை ரூ. 5.65 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் விலை ரூ. 65,000 குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைப்பு மற்ற வேரியன்ட்களின் விலையையும் பாதிக்கக்கூடும்.
டாடா டியாகோ ஆனது ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி கண்ட்ரோல் மற்றும் கூல்டு க்ளோவ்பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இது 86 PS மற்றும் 113 Nm டார்க்கை உருவாக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அல்லது 73.5 PS மற்றும் 95 Nm வழங்கும் CNG வேரியன்ட்டைக் கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பிற்காக, டியாகோவில் டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், EBD உடன் கூடிய ABS போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் குளோபல் NCAP கிராஷ் டெஸ்டில் 4-ஸ்டார் விபத்து பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது.
டாடா டிகோர்
டாடா டிகோர், சப் காம்பாக்ட் செடான், XE, XM, XZ மற்றும் XZ+ ஆகிய நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது. டாடா டிகோரின் புதுப்பிக்கப்பட்ட ஆரம்ப விலை பின்வருமாறு:
மாடல் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
டாடா டிகோர் XE |
ரூ. 6.30 லட்சம் |
ரூ. 6 லட்சம் |
(-ரூ. 30,000) |
அட்டவணையில் காட்டப்பட்டுள்ளபடி பேஸ்-ஸ்பெக் டாடா டிகோர் ரூ. 30,000 விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது. இந்த குறைப்பு மற்ற வேரியன்ட்களின் விலையையும் பாதிக்கக்கூடும்.
டாடா டிகோர், டியாகோவில் காணப்படும் பல அம்சங்களை பிரதிபலிக்கிறது, ஆனால் டியாகோவின் 242-லிட்டர் திறனுடன் ஒப்பிடும்போது, அதிக விசாலமான 419-லிட்டர் பூட் ஸ்பேஸ் மூலம் தன்னை வேறுபடுத்திக் காட்டுகிறது. கூடுதலாக, டியாகோ சாம்பல் நிற ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரியைக் கொண்டிருந்தாலும், டிகோர் வெள்ளை நிற லெதரெட் சீட்களுடன் வருகிறது. டாடாவின் தற்போதைய வரிசையில் டாடாவின் ஒரே செடான் காரின் அம்சங்கள் அல்லது பவர்டிரெய்ன்களில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை.
மேலும் படிக்க: பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் இந்திய ஹாக்கி நட்சத்திரம் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் ஆகியோரின் புதிய கார் குறித்த சுவாரசியமான செய்தி
டாடா ஆல்ட்ரோஸ்
டாடா அல்ட்ராஸ், ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் ஆகும், இது XE, XM, XM+, XT, XZ மற்றும் XZ+ போன்ற ஆறு முக்கிய வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது. டாடா அல்ட்ராஸின் பேஸ்-ஸ்பெக் மாடலின் திருத்தப்பட்ட ஆரம்ப விலை பின்வருமாறு:
மாடல் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
டாடா ஆல்ட்ரோஸ் XE |
ரூ. 6.65 லட்சம் |
ரூ. 6.50 லட்சம் |
(-ரூ 15,000) |
டாடா அல்ட்ராஸ் இப்போது பேஸ்-ஸ்பெக் ரூ.15,000 தள்ளுபடியுடனும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்களுக்கு ரூ. 45,000 வரை தள்ளுபடியுடன் கிடைக்கிறது.
டாடா அல்ட்ராஸ் 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் சிங்கள்-பேன் சன்ரூஃப் உள்ளிட்ட சிறப்பு அம்சத் தொகுப்பைக் கொண்டுள்ளது. இன்ஜின் தேர்வுகளில் 88 PS 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல், 110 PS 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 90 PS 1.5 லிட்டர் டீசல் ஆகியவற்றை வழங்குகிறது. 73.5 PS மற்றும் 103 Nm வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் ஒரு CNG வேரியன்ட் உள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்காக, அல்ட்ராஸ் ஆனது ஆறு ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, ISOFIX ஆங்கர்கள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் (DCT உடன் கிடைக்கும்) மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் போன்ற சிறப்பம்சங்களுடன் வருகிறது.
