Harrier மற்றும் Safari கார்களுக்காக குளோபல் NCAP சேஃபர் சாய்ஸ் விருதை வென்றது டாடா நிறுவனம்
published on செப் 06, 2024 02:10 pm by shreyash for டாடா ஹெரியர்
- 64 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய இரண்டு கார்களும் முழுமையான 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், குளோபல் NCAP அமைப்பால் இன்றுவரை சோதனை செய்யப்பட்ட இந்திய எஸ்யூவி-களில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற கார்கள் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
-
இரண்டு எஸ்யூவி-களும் ஆட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் (AEB), ஸ்பீட் அசிஸ்டன்ஸ் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் (BSD) சிஸ்டம்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்தன.
-
இந்த இரண்டு கார்களும் பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்காக 33.05/34 மதிப்பெண்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பிற்கு 45/49 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.
-
இரண்டு எஸ்யூவி-களிலும் பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள்), 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்.
இந்தியாவின் வெகுஜன சந்தைப் பிரிவில் டாடா மோட்டார்ஸ் பாதுகாப்பில் முன்னணியில் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. உண்மையில், டியாகோ மற்றும் டிகோர் தவிர, டாடாவின் வரிசையில் தற்போது ஒவ்வொரு மாடலும் பாதுகாப்பிற்க்காக குளோபல் NCAP-இலிருந்து 5-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. அக்டோபர் 2023-இல் சோதனை செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகியவற்றிற்கான குளோபல் NCAP சேஃபர் சாய்ஸ் விருதை இந்நிறுவனம் இப்போது பெற்றுள்ளது.
ஒரு விரைவான பார்வை
இரண்டு டாடா எஸ்யூவி-களும் பெரியவர்களுக்கான மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக முழு 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது மட்டுமல்லாமல், அவற்றின் செயல்திறனுக்காக குளோபல் NCAP-இலிருந்து அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.
அடல்ட் ஆக்குப்பன்ட் புரொடக்ஷ்ன் (AOP) ஸ்கோர் |
33.05/34 33.05/34 |
சைல்ட் ஆக்குப்பன்ட் புரொடக்ஷ்ன் (COP) ஸ்கோர் |
45/49 45/49 |
இரண்டு எஸ்யூவி-களின் பாடிஷெல் மற்றும் ஃபுட்வெல் பகுதி 'நிலையானது' மற்றும் கூடுதல் சுமைகளைத் தாங்கும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, ஹாரியர் மற்றும் சஃபாரி பற்றிய எங்கள் முழுமையான கிராஷ் டெஸ்ட் அறிக்கையை நீங்கள் படிக்கலாம்.
கிடைக்கக்கூடிய பாதுகாப்பு வசதிகள்
ஹாரியர் மற்றும் சஃபாரியில் பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள்), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), பிளைண்ட் வியூ மானிட்டரிங் உடன் கூடிய 360 டிகிரி கேமரா மற்றும் ISOFIX சைல்ட் சீட் மௌன்ட் ஆகியவை அடங்கும். இந்த எஸ்யூவி-களின் டாப் ஸ்பெக் வேரியன்ட்கள், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற லெவல் 2 அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற பலவித வசதிகளுடன் வருகின்றன.
மேலும் பார்க்க: Tata Curvv: எஸ்யூவி-கூபே உடன் வழங்கப்படும் வெவ்வேறு உட்புற கலர் ஆப்ஷன்களைப் பாருங்கள்
குளோபல் NCAP சேஃபர் சாய்ஸ் விருதைப் பற்றிய கூடுதல் தகவல்
குளோபல் NCAP சேஃபர் சாய்ஸ் விருது 2018 ஆம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விருது அதிக அளவிலான பாதுகாப்பு செயல்திறனை அடையும் கார் தயாரிப்பாளர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது. இந்த நிகழ்வில், சஃபாரி மற்றும் ஹாரியர் ஆகியவை கிராஷ் டெஸ்ட்களில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றது மட்டுமல்லாமல், ஆட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் (AEB), ஸ்பீட் அசிஸ்டன்ஸ் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் (BSD) சிஸ்டம்களுக்கான செயல்திறன் மற்றும் தொகுதி அளவுகோல்களையும் பூர்த்தி செய்தன.
இந்த விருதுக்குத் தகுதிபெற, கார் பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகளின் பட்டியல் இதோ:
-
பெரியவர்களுக்கான மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனைகளிலும் 5 நட்சத்திரங்களைப் பெறவேண்டியது கட்டாயம்.
-
குளோபல் NCAP-இன் சோதனை அளவுகோலில் முழு மதிப்பெண்ணைப் பெற ஒரு காரில் ஸ்பீட் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் இருக்க வேண்டும்.
-
ஆட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் (AEB) UN ஒழுங்குமுறை செயல்திறன் தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
-
பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் (BSD) ஒரு தனித்த ஆப்ஷனாக இருக்க வேண்டும் மற்றும் குளோபல் NCAP-இன் செயல்திறன் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
டாடாவிடமிருந்து எதிர்காலத்தில் வரவிருக்கும் 5-நட்சத்திர மதிப்பீடு பெற்ற கார்கள்
அதன் வலுவான பாதுகாப்பு சாதனையை உருவாக்கி, வரும் ஆண்டுகளில் டாடாவிடமிருந்து 5-நட்சத்திர தரமதிப்பீடு பெற்ற கார்களை நாம் பார்க்கலாம். டாடா கர்வ் ICE (இன்டர்னல் கம்பஸ்டியன் இன்ஜின்) மற்றும் டாடா கர்வ் EV ஆகியவை குளோபல் NCAP அல்லது பாரத் NCAP மூலம் க்ராஷ் டெஸ்ட்டுகளை இன்னும் மேற்கொள்ளவில்லை என்றாலும், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் டாடாவின் அதிக கவனம் செலுத்துவதன் காரணமாக இந்த மாடல்களும் அதிக மதிப்பீடுகளை பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளைப் பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: ஹாரியர் டீசல்