• English
    • Login / Register

    2025 ஆண்டில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் டாடா கார்கள்

    டாடா சீர்ரா இவி க்காக டிசம்பர் 27, 2024 10:30 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 123 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    2025 ஆம் ஆண்டில் டாடா -வின் பிரபலமான ICE கார்களின் இவி வெர்ஷன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இவற்றோடு சேர்த்து பிரபலமான எஸ்யூவி ஒன்றும் சந்தைக்கு திரும்பி வரவுள்ளது.

    Upcoming Tata Cars in 2025

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டை அதிரடியாக எதிர் கொள்ளத் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு ஏழெட்டு மாடல்கள் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கார்களான டாடா சியரா மற்றும் டாடா ஹாரியர் EV ஆகியவையும் அடங்கும். இந்த வரிசையில் சமீபத்தில் சோதனை செய்யப்படும் போது படம்பிடிக்கப்பட்ட மாடல்கள் மற்றும் மற்றவை முந்தைய கான்செட் கார்களும் அடங்கும். 2025 ஆம் ஆண்டில் டாடா அறிமுகப்படுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கும் கார்களின் விவரங்கள் இங்கே. 

    டாடா சியரா (ICE + EV)

    Tata Sierra EV

    எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஜனவரி 17, 2025

    எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.11 லட்சம் (ICE) மற்றும் ரூ.20 லட்சம் (EV)

    முதலில் ஆட்டோ எக்ஸ்போ 2020 ஆண்டில் ஒரு கான்செப்ட் ஆக வெளியிடப்பட்ட டாடா சியரா கார் ஆனது பின்னர் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் மிகவும் மேம்பட்ட பதிப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2025 ஜனவரியில் நடைபெறவுள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் உற்பத்திக்குத் தயாராக உள்ள ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) மற்றும் EV (எலக்ட்ரிக் கார்) ஆகிய இரண்டு பதிப்புகளிலும் சியராவை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது. 

    EV பதிப்பில் 60-80 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இது 500 கி.மீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்சை  வழங்கலாம். இந்த காரின் வேரியன்ட்கள் முழுவதும் வேறுபட்ட பவர் அவுட்புட்களுடன் ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டாரை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

    ICE பதிப்பிற்கு சியரா ஒரு புதிய 1.5-லிட்டர் 4-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்தலாம். இது 170 PS மற்றும் 280 Nm பவர் அவுட்புட்களுடன் இருக்கலாம். இந்த இன்ஜின் முதன் முதலில் ஆட்டோ எக்ஸ்போ 2023 ஆண்டில் காட்சிப்படுத்தப்பட்டது. ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவி -களில் உள்ள 2-லிட்டர் டீசல் இன்ஜினையும் டாடா இதில் கொடுக்கலாம்.

    டாடா ஹாரியர் EV

    Tata Harrier EV Front

    எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஜனவரி 17, 2025

    எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 25 லட்சம்

    சமீபத்தில் டாடா அதன் நிதிக்குழு கூட்டத்தின் போது ​​2024-2025 நிதியாண்டின் இறுதியில், மார்ச் 2025க்குள் ஹாரியர் EV அறிமுகப்படுத்தப்படும் என்பதை டாடா மோட்டார்ஸ் உறுதிப்படுத்தியது. உற்பத்திக்கு தயாராகவுள்ள ஹாரியர் இவி -யையும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது.

    ஹாரியர் EV ஆனது ஆல்-வீல் டிரைவ் (AWD) ஆப்ஷன் உடன் டூயல்-மோட்டார் செட்டப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதன் என்ட்ரி-லெவல் வேரியன்ட்கள் ஒரே ஒரு மோட்டார் செட்டப்பை கொண்டிருக்கலாம். அதன் பேட்டரி பேக் பற்றிய விவரங்கள் குறைவாக இருந்தாலும் ஹாரியர் EV ஆனது கர்வ்வ் EV மற்றும் நெக்ஸான் EV ஆகியவற்றை விட பெரிய பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ரேஞ்ச் ஆனது 550 கி.மீ வரை இருக்கலாம்.

    டாடா சஃபாரி EV

    Tata Safari EV

    எதிர்பார்க்கப்படும் வெளியீடு: பிப்ரவரி 2025

    எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.32 லட்சம்

    வரவிருக்கும் ஹாரியர் EV -ன் பெரிய உடன்பிறப்பான சஃபாரி EV -யும் 2025 ஆண்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹாரியர் EV போலவே, சஃபாரி EV -யும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்படலாம். இது ஹாரியர் போன்ற அதே பேட்டரி பேக்கை கொண்டிருக்கும். EV ஆனது 500 கி.மீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கலாம்.

    டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட்

    Tata Punch EV

    எதிர்பார்க்கப்படும் வெளியீடு: செப்டம்பர் 2025

    எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 6 லட்சம்

    ஃபேஸ்லிஃப்ட் டாடா பன்ச் கார் அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம். அதற்கு முன்னோட்டமாக காரின் ஸ்பை ஷாட்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பன்ச் ஆனது பன்ச் EV -லிருந்து வடிவமைப்புக்கான விஷயங்களை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உள்ளேயும் வெளியேயும் புத்துணர்ச்சியூட்டும் தோற்றத்தைக் கொண்டுள்ளது. புதிய வடிவிலான முன்பக்கம், புதுப்பிக்கப்பட்ட கேபின் மற்றும் சில புதிய வசதிகள் சேர்க்கப்படலாம். இருப்பினும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT (ஆட்டோமெட்டிக் மேனுவல்) டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 88 PS மற்றும் 115 Nm அவுட்புட்டை கொடுக்கும் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினை அப்படியே தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.

    டாடா ஹாரியர் பெட்ரோல்

    Tata Harrier

    எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஜூன் 2025

    எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 14 லட்சம்

    ஆட்டோ எக்ஸ்போ 2023 -ல் காட்சிப்படுத்தப்பட்ட 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் டாடா ஹாரியர் அறிமுகமாகலாம். டாடா சியராவுடன் இன்ஜின் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்த நடுத்தர அளவிலான எஸ்யூவி அப்டேட்டை பெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். புதிய இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (டிசிடி) தேர்வுடன் வழங்கப்படலாம். இந்த பெட்ரோல் ஆப்ஷன் ஹாரியரின் ஆரம்ப விலையைக் குறைக்க இது உதவும். இது தற்போதைய-ஸ்பெக் என்ட்ரி-லெவல் வேரியன்ட்டை விட மிகவும் விலை குறைவாக இருக்கும்.

    டாடா டியாகோ மற்றும் டிகோர் ஃபேஸ்லிஃப்ட்ஸ்

    Tata Tiago

    எதிர்பார்க்கப்படும் வெளியீடு: டிசம்பர் 2025

    எதிர்பார்க்கப்படும் விலை: ரூ 5.2 லட்சம் (டியாகோ) மற்றும் ரூ 6.2 லட்சம் (டிகோர்)

    சமீபத்தில் டாடா டியாகோ மற்றும் டிகோர் ஆகியவற்றின் சோதனை கார்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளன. இந்த மாடல்களுக்கான சாத்தியமான ஃபேஸ்லிஃப்ட்களை வெளியாகலாம் என இவை உணர்த்துகின்றன. குறிப்பிடத்தக்க வகையில், இந்த என்ட்ரி-லெவல் டாடா கார்கள் ஒரு முழுமையான அப்டேட்டை பெற்று நான்கு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் 2025 ஆம் ஆண்டு அதற்கான சாத்தியங்கள் உள்ளன. ஃபேஸ்லிஃப்ட்டில் புதிய வசதிகள் சேர்க்கப்படலாம், உள்ளேயும் வெளியேயும் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்புகளைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தற்போதுள்ள பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் அப்படியே தக்க வைக்கப்படலாம். டியாகோ மற்றும் டிகோர் -ன் ஃபேஸ்லிஃப்ட்டை தொடர்ந்து அவற்றின் EV எடிஷன்களும் இதே போன்ற அப்டேட்களை பெற வாய்ப்புள்ளது.

    கவனிக்கவும்: படங்கள் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன

    இந்த டாடா கார்களில் எதை பார்க்க நீங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளீர்கள்? கீழே உள்ள கமென்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on Tata சீர்ரா EV

    2 கருத்துகள்
    1
    D
    david
    Dec 29, 2024, 10:04:03 AM

    Tata Sumo to compete Thar ROXX Tata Micro to compete MG Comet Tata 6 Seater to compete Kia Carens Tata Nano to compete Bajaj Qute Tata Winger to compete VW Microbus

    Read More...
      பதில்
      Write a Reply
      1
      H
      hari
      Dec 28, 2024, 1:47:47 PM

      I am waiting for sumo

      Read More...
        பதில்
        Write a Reply

        explore similar கார்கள்

        கார் செய்திகள்

        • டிரெண்டிங்கில் செய்திகள்
        • சமீபத்தில் செய்திகள்

        டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

        • பிரபலமானவை
        • உபகமிங்
        ×
        We need your சிட்டி to customize your experience