பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் அறிமுகமாகவுள்ள Maruti, Tata and Hyundai கார்கள்
மாருதி இ vitara க்காக ஜனவரி 08, 2025 09:06 pm அன்று kartik ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 50 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாருதி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நிறுவனம் ICE மற்றும் EV -கள் என இரண்டு கார்களையும் அறிமுகப்படுத்தும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய வாகன நிகழ்வுகளில் ஒன்றான பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 விரைவில் தொடங்க உள்ளது. பல நிறுவனங்கள் இந்திய சந்தையில் தங்கள் புதிய கார்களை வெளியிடும் அதே வேளையில் இந்தியாவில் உள்ள டாப் 3 கார் தயாரிப்பாளர்கள் எதையெல்லாம் அறிமுகம் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்பதை இங்கே பார்ப்போம். மாருதியின் முதல் EV -யை காட்சிக்கு வைக்கவுள்ளது. ஹூண்டாய் அதன் அதிகம் விற்பனையாகும் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை கொண்டு வருகிறது. டாடா நிறுவனம் 1990 -களில் பிரபலமான இருந்த காரின் பெயரை மீண்டும் கொண்டு வருகிறது. எக்ஸ்போ -வில் இந்த முறை அதிகமான எலக்ட்ரிக் கார்களை பார்க்க முடியும் என்று எதிர்பார்க்கிறோம்.
மாருதி இ விட்டாரா
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.22 லட்சம்
2023 ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி இ விட்டாரா ஆனது 'eVX' கான்செப்ட் ஆக முதலில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த ஆண்டு நிகழ்வில் மாருதியின் முதல் எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்கு தயாராக பதிப்பாக காட்சிக்கு வைக்கப்படலாம். மாருதி இதற்கு முன்னர் இரண்டு முறை EV -யின் டீஸரை வெளியிட்டுள்ளது. மேலும் இந்திய மாடலின் வடிவமைப்பும் உலகளவில் வெளியிடப்பட்ட சுஸூகி இ விட்டாராவை போன்றே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இ விட்டாரா ஆனது அதன் போட்டியாளர்களுக்கு எதிராக போட்டியிடும் வகையில் சிறப்பான வசதிகளுடன் வரும் என எதிர்பார்க்கிறோம். 49 kWh மற்றும் பெரிய 61 kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் குளோபல்-ஸ்பெக் காரில் உள்ள அதே பவர்டிரெய்ன் இந்திய பதிப்பிலும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 500 கி.மீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
எதிர்பார்க்கப்படும் விலை: 17 லட்சம்
ஹூண்டாய் சமீபத்தில் கிரெட்டா எலக்ட்ரிக் காரை பற்றிய சிறு அறிமுகத்தை வெளியிட்டது. டேஷ்போர்டு அதன் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) போலவே இருக்கும் என்றாலும் கூட, இரண்டையும் வேறுபடுத்துவதற்கு சிறிய வேறுபாடுகள் உள்ளன. கிரெட்டா எலக்ட்ரிக் -ல் ஹூண்டாய் இரண்டு பேட்டரி பேக்குகளின் தேர்வுடன் EV -யை வழங்குகிறது: ஒரு 42 kWh மற்றும் 51.4 kWh பேட்டரி பேக். 135 PS மற்றும் 171 PS ஐ அவுட்புட்டை கொடுக்கும் ஒரே ஒரு மோட்டார் செட்டப் மட்டுமே உள்ளது. நிலையான பேட்டரி பேக் ARAI கிளைம்டு 390 கி.மீ ரேஞ்சை கொண்டுள்ளது, அதே சமயம் பெரிய பேக் ARAI கிளைம்டு 473 கி.மீ ரேஞ்சை கொடுக்கிறது.
மேலும் பார்க்க: ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் அதன் ICE பதிப்பிலிருந்து கடன் வாங்கும் 10 வசதிகள்
டாடா சியரா EV மற்றும் ICE
சியரா EV எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 20 லட்சம்
சியாரா ICE எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.11 லட்சம்
டாடா சியரா EV மூன்றாவது முறையாக இப்போது பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் காட்சிக்கு வைக்கப்படும். 2020 ஆட்டோ எக்ஸ்போவில் ஒரு கான்செப்ட் ஆகவும் பின்னர் 2023 ஆண்டில் ஓரளவுக்கு வளர்ச்சியடைந்த காராகவும் காட்சிக்கு வைக்கப்பட்டது. EV ஆனது 60-80 kWh பேட்டரி மற்றும் 500 கி.மீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம் சியரா ICE காரின் விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை இது வரவிருக்கும் எக்ஸ்போவில் அதன் EV வெர்ஷன் உடன் காட்சிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம். 170 PS மற்றும் 280 Nm உற்பத்தி செய்யும் 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா ஹாரியரில் இருப்பதைப் போலவே 170 PS மற்றும் 350 Nm அவுட்புட் கொண்ட 2-லிட்டர் டீசல் இன்ஜின் உடனும் இது கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: இந்த ஜனவரி மாதம் மாருதி நெக்ஸா கார்களில் ரூ.2.15 லட்சம் வரை ஆஃபர்கள் கிடைக்கும்
டாடா ஹாரியர் EV
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 25 லட்சம்
டாடா ஹாரியர் EV -யின் தொடர்ச்சியான மூன்றாவது தோற்றமாக இது இருக்கும். இது ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் ஒரு கான்செப்ட் ஆக அறிமுகமானது மற்றும் 2024 ஆண்டில் மிகவும் மேம்பட்ட பதிப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டது. EV -ன் சோதனைக் கார்கள் சாலையில் பலமுறை படம் பிடிக்கப்பட்ட நிலையில் அதன் வடிவமைப்பு முன்பு காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் உடன் ஒற்றுமையைக் கொண்டிருக்கும் என தெரிகிறது. டாடா ஹாரியர் அதன் ICE வெர்ஷனை போலவே வசதிகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பவர்டிரெய்னுக்காக AWD மற்றும் 500 கி.மீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்ச் உடன் வரலாம். இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் மாருதி, ஹூண்டாய் மற்றும் டாடா வழங்கும் கார்களை பார்க்க நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்களா அல்லது வேறு ஏதேனும் காரை பார்க்க ஆர்வமாக உள்ளீர்களா ? கமென்ட் பகுதியில் எங்களுக்குத் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.