டாடா ஹாரியர்
டாடா ஹாரியர், ஸ்மார்ட், ப்யூர், அட்வென்ச்சர் மற்றும் ஃபியர்லெஸ் போன்ற நான்கு முக்கிய வேரியன்ட்களில் வருகிறது. டாடா ஹாரியரின் புதுப்பிக்கப்பட்ட ஆரம்ப விலை பின்வருமாறு:
மாடல் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
டாடா ஹாரியர் ஸ்மார்ட் |
ரூ. 14.99 லட்சம் |
ரூ. 14.99 லட்சம் |
வித்தியாசம் எதுவும் இல்லை |
பேஸ்-ஸ்பெக் டாடா ஹாரியர் அதன் தற்போதைய விலையை பராமரிக்கும் அதே வேளையில், மற்ற வேரியன்ட்களுக்கு ரூ. 1.60 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும், இது குறிப்பிடத்தக்க சேமிப்பை வழங்குகிறது.
டாடா ஹாரியரில் 12.3 இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் 10.25 இன்ச் முழு டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இதில் 170 PS/350 Nm 2.0-லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுக்கான ஆப்ஷன்களை வழங்குகிறது. பயணிகளின் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை ஹாரியரில் ஏழு ஏர்பேக்குகள் (ஆறு ஏர்பேக்குகள் நிலையாக வழங்கப்படுகிறது), 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் உட்பட அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்றவை இதில் அடங்கும்.
மேலும் படிக்க: Harrier மற்றும் Safari கார்களுக்காக குளோபல் NCAP சேஃபர் சாய்ஸ் விருதை வென்றது டாடா நிறுவனம்
டாடா சஃபாரி
டாடா ஹாரியரில் இருந்து பெறப்பட்ட மூன்று வரிசை எஸ்யூவி-யான டாடா சஃபாரி, ஸ்மார்ட், ப்யூர், அட்வென்ச்சர் மற்றும் அகாம்ப்லிஷ்ட் போன்ற நான்கு முக்கிய வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது. டாடா சஃபாரிக்கான புதுப்பிக்கப்பட்ட ஆரம்ப விலை பின்வருமாறு:
மாடல் |
புதிய விலை |
பழைய விலை |
வித்தியாசம் |
டாடா சஃபாரி ஸ்மார்ட் |
ரூ. 15.49 லட்சம் |
ரூ. 15.49 லட்சம் |
வித்தியாசம் எதுவும் இல்லை |
பேஸ்-ஸ்பெக் டாடா சஃபாரி அதன் முந்தைய விலையை பராமரிக்கும் அதே வேளையில், மற்ற வேரியன்ட்களில் இப்போது ரூ. 1.80 லட்சம் வரை தள்ளுபடிகள் கிடைக்கும்.
டாடா சஃபாரி, டாடா ஹாரியரைப் போன்ற அதே அம்சத் தொகுப்பை வழங்குகிறது, சைகை-இயக்கப்பட்ட ஆற்றல் கொண்ட டெயில்கேட், காற்றோட்டமான முன் மற்றும் இரண்டாவது வரிசை சீட்கள் (6-சீட்டர் வேரியண்டில்), பாஸ் மோட் மற்றும் 4-வே பவர்டு கோ-டிரைவரின் சீட் போன்ற கூடுதல் தனித்துவமான வசதிகளுடன் வருகிறது.
விலை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை, பான்-இந்தியா
போட்டியாளர்கள்
டாடா டியாகோ மாருதி செலிரியோ, மாருதி வேகன் R மற்றும் சிட்ரோன் C3 ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. மறுபுறம், டாடா டிகோர், மாருதி டிசையர், ஹூண்டாய் ஆரா மற்றும் ஹோண்டா அமேஸ் ஆகியவற்றுக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பிரீமியம் ஹேட்ச்பேக்குகளை விரும்புவோருக்கு, டாடா அல்ட்ராஸ், ஹூண்டாய் i20, மாருதி பலேனோ மற்றும் டொயோட்டா கிளான்சா ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.
மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் டாடா ஹாரியர் மஹிந்திரா XUV700, MG ஹெக்டர், ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகியவற்றின் உயர் டிரிம்களுடன் போட்டியை எதிர்கொள்கிறது. இதற்கிடையில், டாடா சஃபாரி, MG ஹெக்டர் பிளஸ், ஹூண்டாய் அல்கஸார் மற்றும் மஹிந்திரா XUV700 ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: டியாகோ AMT